Home /News /lifestyle /

பெண்கள் மிக அதிகமாக உடற்பயிற்சி செய்தால் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும்!

பெண்கள் மிக அதிகமாக உடற்பயிற்சி செய்தால் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும்!

women fertility

women fertility

Women Fertility | பெண்கள் வாரம் ஒன்றுக்கு 7 மணி நேரத்திற்கும் மிகுதியாக உடற்பயிற்சி செய்தார்கள் என்றால், அவர்களது கர்ப்பப்பையில் பிரச்சினை ஏற்படக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உடற்பயிற்சிகள் உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல, கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி மிகவும் அதிகமாக உடற்பயிற்சி செய்தோம் என்றால், அது நமக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். குறிப்பாக, பெண்களுக்கு இது பல தொந்தரவுகளை கொடுக்கும்.

பொதுவாக பெண்களின் உடல் மிகவும் மென்மையானது. அதிக பலம் இல்லாத உடல்வாகு அவர்களுக்கு இருக்கிறது. இத்தகைய சூழலில், மிக அதிகமாக உடற்பயிற்சி செய்தோம் என்றால், அது உடலுக்கு தேவையற்ற சுமையை கொடுப்பதாக அமைந்துவிடும். உடலில் எதிர்கொள்ளும் ஸ்ட்ரெயின் (அதிக சிரமம்) காரணமாக பெண்களின் இனப்பெருக்க நலன் பாதிக்கப்படலாம்.

பெண்கள் வாரம் ஒன்றுக்கு 7 மணி நேரத்திற்கும் மிகுதியாக உடற்பயிற்சி செய்தார்கள் என்றால், அவர்களது கர்ப்பப்பையில் பிரச்சனை ஏற்படக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனினும், கட்டுப்பாடான அளவில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நன்மை பயக்கும். அதாவது, வாரம் ஒன்றுக்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக மற்றும் 5 மணி நேரத்திற்கு உள்ளாக உடற்பயிற்சி செய்தால், கருத்தரிக்கும் தன்மை மேம்படும்.



ஹை இன்டென்சிட்டி இன்டர்வல் டிரெய்னிங்

அதாவது குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து உடலுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய பயிற்சிகள் ஆகும். 30 அல்லது 60 நொடிகள் இடைவெளியில் அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொள்வது உடலுக்கு சிக்கலை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு பெடல்ஸ், ஸ்பிரிண்ட்ஸ், ஸ்குவாட் ஜம்ப் போன்றவை இதில் அடங்கும்.

Also Read : வீட்டில் யாருக்காவது இதயநோய் உள்ளதா..? எதிர்கால ஆபத்தை தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்..!

பவர் லிஃப்டிங்

உடலுக்கு வலுவூட்டுவதற்காக மிக அதிகமான எடையை தூக்குவது பவர் லிஃப்டிங் ஆகும். பொதுவாக பெண்கள் மிக அதிகமான எடையை தூக்கக் கூடாது. அதிக எடையை தூக்கும்போது அடிவயிற்றில் அதிக அழுத்தம் ஏற்படும். இதன் விளைவாக கர்ப்பப்பைக்கு காயம் ஏற்படக் கூடும்.

Also Read : ஒற்றைத் தலைவலி வருவது எதனால்? வகைகள் மற்றும் அறிகுறிகள் என்னென்ன? 

கருத்தரிப்பு சிக்கல் ஏன் ஏற்படுகிறது

குறைவான எடை கொண்ட ஒரு பெண், மிக அதிகமான உடற்பயிற்சிகளை கடும் சிரமத்தோடு மேற்கொள்ளும்போது, கர்ப்பப்பையில் இருந்து வெளியேறும் கருமுட்டைகள் பாதிப்பு அடையக் கூடும். இதன் விளைவாக, கர்ப்பம் தரிக்க ஏதுவான வகையில் கருமுட்டைகள் தயார் ஆவதில் சிக்கல் ஏற்படும்.

Also Read : சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் பழக்கங்கள்..!

ஆகவே, பெண்கள் மிகுந்த உற்பயிற்சிகளை செய்ய விரும்பினால், முதலில் மகப்பேறு மருத்துவரை அணுகி, அதுகுறித்து ஆலோசனைகளை செய்ய வேண்டும். தங்களுடைய தனிப்பட்ட உடல்வாகு, உயரம், எடை ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யலாம் என்பது குறித்து நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். அதேசமயம், கருத்தரித்தலுக்கு உதவிகரமாக இருக்கும் வகையிலான உடற்பயிற்சிகளை செய்ய நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Women Fertility, Women Health, Workout

அடுத்த செய்தி