குளிர்காலம் என்பது பலருக்கும் பிடித்த ஒரு பருவநிலை எனலாம். கதகதப்பான தூக்கம், சில்லென சாரல் காற்று என நம்மை எப்போதும் சௌகரியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும். இந்த குளிருக்கு இதம் தரும் வகையில் ஜெர்க்கின், கம்பளிகள் என தற்காப்புக்காக பல விஷயங்களை செய்கிறோம்.
இவை அனைத்தும் வெளிப்புற உடலுக்குத்தானே தவிற உட்புற உறுப்புகளுக்கும் அந்த தற்காப்பு அவசியம். அதை நாம் உணவின் மூலமே அதிகபட்சம் செய்ய வேண்டியது இருக்கும். அந்த வகையில் ஆயுர்வேத நிபுணர் தீக்சா பவ்சார் இஸ்டாகிராம் பதிவில் பப்பாளி குளிர்காலத்திற்கு நல்லது என பரிந்துரைக்கிறார். அது ஏன் எனவும் விளக்குகிறார்.
டாக்டர் பாவ்சரின் கூற்றுப்படி, பப்பாளி ஆற்றல் நிறைந்தது மற்றும் ஆயுர்வேதத்தின் படி வட்டா மற்றும் கபாவை திறம்பட சமன் செய்கிறது. "இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் (பீட்டா கரோட்டின்) உள்ளது. இது தோல் நோய்களுக்கும், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி, ஈ மற்றும் ஏ போன்ற தாதுக்களுக்கும் உதவக்கூடியது. மேலும் இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும் ,” என்கிறார் டாக்டர் பவ்சார்.
பப்பாளியில் இருக்கும் கூடுதல் நன்மைகள் :
செரிமானத்தை மேம்படுத்துகிறது.
இருமல் மற்றும் சளிக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மாதவிடாய் வலியை குறைக்கிறது.
வீக்கத்தைக் குறைக்கிறது. வலி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் சிறந்தது.
ஆப்பிள் தோலை பயன்படுத்தி இத்தனை விஷயங்கள் செய்யலாமா..? நீங்களும் டிரை பண்ணுங்க..!
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
நச்சு நீக்கத்திற்கு சிறந்தது. கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
இதயத்திற்கு நல்லது.
நன்கு பழுத்த பப்பாளி மலச்சிக்கலுக்கு சிறந்தது.
பப்பாளி மட்டுமன்றி அதன் விதைகளையும் சாப்பிட்டால் கூடுதல் நன்மை என்கிறார் பவ்சார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Papaya