World Chocolate Day | வெள்ளை சாக்லேட்டும்… உடல் எடையும்…- ஆய்வு சொல்லும் தகவல்!

தினமும் காலையில் கொஞ்சமாக வெள்ளை சாக்லேட் சாப்பிடுவது எடை குறைப்பை ஊக்குவிக்க உதவும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தினமும் காலையில் கொஞ்சமாக வெள்ளை சாக்லேட் சாப்பிடுவது எடை குறைப்பை ஊக்குவிக்க உதவும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

  • Share this:
டார்க் சாக்லேட் உடல் எடையை குறைக்க உதவும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். டார்க் சாக்லேட் பசியைக் குறைக்கும் திறன் கொண்டுள்ளது என்பதால் எடை குறைப்பை ஆதரிக்கக்கூடும் என்பதை உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் சுட்டி காட்டுகின்றன. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் டார்க் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் பசியை கட்டுப்படுத்தும் என்பது ஆய்வு பூர்வமாக நிரூபணமாகி உள்ளது. ஆனால், வெள்ளை சாக்லேட்டுகள் கூட உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தினமும் காலையில் கொஞ்சமாக வெள்ளை சாக்லேட் சாப்பிடுவது உடல் எடை குறைப்பை ஊக்குவிக்க உதவும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது மாதவிடாய் நின்ற பெண்கள் கொண்ட ஒரு குழுவினரிடம் நடத்தப்பட்டுள்ளது. FASEB ஜர்னலில் வெளிவந்த இந்த ஆய்வு முடிவில், வெள்ளை சாக்லேட் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவையும் நிர்வகிக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ப்ரிகாம் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஸ்பெயினில் உள்ள முர்சியா பல்கலைக்கழக வல்லுநர்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். மேலும், இந்த ஆய்வில் மாதவிடாய் நின்ற 19 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு காலையில் 100 கிராம் சாக்லேட் சாப்பிட கொடுக்கப்பட்டது. அதாவது காலையில் எழுந்தவுடன் ஒரு மணி நேரத்திற்குள் அல்லது இரவில் படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்குள் என பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. இறுதியாக இந்த ஆய்வின் முடிவில் நான்கு சுவாரஸ்யமான விஷயங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.,

காலை அல்லது இரவில் வெள்ளை சாக்லேட் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

காலையிலோ அல்லது மாலையிலோ வெள்ளை சாக்லேட் சாப்பிடுவது பசியை கட்டுப்படுத்துவது, நல்ல தூக்கம் மற்றும் குடல்-ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

காலையில் வெள்ளை சாக்லேட் உட்கொள்வது கொழுப்பை எரிக்கவும், இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் உதவும்.

மாலை அல்லது இரவு நேரத்தில் வெள்ளை சாக்லேட் சாப்பிட்டால் வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொழுப்பை எரிக்க வெள்ளை சாக்லேட் எவ்வாறு உதவுகிறது?:

இதுகுறித்து விளக்கிய இந்த ஆய்வின் ஆசிரியர், டாக்டர் ஃபிராங்க் ஏ.ஜே.எல். ஸ்கீயர், என்ன சாப்பிட வேண்டும், அதனை எப்போது சாப்பிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உடல் எடையை கட்டுப்படுத்த நினைத்தால் நாம் என்ன மாதிரியான உணவை சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதன்படி வெள்ளை சாக்லேட் சாப்பிடலாம் என அவர் பரிந்துரைத்துள்ளார். வெள்ளை சாக்லேட் சாப்பிட்டவர்களின் உடல் எடை அதிகரிக்கவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. உண்மையில், ஆய்வில் ஈடுபட்டவர்கள் பசி சீரான குறைவைக் கண்டனர். எனவே, எவ்வித சந்தேகமும் இன்றி வெள்ளை சாக்லேட்டை சாப்பிடலாம். ஆனால் அளவாகதான் சாப்பிட வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
Published by:Archana R
First published: