• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மார்பு பகுதியில் வலி இருந்தால் இதய பாதிப்பா அல்லது வாயுப் பிரச்னையா..? வேறுபாடுகளும்..அறிகுறிகளும்...

மார்பு பகுதியில் வலி இருந்தால் இதய பாதிப்பா அல்லது வாயுப் பிரச்னையா..? வேறுபாடுகளும்..அறிகுறிகளும்...

இதய பாதிப்பா அல்லது வாயுவா..?

இதய பாதிப்பா அல்லது வாயுவா..?

உங்கள் வயிற்றில் அல்லது உங்கள் பெருங்குடலின் இடது பகுதியில் வாயு குவிந்திருந்தால் மார்பில் வலியை உணரலாம்.

  • Share this:
சில நேரங்களில் இதயத்தில் சுருக்கு சுருக்கென்று குத்துவதுபோல் இருக்கும் அல்லது கடுமையான வலி இருக்கும். அந்த நேரத்தில் பலர் இதய பாதிப்பாக இருக்குமோ என நினைத்து பயந்துவிடுவார்கள். சிலர் இதய பாதிப்பே இருந்தாலும் வாயுப் பிரச்னையாக இருக்குமோ என சாதாரணமாக விட்டுவிடுவார்கள். இந்த இரண்டு அனுமானங்களும் மிகவும் தவறான ஒன்று. நீங்களாக கற்பனை செய்துகொள்வதை விட வேறுபாடுகளை தெரிந்துகொள்ளுங்கள். உரிய சிகிச்சை பெறுங்கள்.

வாயுப் பிரச்னையின் அறிகுறிகள் : உங்கள் வயிற்றில் அல்லது உங்கள் பெருங்குடலின் இடது பகுதியில் வாயு குவிந்திருந்தால் மார்பில் வலியை உணரலாம். நீங்கள் அதிகமாக காற்றை விழுங்கும்போது வாயு உங்கள் செரிமானப் பாதையில் சிக்கிக்கொள்ளும். அதுமட்டுமன்றி மார்புக்கு அருகில் வாயு வலியை உணர உணவு தொடர்பான பிற காரணங்களும் உள்ளன.

காரணங்கள் :

உணவு சகிப்புத்தன்மை செரிமான அமைப்பை சீர்குலைத்து, வாயுவை உருவாக்கும்.

செயற்கை இனிப்பு உணவுகள் வாயு வலி உள்ளிட்ட செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்.

சோடா போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்களில் உள்ள கார்பன் டை ஆக்சைடு வாயு உங்கள் மார்பில் காற்று குமிழும் உணர்வை ஏற்படுத்தும். இதனால் வலியை உணரலாம்.

நிறைய நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதால், உங்கள் குடலில் அதிக நார்ச்சத்து ஏற்பட்டு, நீண்ட காலத்திற்கு வாயு உருவாகிறது.

ஒருவேளை ஃபுட் பாய்சனாக இருந்தால் உங்கள் இதயத்திற்கு அருகில் வாயு வலியை ஏற்படுத்தும். அதோடு காய்ச்சல், குமட்டல் அல்லது வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது மலத்தில் இரத்தம் போன்ற அறிகுறிகளையும் உண்டாக்கும்.



உணவு மற்றும் பானம் தவிர, வாயு வலிக்கு சில உடல் நிலைப் பிரச்னைகளும் காரணமாக இருக்கலாம். அவை...

நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணத்தால் வயிற்று அமிலம் உணவுக்குழாயில் கசிந்து அதிகமான மார்பு வலியை உண்டாக்கும்.

gastroesophageal reflux disease (GERD) என்றும் அழைக்கப்படும் ஆசிட் ரிஃப்ளக்ஸ், உங்கள் உணவுக்குழாயில் காற்றை அடைத்துவிடும். இது உங்களுக்கு ஆன்சைட்டி, இதய துடிப்பில் ஏற்ற இறக்கம், எரிச்சல் உணர்வை தரலாம்.

உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கும் இந்த 10 விஷயங்களை உடனடியாக கைவிடுவது நல்லது..!

பித்தப்பை நோய் அதிகப்படியானால் வாயு உருவாகி மார்பில் வலியை ஏற்படுத்தும். இந்த பிரச்சனையால் நீங்கள் பசியின்மை, குமட்டல், குளிர் மற்றும் வெளிறிய மலம் ஆகிய அறிகுறிகளை உணர்வீர்கள்.

அழற்சி குடல் நோய் (IBD) செரிமான அமைப்பில் வாயு உருவாவதை ஏற்படுத்தும். அதிகப்படியான வாய்வு, கிரோன் நோய் மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சியானது அடி வயிற்று வலியை உண்டாக்கும். வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் மற்றும் குமட்டலை ஏற்படுத்தும்.



வாயு உணர்வுக்கும் மாரடைப்புக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. அது வாயுவாக இருக்கும்போது, அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

  • வயிறு வீக்கம்

  • வயிறு மந்த நிலை

  • வயிறு இறுக்கிப் பிடித்து வலி

  • பின்புறம் வழியாக வாயுவைக் கடத்தல்

  • திடீரென கடுமையான ஒரு வலி வந்து நிற்கும்


அது நெஞ்செரிச்சல் என்றால், சாப்பிட்டவுடன் நடந்தால் சரியாகும். சில மணிநேரங்களுக்குப் பிறகு தூக்கத்திலிருந்து உங்களை திடீரென எழுப்பலாம். எரியும் வயிற்று அமிலம் உங்கள் வயிற்றில் இருந்து தொண்டை வரை வருவதை நீங்கள் உணர்வீர்கள். உங்கள் வாயிலும் புளிப்பான சுவை அல்லது புளிப்பான மணத்தை உணர்வீர்கள்.

மாரடைப்பின் அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

மார்பு பகுதியில் வலி அல்லது எரியும் உணர்வு இருந்தால், அது வாயுவை விட அதிகமாக இருக்கலாம். பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் கடுமையான வாயு வலியுடன் ஏற்படுகிறதா என்று சோதிக்கவும்.



அதிகமாக வியர்வை, இதய துடிப்பு மற்றும் அதிகரித்த இதய துடிப்பு
மார்பில் வலி, அழுத்தம் அல்லது அழுத்தும் வலி, லேசான தலைச்சுற்றல், குமட்டல் அல்லது வாந்தி, ஒன்று அல்லது இரண்டு கைகளிலும் வலி, இடது தோளில் வலி, கழுத்து அல்லது முதுகில் வலி , வயிற்றில் வலி , தொண்டை அல்லது தாடையில் வலி , மூச்சு திணறல் , திடீர் மற்றும் விவரிக்க முடியாத சோர்வு , விவரிக்க முடியாத பதட்டம் , உடல் பலவீனம் இதுபோன்ற அறிகுறிகளையும் நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவ சிகிச்சை அவசியம்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: