Home /News /lifestyle /

காலையில் சீக்கிரம் எழுந்தால் நீங்கள் இத்தனை விஷயங்களை செய்யலாமா..?

காலையில் சீக்கிரம் எழுந்தால் நீங்கள் இத்தனை விஷயங்களை செய்யலாமா..?

மாதிரி படம்

மாதிரி படம்

காலையில் சீக்கிரமாக எழுந்து கொள்வதை பழக்கப்படுத்திக் கொண்டால் உங்கள் ஆரோக்கியம் முதல் வாழ்க்கை முறை பல மாற்றங்கள் ஏற்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சூரிய உதயத்துக்கு முன்பு, அதிகாலையில் எழும் பழக்கம் இல்லை என்றால் கூட காலையில் சீக்கிரம் எழுவது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமானது. பலருக்கும் அதிகாலை நேரத்தில்தான் ஆழமாக, தொந்தரவு இல்லாமல் உறங்குவது போல இருக்கும். அதனால் தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு எழுவது மிகவும் கடினமாக உணர்வார்கள். ஆனால், காலையில் சீக்கிரமாக எழுந்து கொள்வதை பழக்கப்படுத்திக் கொண்டால் உங்கள் ஆரோக்கியம் முதல் வாழ்க்கை முறை பல மாற்றங்கள் ஏற்படும். சிக்கிரம் எழுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன.

எல்லா செயல்களையும் திட்டமிட்டு, மற்றவர்களை விட நீங்கள் கொஞ்சம் அட்வான்ஸாக இருப்பீர்கள்

காலையில் சீக்கிரம் எழுந்து கொள்வதன் முதல் பலன், நீங்கள் அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளை அழகாகத் திட்டமிடலாம் அல்லது அட்டவணை போட்டு செயல்படுத்தலாம். ஒரு விஷயத்தை செய்து முறையாக செய்யும் பொழுது நீங்கள் நிறைவான உணர்வைப் பெறுவீர்கள். உடற்பயிற்சி செய்தாலும் சரி, அல்லது உங்கள் பணிகளை விரைவாகத் தொடங்கினாலும் சரி காலையில் சீக்கிரம் எழுந்து திட்டமிட்டபடி அதனை செய்வது உங்களை பாசிட்டிவ் எனர்ஜி அளிக்கும்.

வாழ்க்கை குறிக்கோள்களை எளிதாக அடையலாம்

உலகில் உள்ள பல்வேறு வெற்றியாளர்களும் அதிகாலையில் சீக்கிரம் எழும் பழக்கத்தைக் கொண்டவர்கள்தான். எல்லோருக்கும் முன் எழுவது என்பது எல்லோருக்கும் முன் உங்கள் வாழ்வின் இலக்குகளை லட்சியங்களை அடைவது என்று அழகான ஒரு தொடர்பு இருக்கிறது.



உங்களுக்காக தனிப்பட்ட நேரத்தை ஒதுக்குவது எளிது

காலில் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கும் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஓய்வு எடுக்க அல்லது நீங்கள் விரும்புவதை செய்வதற்காக நேரம் ஒதுக்குவது மிக மிகக் குறைவு. சின்னஞ்சிறு விஷயங்களுக்கு கூட உங்களால் நேரம் ஒதுக்க முடியாமல் போகலாம். சீக்கிரம் எழுந்து கொள்வது, கூடுதல் நேரத்தை அளிக்கும். இதனால், நீங்கள் விரும்பிய புத்தகம் படிக்கலாம் அல்லது தொலைக்காட்சி பார்க்கலாம். எனவே நீங்கள் காலையில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் முன்னதாக எழும்போது உங்கள் மற்ற வேலைகளை திட்டமிட்டு விரைவாக முடிப்பதால் உங்களுக்கு நீங்கள் விரும்பும் வேலைகளை செய்வதற்கான நேரம் எளிதாகக் கிடைக்கும்.

சாப்பிட்ட பிறகு வயிறு வீக்கத்தால் அவஸ்தைபடுகிறீர்களா..? தவிர்க்க இந்த 10 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க

 

அடுத்தடுத்து வேலைகளை தாமதப்படுத்திக் கொண்டே செல்ல மாட்டீர்கள்

பல நேரம் நேரமின்மையால் ஒரு சில வேலைகள் தொடர்ந்து செய்ய முடியாமல் அப்படியே நிலுவையில் இருக்கும். உதாரணமாக வீட்டை சுத்தம் செய்வது அல்லது துணிகளை மடித்து வைப்பது போன்ற சின்ன சின்ன வேலைகள் கூட நீண்டநாட்களுக்கு முடியாமல் அப்படியே இருக்கும். உங்களுக்கு ஒரு நாளில் 15 முதல் 20 நிமிடம் கூடுதலாகக் கிடைத்தால் கூட இந்த வேலைகளை செய்து விடலாம் என்று நீங்கள் மிகவும் சலிப்பாக உணரக்கூடும். எனவே, காலையில் சீக்கிரம் எழுவது எல்லா வேலைகளையும் சரியாக செய்து முடிக்கும்.



ஆரோக்கியமான தூங்கும் பழக்கத்தை உருவாக்கலாம்

காலையில் தாமதமாக எழுவதற்கு முக்கியமான காரணம் நள்ளிரவை கடந்து தூங்க செல்வது தான். நீங்கள் காலை அல்லது சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து கொள்ளும் பழக்கத்தை மேற்கொண்டால் இரவில் நிச்சயமாக சீக்கிரமாக உறங்கச் செல்ல வேண்டும். தினமும் ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வது உங்கள் தூக்கத்தை மேம்படுத்தும். தூக்கம் சீராகும் போது உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Healthy Lifestyle, Morning Routine

அடுத்த செய்தி