Home /News /lifestyle /

கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி ஏன் முக்கியம்..? மருத்துவர்கள் மற்றும் ஆய்வுகளின் கருத்து..

கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி ஏன் முக்கியம்..? மருத்துவர்கள் மற்றும் ஆய்வுகளின் கருத்து..

வழக்கமான தடுப்பூசிகளால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி காலப்போக்கில் குறையும். இந்தியாவிலும் பிற இடங்களிலும் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள், தடுப்பூசி போடப்பட்டவர்களின் ஆன்டிபாடிகள் குறைந்துவிட்டதாக தெரிவிக்கின்றன.

வழக்கமான தடுப்பூசிகளால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி காலப்போக்கில் குறையும். இந்தியாவிலும் பிற இடங்களிலும் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள், தடுப்பூசி போடப்பட்டவர்களின் ஆன்டிபாடிகள் குறைந்துவிட்டதாக தெரிவிக்கின்றன.

வழக்கமான தடுப்பூசிகளால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி காலப்போக்கில் குறையும். இந்தியாவிலும் பிற இடங்களிலும் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள், தடுப்பூசி போடப்பட்டவர்களின் ஆன்டிபாடிகள் குறைந்துவிட்டதாக தெரிவிக்கின்றன.

கடந்த திங்கள் முதல் இந்திய அரசாங்கம், கோவிட்-19 தடுப்பூசியின் "முன்னெச்சரிக்கை" டோஸை, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கொமொர்பிடிட்டிகள் (அதாவது ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களை கொண்டவர்கள்), சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் உட்பட எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் குழுக்களுக்கு வழங்கத் தொடங்கியது.


இந்தியாவின் நோய்த்தடுப்புத் திட்டத்தில் இரண்டு முக்கிய தடுப்பூசிகளாக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் இரண்டு டோஸ்களாக கொடுக்கப்படுகின்றன, அடுத்த கட்டமாக "தகுதியானவர்களுக்கு" மூன்றாவது டோஸ் ஆக "பூஸ்டர்" அல்லது "முன்னெச்சரிக்கை" டோஸ் செலுத்தப்படவுள்ளது.


கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை ஒட்டுமொத்தமாக செலுத்தப்பட்ட, கிட்டத்தட்ட 150 கோடி டோஸ்களில் 63 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். பூஸ்டர் என்கிற பெயரின் கீழ் கிடைக்கும் மூன்றாவது டோஸ் ஆனது முதல் இரண்டு தடுப்பூசிகளுடன் ஒற்றுப்போக வேண்டும். அதாவது நீங்கள் இரண்டு டோஸ் கோவிஷீல்டைப் பெற்றிருந்தால், மூன்றாவது ஷாட்டும் அதுவாகவே இருக்க வேண்டும் அல்லது கோவாக்சினாக இருந்தால் பூஸ்டர் டோஸும் அதுவாகவே இருக்க வேண்டும். மூன்றாவது டோஸிற்கு வேறு தடுப்பூசியைப் பயன்படுத்துதல் பற்றிய கூடுதல் தரவுகள் கிடைத்த பின்னரே குறிப்பிட்ட பன்முக அணுகுமுறை பற்றி அறிவிக்கப்படும் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது.

பூஸ்டர்களின் நோக்கம் என்ன?

வழக்கமான தடுப்பூசிகளால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி காலப்போக்கில் குறையும். இந்தியாவிலும் பிற இடங்களிலும் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள், தடுப்பூசி போடப்பட்டவர்களின் ஆன்டிபாடிகள் குறைந்துவிட்டதாக தெரிவிக்கின்றன. இந்த சரிவு ஆன்டிபாடிகளில் மட்டுமல்ல, மெமரி டி-செல்களிலும் கூட நிகழ்கிறது. இதை சரி செய்யவே பூஸ்டர் டோஸ் வழங்கப்படுகிறது, இது நோய் எதிர்ப்பு சக்தியை நீண்ட காலத்திற்கு பராமரிக்க உதவும்.



அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) மற்றும் யுனைடெட் கிங்டமின் மருந்துகள் மற்றும் உடல்நல தயாரிப்புகள் ஒழுங்குமுறை நிறுவனம் (எம்.ஹெச்.டி.ஏ) போன்ற சில நாடுகளில் உள்ள கட்டுப்பாட்டாளர்கள், பூஸ்டர் டோஸின் தரவுகளை ஆராய்ந்து ஒப்புதல்களை வழங்கியுள்ளனர். பூஸ்டர் டோஸ் ஆனது நல்ல நோயெதிர்ப்பு நினைவாற்றல் மற்றும் கடுமையான நோயிலிருந்து நீண்டகால பாதுகாப்பை பரிந்துரைப்பதாக உற்பத்தியாளர் பாரத் பயோடெக் தனது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

சாதாரண சளி, காய்சலுக்கும் கொரோனா அறிகுறிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன..? அதை எவ்வாறு கண்டறிவது..?

அனைத்து வகையான தடுப்பூசிகளுக்கும் ஒரே பூஸ்டரை பயன்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்வது ஏன்?

இந்தியாவின் சிறந்த தடுப்பூசி நிபுணர்களில் ஒருவரான டாக்டர் ககன்தீப் காங் கருத்துப்படி, வேறுபட்ட தடுப்பூசியைப் பயன்படுத்தலாம் என்று முடிவெடுக்க போதுமான தரவு கிடைக்கும் வரை, முந்தைய இரண்டு டோஸ்களைப் போலவே அதே வகை தடுப்பூசியை பூஸ்டாராக வழங்குவது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்கிறார். இந்த தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தின் (EUA) கீழ் உள்ளன, அதாவது இவை முழுமையாக உரிமம் பெறவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதுபற்றி, முன்னணி வைராலஜிஸ்ட் ஆன டாக்டர் வி ரவி கூறுகையில், நினைவகம் தான் நோயெதிர்ப்பு மண்டலத்தின் அடிப்படை பண்பு. அதே வகையான தடுப்பூசியை பூஸ்டாராக செலுத்தினால் தான் நோயெதிர்ப்பு நினைவாற்றல் அதிகரிக்கும்.” என்கிறார்.



கோவிட்-19 தடுப்பூசிகளின் கலவையை பற்றிய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என்கிற இரண்டு தடுப்பூசிகளையும் கலப்பது தொடர்பான எந்தவொரு தெளிவான தரவும் இல்லை. அதுசார்ந்த தரவை உருவாக்க மற்றும் பகுப்பாய்வு செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜியின் (ஏஐஜி) சமீபத்திய பைலட் ஆய்வின்படி, கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் கலவையின் பாதுகாப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட்டது அதன் வழியாக தடுப்பூசிகளை கலப்பது பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டது.

பூஸ்டர் டோஸுக்கு பெரும் தேவை இருக்கும் என்று கருதி, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியும், கோவிட்-19 தடுப்பூசி டோஸ்களை கலப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இது சார்ந்த முடிவுகள் இந்த ஆண்டு பிப்ரவரிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விநியோகத்தில் சிக்கல்கள் இருக்குமா?

"இந்த 'மிக்ஸ் அண்ட் மேட்ச்' தடுப்பூசி எந்த அளவில் பயனளிக்கும் என்பது பற்றிய தரவுகள் மற்றும் அதுசார்ந்த ஆய்வுகள் ஒருபக்கம் இருக்க, விநியோக சங்கிலி, மற்றும் பூஸ்டர் டோஸின் கிடைக்கும்தன்மையில் சிக்கல்கள் இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.



கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை வழங்கப்பட்ட கிட்டத்தட்ட 150 கோடி தடுப்பூசி டோஸ்களில், 130 கோடிக்கும் அதிகமானவை கோவிஷீல்டு (அதாவது ஒவ்வொரு 6 நபர்களில் 5 நபர் இதை பெற்றுள்ளார்) மற்றும் 19 கோடிக்கு மேல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கான தடுப்பூசியாக கோவாக்சின் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதால், இந்தியாவில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட மக்களின் பெருவாரியான எண்ணிக்கையானது பற்றாக்குறைக்கு வழிவகுக்கலாம் மற்றும் தடுப்பூசிகளை "கலப்பதற்கான" வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Corona Vaccine, CoronaVirus

அடுத்த செய்தி