• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • டிமென்ஷியா vs அல்சைமர்: வித்தியாசம் என்ன? சிகிச்சை முறைகள் என்ன?

டிமென்ஷியா vs அல்சைமர்: வித்தியாசம் என்ன? சிகிச்சை முறைகள் என்ன?

டிமென்ஷியாவுக்கு முக்கியமான காரணம் என்ன என்று மருத்துவ நிபுணர்களால் சரிவர கண்டுபிடிக்க முடியவில்லை.

  • Share this:
பொதுவாக டிமென்ஷியா மற்றும் அல்சைமர் என்பது நினைவு இழப்பது (Memory Loss) மற்றும் நினைவு போதுமான அளவில் இல்லாமல் இருக்கும் நிலையில் இருப்பது ஆகும்.

உண்மையில் இரண்டு நோய்க்கும் இடையே பல்வேறு வித்தியாசங்கள் காணப்படுகின்றது. ஒரு நபர் செய்யக்கூடிய அன்றாட நடவடிக்கைகளை இது பாதிக்கும். டிமென்ஷியா பல்வேறு மன நிலைகளை ஏற்படுத்துகிறது. அல்சைமர் நோயில் இது ஒரு படிநிலையாகும்.

டிமென்ஷியா:

டிமென்ஷியா என்பது ஒரு குறிப்பிட்ட நோய் அல்ல. பலரால் அது தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நினைவு, சிந்தனை,கவனம், சிக்கலைத் தீர்க்கும் திறன்கள், மொழிப் பயன்பாடு மற்றும் காட்சி உணர்வு போன்ற ஒரு நபரின் அறிவாற்றல் செயல்பாட்டை பாதிக்கிறது.

‘அல்சைமர்’ நோய் டிமென்ஷியாவின் மிகவும் பொதுவான வடிவம் ஆகும். டிமென்ஷியாவை பல்வேறு வகைகளாக பிரிக்கலாம். அவை லூயி பாடி டிமென்ஷியா, ஃப்ரண்டோடெம்போரல் டிமென்ஷியா, வாஸ்குலர் டிமென்ஷியா, பார்கின்சன் நோய் டிமென்ஷியா, Creutzfeldt - ஜாகோப் நோய், ஹண்டிங்டன் நோய், மிக்ஸட் டிமென்ஷியா ஆகும்.

Must Read | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?

டிமென்ஷியா- அறிகுறிகள்:

டிமென்ஷியாவுக்கு முக்கியமான காரணம் என்ன என்று மருத்துவ நிபுணர்களால் சரிவர கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு சில விஷயங்கள் காரணமாக இருக்கலாம் என்கின்றனர். பெரும்பாலும் வயதானவர்களை இது பாதிக்கிறது. 85 வயதுக்கும் மேற்பட்ட பலருக்கு இது ஏற்படுகிறது.

டிமென்ஷியா முதுமை தொடர்பானது அல்ல. டிமென்ஷியாவின் முதல் அறிகுறி மூளையை பாதிப்பதாகும். இந்த பாதிப்பு லேசானது முதல் கடுமையானதாக இருக்கலாம். கவலை, மனச்சோர்வு, எதன் மீதும் ஆர்வமில்லாமல் இருப்பது, மீண்டும் மீண்டும் ஒரே கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பது, மனநோய், தூக்க கலக்கத்தில் இருப்பது, இயல்பான நடத்தைகள் மாறுதல் என பல பிரச்சனைகள் உருவாக்கலாம்.

அல்சைமர்:

அல்சைமர் நோய் டிமென்ஷியாவின் ஒரு வடிவம் ஆகும். ஆனால், டிமென்ஷியா உள்ள அனைவருக்கும் அல்சைமர் இல்லை என்பது முக்கியமான விஷயமாகும். இந்த வகை டிமென்ஷியா மூளையில் அசாதாரண புரதங்கள் (ப்ரோட்டீன்கள்) குவிவதால் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது. புரத மூலக்கூறுகள் மூளையில் சிக்கல்களை உருவாக்குகின்றது. இவை தொடர்பு கொள்ளும் திறனை பாதிக்கின்றன. அவை மெதுவாக செல்களை சேதப்படுத்தத் தொடங்குகின்றது.

Must Read | ‘நீர்ச்சத்து எனும் உயிர்ச்சத்து’- உடம்பில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க இவற்றை செய்தால் போதும்!

அல்சைமர்- அறிகுறிகள்:

மூளை சேதமடைய ஆரம்பித்து நீண்ட காலத்திற்குப் பிறகு அல்சைமர் நோயின் அறிகுறிகள் தோன்றும். ஒருவர் உயிருடன் இருக்கும்போது அல்சைமர் நோயை முழுமையான துல்லியத்துடன் கண்டறிய முடியாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மனநிலை மற்றும் நடத்தையில் மாற்றங்கள்,நேரம் மற்றும் இடங்கள் குறித்து குழப்பம்,சொற்களை சரியாக உச்சரிக்காமல் இருப்பது,நடப்பதில் சிரமம் என பல்வேறு அறிகுறிகள் காணப்படும்.

டிமென்ஷியா மற்றும் அல்சைமர்- சிகிச்சை:

டிமென்ஷியாவை குணப்படுத்தவோ அல்லது அந்த நிலையின் அறிகுறிகளை மாற்றவோ முடியாது. முழுமையாக சிகிச்சை அளிக்கப்படும் போது தான், இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். சரியான மருந்துகள்,சூரிய ஒளி,அறிவாற்றல் பயிற்சிகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் என சிகிச்சைகளை மருத்துவர் கண்காணிப்போடு செய்யும் போது எளிதில் குணமடையலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: