ஒவ்வொரு பருவமும் ஒரு புதிய சவால்களைக் கொண்டுதான் வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, குளிர்காலம் வரலாறு காணாத காற்று மாசுபாட்டைச் சந்தித்தது. காற்றின் தரம் தொடர்ச்சியாக சமீப காலமாக கடுமையான, மிக மோசமான மற்றும் அபாயகரமான வகைகளில் தொடர்கிறது. மேலும், இதில் விஷயம் என்னவென்றால், கொரோனா வைரஸ் தொற்றுநோய் எப்போது முடிவடையும் என்பது தெரியாத ஒன்றாக உள்ளது. நமது ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான நமது முயற்சிகளை மேம்படுத்துவது காலத்தின் தேவை. பருவகால உணவு இந்த கவலையை தீர்க்க மிகவும் உதவியாக இருக்கும்.
மழைக்காலத்தில் சீசன் மற்றும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஒரு பழம் சீத்தாப்பழம். இது வைட்டமின் ஏ மற்றும் சி, இரும்பு, பொட்டாசியம், தாமிரம் மற்றும் மெக்னீசியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியமாக விளங்குகிறது.
மழைக்காலத்தில் சீத்தாப்பழம் சாப்பிட காரணங்கள்:
நீங்கள் அடிக்கடி உடலில் அமிலத்தன்மையுடன் போராடும் ஒருவராக இருந்தால், சீத்தாப்பழம் உங்களுக்கான பழம். இதை தொடர்ந்து சாப்பிடுவது உங்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது இங்கே…
மஞ்சள், இஞ்சி மற்றும் கீரை வகைகளும் மழைக்காலத்தில் நீங்கள் உட்கொள்ள வேண்டிய மற்ற சிறந்த உணவுகள். உங்கள் உணவில் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள், உள்நாட்டில் கிடைக்கும் பருப்பு வகைகள், கொட்டை வகைகள் மற்றும் விதைகள் நிறைந்திருப்பதை உறுதி செய்யவும். இவற்றுடன், நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் தூக்கத்தை சரிபார்க்கவும், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதலை முற்றிலும் தவிர்க்கவும், குறிப்பாக, முடிந்தவரை மன அழுத்தத்தை தவிர்க்கவும் என்கின்றனர் நிபுணர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fruits, Health Benefits, Healthy Life