ஜலதோஷம் முதல் மூட்டுவலி வரை தீர்வு… ‘நாகேசர்’ பூ பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நாகேசர் தாவரம் மற்றும் பூவின் பல்வேறு பாகங்கள் நமக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன.

நாகேசர் தாவரம் மற்றும் பூவின் பல்வேறு பாகங்கள் நமக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன.

  • Share this:
செம்பருத்தி, ரோஜா, சாமந்தி உள்ளிட்ட பல்வேறு பூக்கள் அழகுடன் பல நன்மைகளை கொண்டிருக்கும் மலர்களாக அறியப்படுகிறது. அதே போல நாகேசர் (Nagkesar) பூ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா.? நாகேசர் பூ என்றால் என்ன, அது நமக்கு என்ன ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். Nagkesar-ன் அறிவியல் பெயர் Mesua ferrea என்பதாகும். இது நாகமரவினத் தாவரங்களில் ஒன்றாகும். இது நாகபூ அல்லது சிலோன் இரும்பு மரம் என்றும் குறிப்பிடப்படுகிறது. பச்சை மற்றும் சிவப்பு நிற இலைகள், வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் இதழ்களை கொண்ட நாகேசர் ஒரு தாவரயினமாகும்.

இதன் பூக்களுக்குள் மஞ்சள் குங்குமப்பூ நிற மகரந்தங்கள் கொத்தாக உருவாகின்றன. நாகேசர் அழகான மற்றும் மணம் கொண்ட பூக்களை உற்பத்தி செய்கிறது. இந்தியா, இலங்கை, நேபாளம், தாய்லாந்து, மலேசியா மற்றும் சுமத்ரா பகுதிகள் உட்பட ஏறத்தாழ அனைத்து ஆசிய நாடுகளிலும் நாகேசர் மரம் காணப்படுகிறது. இது பொதுவாக ஆற்றின் ஓரங்களில் பசுமையான காடுகளில் வளர்கிறது. இது 1500 மீட்டர் வரை வளரும் தன்மை உடையது.

நாகேசர் தாவரம் மற்றும் பூவின் பல்வேறு பாகங்கள் நமக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. நாகேசர் மரத்தின் இலைகள், பூக்கள் மற்றும் விதைகள் மூலிகை மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் நாகேசர் என்பது ஆயுர்வேதத்தில் மிகவும் பிரபலமான மூலிகையாகும். இது காய்ச்சல், வாந்தி, சிறுநீர் பாதை கோளாறுகள், ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பல உடல்நல கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. தவிர இது மற்ற மசாலாப் பொருட்களுடன் தூள் வடிவில் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தின் படி, நாகேசர் தாவரமானது வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றை சரிப்படுத்த பயன்படும் அற்புத மூலிகையாக இருக்கிறது.

இது ஒரு கசப்பான சுவை மற்றும் குளிர் தன்மையை கொண்டுள்ளது. நாகேசர் தாவரத்தின் முக்கிய ரசாயன கூறுகளில் மென்சுவோல், சிலோஸ்டெரால், கொழுப்பு அமிலங்கள், சைக்ளோஹாக்சோடின், மெசுவானிக் அமிலம் உள்ளிட்டவை அடங்கும். எனவே இது வலி நிவாரணி, அழற்சி எதிர்ப்பு, ஆண்டிபிரைடிக், ஆண்டிமைக்ரோபியல், காயத்தை விரைவாக குணப்படுத்துதல், பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் செரிமான பண்புகளை பெற்றுள்ளது. ஜலதோஷம் முதல் வயிறு வலி வரை பல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க நீங்கள் நாகேசர் இலைகளை வெவ்வேறு வடிவங்களில் பயன்படுத்தி பலன் பெறலாம்.

Must Read | தாய்ப்பால் குறைவாக சுரக்க என்ன காரணம்? சரி செய்வது எப்படி?

ஜலதோஷம்:

வரப்போகும் மழைக்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு ஜலதோஷம் ஏற்பட்டு சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படலாம். காய்ச்சலுக்கு சிகிச்சை பெற பல பாரம்பரிய மருந்துகள் இருந்தாலும், இது போன்ற சந்தர்ப்பங்களில் நாகேசர் தாவரத்தின் மூலம் பலன் பெறலாம். சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விடுபட, நாகேசர் இலைகளை விழுதாக அரைத்து எடுத்து கொண்டு நெற்றியில் தடவினால் சளி தொந்தரவுகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

வயிற்று கோளாறுகள்:

நவீனகால வாழ்க்கை முறையில் வயிற்று கோளாறுகள் பொதுவான ஒன்றாகிவிட்டது. அஜீரணம், அசிடிட்டி, வாயு, வயிற்று வலி மற்றும் வீக்கம் உள்ளிட்ட சிக்கல்களை அனுபவிக்கும் நேரத்தில் நாகேசர் பொடியை தேன் அல்லது சர்க்கரையுடன் சேர்த்து பயன்படுத்தினால் உடனடி நிவாரணம் பெறலாம்.

விக்கல்:

திடீரென ஏற்படும் வித்தியாசமான பிரச்சனைகளில் ஒன்று விக்கல். இதை நிறுத்துவது சற்று கடினமான ஒரு விஷயம் தான். ஆனால் விக்கலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றால் நாகேசர் பொடியை தேன் அல்லது சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அல்லது நாகேசர் பொடியை கரும்பு ஜூஸுடன் கலந்து சாப்பிடலாம்.

மூட்டு வலி:

நாககேசர் விதை எண்ணெயை (Nagkesar seed oil) மூட்டுகளில் அல்லது வலிக்கும் பகுதியில் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் இது மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரத்தபோக்கு கோளாறு:

நாகேசரின் மிகப்பெரிய ஆரோக்கிய நன்மைகளில் ஒன்று ரத்தப்போக்கை நிறுத்தும் திறன் ஆகும். பிட்டா ஏற்றத்தாழ்வு (Pitta imbalance) காரணமாக ஏற்படும் ரத்தப்போக்கு கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க இது முக்கியமாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது பைல்ஸ், மெனோராஜியா மற்றும் எபிஸ்டாக்ஸிஸ் சிகிச்சையில் உதவுகிறது.
Published by:Archana R
First published: