கடந்த சில நாட்களாக மதியம் 12 மணிக்கு மேல் அடிக்க வேண்டிய வெயில், பகல் நேரத்திலேயே கொளுத்தி வருகிறது. கோடை துவக்கமே வழக்கம் போல அதிக வெப்பத்துடன் இருப்பதால் இயற்கையின் கொடையான இளநீர், நுங்கு போன்றவற்றின் வியாபரம் சூடு பிடித்துள்ளது.
கோடை துவங்கி விட்டாலே இளநீர், நுங்கு, கரும்பு ஜூஸ் கடைகளுக்கு அடுத்தபடியாக தெருக்களில் அதிகம் காணப்படுவது தர்பூசணி கடைகள் தான். சிறு சிறு துண்டுகளாக வெட்டி கண்ணாடி பெட்டிக்குள்ளும், பிளாஸ்டிக் கப்பில் குச்சி ஒன்றை சொருகியும் வைக்கப்பட்டிருக்கும் அடர் சிவப்பு நிற தர்பூசணி துண்டுகள் நம்மை அந்த கடைகளை நோக்கி தானே இழுத்து செல்லும். மக்கள் மிகவும் விரும்பும் கோடைகால பழங்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது.
மேலும் இப்பழத்தில் உள்ள அதிக அளவு (90 %) தண்ணீர் கோடையில் இதை அதிகமாக மக்கள் விரும்பி சாப்பிட ஒரு காரணமாக உள்ளது. வெயில் காலத்தில் தாகம் மற்றும் உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி பழமானது பல நன்மைகளை அளிக்க கூடியது. நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான நன்மைகள் அடங்கிய அத்தியாவசிய வைட்டமின்கள் ,தாதுக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. தர்பூசணியில் அதிகம் காணப்படுகின்றன. குறைவான விலையில் ஏராளமான நன்மைகளை நமக்கு அள்ளித்தர கூடிய தர்பூசணி இதயம், சிறுநீரகம் உட்பட உடலின் முக்கிய உறுப்புகள் பலவற்றை காக்கும் தன்மை உடையது.
இந்த கோடை காலத்தில் நாம் தவறாது பெற தர்பூசணி பழத்தை அப்படியே அல்லது ஜூஸ் செய்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். வாட்டும் வெப்பத்தில் இருந்து நம்மை காத்து கொள்ள நம் அன்றாட உணவின் ஒரு பகுதியாக தர்பூசணியை மாற்றுவது முக்கியம்.
ரத்த அழுத்தத்தை பராமரிக்கும் : தர்பூசணியில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளதால் சீரான ரத்த ஓட்டத்தை பராமரித்து, ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தர்பூசணியில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளும் உடலின் ரத்த அழுத்தத்தை நார்மலாக வைத்திருக்க உதவுகின்றன.
செரிமானத்திற்கு உதவுகிறது : நார்ச்சத்துகளால் நிரம்பியுள்ள தர்பூசணி உடலின் செரிமான அமைப்பை மேம்படுத்தும். இப்பழத்தில் அதிகளவு நீர் இருப்பதால், தொடர்ந்து உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மலச்சிக்கலை சரி செய்கிறது.
கார்டியோ உடற்பயிற்சிகள் இதயத்தை நேரடியாக பாதிக்குமா..? ஏன் இதை தவிர்க்க வேண்டும்..?
ஆற்றல் தரும் : பொதுவாக வெயில் காலத்தில் உடல் எனர்ஜி விரைவில் போய் விடும் என்று எண்ணி நாம் வெளியே போவதை தவிர்ப்போம். ஆனால் தினமும் தவறாமல் ஒரு கிளாஸ் தர்பூசணி சாறு குடித்தால் உங்களது எனர்ஜி லெவலில் மிக பெரிய வித்தியாசத்தை உணர்வீர்கள். தர்பூசணியில் இருக்கும் லக்ட்ரோலைட்டுகள், கார்ப்ஸ் மற்றும் மினரல்கள் உங்கள் உடலை ஹைட்ரேட் செய்து உற்சாகப்படுத்தும் வேலையே செய்கின்றன.
இதயத்தை காக்கும் : இப்பழத்தில் அதிக அளவு உள்ள லைக்கோபின் என ஆண்டி ஆக்ஸிடென்ட் இதய பாதுகாப்பில் முக்கிய பங்கு அளிக்கும். தர்பூசணியில் காணப்படும் பொட்டாசியம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.
எடை குறையும் : தர்பூசணியில் அடங்கியுள்ள குறைந்த கலோரி மற்றும் மிக அதிக நீர்ச்சத்து உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. எனவே விரைவில் உடல் எடையை குறைக்க விரும்புவோர் தவறாமல் தினமும் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை தருகிறது.
அபாயத்தை குறைக்கும் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் : தர்பூசணியில் உள்ள லைகோபின் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றி என்பதால் புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளின் ஆபத்திலிருந்து உங்களை பாதுகாக்கும். இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். காயங்களை விரைவாக குணப்படுத்தும் ஆற்றலும் இந்த பலத்திற்கு இருக்கிறது.
கண்பார்வை : தர்பூசணி ஜூஸ் குடிப்பதால் அதிலுள்ள வைட்டமின் ஏ உங்கள் உடலுக்கு எரிசக்தி கிடைக்கும். இந்த வைட்டமின் உங்கள் கண்களுக்கு அவசியம். இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இருந்து நம்மை காக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Health Benefits, Summer tips, Watermelon