ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கருவில் இருக்கும் குழந்தைக்கு கொடி சுற்றிக்கொண்டால் சுகப்பிரசவம் நடக்குமா..? மருத்துவரின் பதில்...

கருவில் இருக்கும் குழந்தைக்கு கொடி சுற்றிக்கொண்டால் சுகப்பிரசவம் நடக்குமா..? மருத்துவரின் பதில்...

கர்ப்பகால பிரச்சனைகள்

கர்ப்பகால பிரச்சனைகள்

நிச்சயம் குழந்தையை பெற்றெடுக்க காத்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்பதுதான் விருப்பமாக இருக்கும். அதற்காகவே இன்றைக்கு யோகா, உடற்பயிற்சிகள் கூட வந்துவிட்டன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கரு வயிற்றில் நின்ற நாள் முதல் ஊட்டச்சத்து குறைபாடின்றி ஆரோக்கியமாக 6, 7 மாதங்கள் கடந்த நிலையில் குழந்தைக்கு வயிற்றில் கொடி சுற்றியுள்ளது என ஸ்கேன் ரிப்போர்ட் வரும் போது பெற்றோர்களின் மனம் பதறும். அதுவும் முதல் குழந்தை எனில் அந்த பயத்திற்கு வார்த்தைகளே இல்லை. அதைத்தொடர்ந்து அடுக்கு அடுக்காக பல கேள்விகள் வரும். அதில் பலருக்கும் முதன்மையாக தோன்றும் கேள்வி சுகப்பிரசவம் நடக்குமா..? என்பதுதான்.

நிச்சயம் குழந்தையை பெற்றெடுக்க காத்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்பதுதான் விருப்பமாக இருக்கும். அதற்காகவே இன்றைக்கு யோகா, உடற்பயிற்சிகள் கூட வந்துவிட்டன. இந்நிலையில் குழந்தைக்கு கொடி சுற்றிக்கொண்டுள்ளது என்னும் செய்தி சுகப்பிரசவம் என்னும் எதிர்பார்ப்பை உடைப்பது போல்தான் இருக்கும்.

ஆனால் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா அவ்வாறு குழந்தைக்கு வயிற்றில் கொடி சுற்றிக்கொண்டால் பயப்படத் தேவையில்லை என்கிறார். அந்த பயம் தேவையற்றது எனக் கூறும் ஜெயஸ்ரீ “ குழந்தைக்கு கொடி சுற்றும் இந்த விஷயத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைக்கும் தாய்க்குமான இரத்தப் பரிமாற்றத்தை இணைக்கும் குழாய்தான் நஞ்சுக்கொடி. இந்த நஞ்சுக்கொடி மூலமாகத்தான் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் தாயின் மூலமாக கிடைக்கின்றன. இந்த நஞ்சுக்கொடியின் அளவு குழந்தையின் ஆரோக்கியத்தைப் பொருத்தது. குழந்தை ஒல்லியாக இருந்தால் நஞ்சுக்கொடியும் மெல்லியதாக இருக்கும். நல்ல எடையுடன் இருந்தால் நஞ்சுக்கொடி தடிமனாக இருக்கும். இந்த நஞ்சுக்கொடியின் நீளம் அதிகபட்சம் 1 மீட்டர் வரை இருக்கலாம்.

' isDesktop="true" id="682655" youtubeid="v8RWvQLW5JU" category="health">

குழந்தை வயிற்றுக்குள் கைக்கால்களை அவ்வப்போது அசைப்பது இயல்பானது. அதுவே 7 மாதங்களைக் கடந்த பின் கைக்கால் அசைவு அதிகமாக இருக்கும். இதுபோன்ற சமயத்தில் நஞ்சுக்கொடியானது கழுத்து, கை, காலில் சுற்றிக்கொள்ளலாம். ஆனால் அது அடுத்த அசைவில் தானாக விலகிவிடும். இது இயல்பாக நடக்கக்கூடியதுதான். அப்படி அந்த நஞ்சுக்கொடியானது கழுத்தில் சுற்றிக்கொண்டிருந்தாலும் அது இறுக்கமாகாது. நஞ்சுக்கொடி ஒரு போதும் இறுக்கமாக சுற்றிக்கொள்ளாது “ என்கிறார் மருத்துவர் ஜெயஸ்ரீ.

ஒல்லியாக இருக்கும் பெண்கள் கொழு கொழுவென குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா..?

எப்போது இது ஆபத்தாக மாறலாம்..?

”குழந்தைக்கு நஞ்சுக்கொடி இரண்டு முறை , மூன்று முறை சுற்றிக்கொண்டு அது முடிச்சாக மாறும்போதுதான் இது ஆபத்தை உண்டாக்கும். ஏனெனில் இதனால் குழந்தைக்கு செல்லக்கூடிய இரத்த ஓட்டம் தடைபடும். ஆனால் இந்த பிரச்சனை மிக மிக அரிதானதுதான் என்கிறார் ஜெயஸ்ரீ.

சில சமயங்களில் கொடியின் நீளம் குறைவாக இருந்தாலோ அல்லது அதிகமாக சுற்றிக்கொண்டிருந்தாலோ பிரசவ சமயத்தில் பிரச்சனை ஏற்படலாம். தலை வெளியில் வரும் சமயத்தில் பிரசவத்தை சிக்கலாக்கலாம் என்கிறார். அதாவது குழந்தையின் இதயத்துடிப்பு குறைகிறது, மூச்சு திணறல் போன்ற சிரமங்களை குழந்தை அனுபவிக்கிறது எனில் சிசேரியன் முறைப்படிதான் குழந்தையை வெளியில் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

சில குழந்தைகள் இதுபோன்ற சூழ்நிலையை சமாளித்து , முட்டி மோதி வெளியே வர முயற்சி செய்கிறது எனில் அதை சுகப்பிரசவமாகவும் மாற்றலாம் என்கிறார். அப்படி இவரே 10-க்கும் மேற்பட்ட கொடி சுற்றிய குழந்தைகளுக்கு சுகப்பிரசவம் செய்திருக்கிறார். அதுமட்டுமன்றி ஒரு குழந்தைக்கே 10 முறை கொடி சுற்றியிருந்தும் அதையும் சுகப்பிரசவமாக்கியுள்ளார் மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா.

Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy care, Pregnancy Miscarriage, Pregnancy Risks