முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வயிறு உப்புசம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை... மஞ்சள் பாலில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

வயிறு உப்புசம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை... மஞ்சள் பாலில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

மஞ்சள் பால் : மஞ்சளை 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அதே அளவில் காய்ச்சாத பால் எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் நன்கு கலக்க பேஸ்ட் பதத்தில் வரும். அதை உதட்டின் ஓரங்களை சுற்றிலும் அப்ளை செய்து சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள். பின் கழுவிவிடுங்கள்.

மஞ்சள் பால் : மஞ்சளை 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அதே அளவில் காய்ச்சாத பால் எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் நன்கு கலக்க பேஸ்ட் பதத்தில் வரும். அதை உதட்டின் ஓரங்களை சுற்றிலும் அப்ளை செய்து சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள். பின் கழுவிவிடுங்கள்.

தினமும் மாலை அல்லது இரவு நேரத்தில் தினசரி மஞ்சள் பால் குடித்து வந்தால், நன்றாகத் தூங்கி, காலையில் புத்துணர்வோடு எழுவதற்கு உதவியாக இருக்கும்.

  • Last Updated :

பால் ஒரு பிரதான உணவாக, ஊட்டச்சத்து பானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சளி மற்றும் இருமலுக்கு பாலில் மஞ்சள் சேர்த்து சூடாகக் பலன் அளிக்கும். ஆனால், மஞ்சள் பாலில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. ஆயுர்வேத மருத்துவத்தில் மஞ்சள் பால் ‘அமிர்தம்’ என்று கூறப்படுகிறது. மஞ்சள் பாலில் மசாலா பொருட்கள் சேர்த்து குடிப்பது பருவ மாற்றத்தால் ஏற்படும் அலர்ஜி, தொற்று ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பை அளிக்கிறது. சுவையான மற்றும் ஆரோக்கியமான மஞ்சள் பால் பற்றி டயட்டிஷியன் லவ்லீன் கௌர் பகிர்ந்துள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் செல்களுக்கு ஊட்டத்தை ஆற்றலை வழங்குகிறது. “நான் காஃபி மற்றும் டீ இரண்டுமே பிடிக்க மாட்டேன். என்னுடைய ஆரோக்கியத்துக்காக ‘மசாலா மஞ்சள் பால்’ தான் தினமும் குடிப்பேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மஞ்சள் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

இந்த பானத்தில் பின்வரும் மருத்துவ மற்றும் ஹீலிங் குணங்கள் உள்ளன.

* பூஞ்சை எதிர்ப்பு, பேக்டீரியல் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு

* நோய் எதிர்ப்பு செல்களை பலப்படுத்தும்

* இரவில் பருகுவது நன்றாகத் தூங்க உதவும்

* வயிறு உப்புசம், மலச்சிக்கல் மற்றும் செரிமானக் கோளாறை நீக்கும்

* ஒற்றைத் தலைவலி என்று கூறப்படும் மைக்ரேனுக்கு தீர்வு அளிக்கும்

மசாலா மஞ்சள் தயாரிப்பது எப்படி என்பது பற்றி டயட்டிஷியன் லவ்லீன் பகிர்ந்த செய்முறை :

தேவையான பொருட்கள்:

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

நெய் - ஒரு டீஸ்பூன்

பொடித்த மிளகு - அரை டீஸ்பூன்

பட்டை மற்றும் ஜாதிபத்ரி தூள் - சிறிதளவு

ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, சூடானவுடன் அனைத்து மசாலா பொருட்களையும் சேர்த்து ஒரு நிமிடம் வரை நன்றாகக் கலக்கவும். சூடான பாலை அதனுடன் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இனிப்புக்கு கொஞ்சம் சர்க்கரை அல்லது பனங்கல்கண்டு சேர்த்துகலந்து, சூடாக குடிக்கவும்.

தூய பசும்பால் அல்லது ஆர்கானிக் பாலை பயன்படுத்துவது நல்லது. அதே போல, நான்-ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம்.

ஆரோக்கியமாக இருக்க அசைவ உணவு அல்லது சைவ உணவு இரண்டில் எது பெஸ்ட்..?

எப்போது மஞ்சள் பாலை குடிக்க வேண்டும்?

தினமும் மாலை அல்லது இரவு நேரத்தில் தினசரி குடித்து வந்தால், நன்றாகத் தூங்கி, காலையில் புத்துணர்வோடு எழுவதற்கு உதவியாக இருக்கும். இரவில் குடித்தால், சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர் மற்றும் தூங்க செல்வதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னரும் குடிக்கவும்.

மஞ்சளில் இருக்கும் மைக்ரோ என்சைம்கள், நெய்யுடன் சேர்ப்பதால் ஆக்டிவேட் செய்யபடுகின்றன. குர்குமின் என்ற காம்பவுண்ட் உடல் உறுப்புகளில் ஏற்படும் வீக்கம், அழற்சி ஆகியவற்றைத் தடுக்கிறது. மிளகில் உள்ள பிபெரின் என்ற காம்பவுண்டுடன் சேரும் போது, குர்குமின் எளிதாக உடலில் உறிஞ்சப்படுகிறது. அதனால் தான் இந்த உட்பொருட்களின் கலவை தான் மஞ்சள் பாலின் மருத்துவத் தன்மையை அதிகரிக்கிறது.

யாரெல்லாம் இந்த மஞ்சள் பாலை குடிக்கக் கூடாது:

லாக்டோஸ் இன்டாலரன்ஸ் எனப்படும் லாக்டோஸ் என்ற ஒரு காம்பவுண்டால், பால் உணவுப் பொருட்களை சாப்பிட்டவுடன் பாதிப்பு ஏற்படும் பிரச்சனை இருந்தால், இந்த மசாலா பாலைத் தவிர்க்க வேண்டும். அதே போல உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்து, மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்தால், மற்றும் ரத்த அடர்த்தியை குறைக்கும் மருத்துகள் எடுத்துக்கொண்டிருந்தால் இதைத் தவிர்க்க வேண்டும்.

First published:

Tags: Milk, Turmeric