முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்தியாவில் வழங்கப்படும் பல்வேறு வகையான புற்றுநோய் சிகிச்சைகள் என்னென்ன..?

இந்தியாவில் வழங்கப்படும் பல்வேறு வகையான புற்றுநோய் சிகிச்சைகள் என்னென்ன..?

புற்றுநோய் சிகிச்சைகள்

புற்றுநோய் சிகிச்சைகள்

புற்றுநோயால் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொள்ள தன்னம்பிக்கையும் தைரியமும் தேவை. இந்தியாவில் தற்போது புற்றுநோய்க்கு பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. அவற்றில் முக்கியமாக மூன்று வகைகள் உள்ளன.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு உலகில் தீவிரமான நோய்வாய்ப்பட்டு உயிரிழப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று புற்றுநோய். உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மில்லியன் மக்கள் புற்றுநோயால் இறப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. பொதுவாக ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், நோயாளி பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்கிறார். மருத்துவர்கள், நோயாளிக்கு புற்றுநோய் பாதிப்பு எந்த நிலையில் இருக்கிறது என்ற அடிப்படையில் சிகிச்சையை பரிந்துரைக்கின்றனர்.

புற்றுநோயைக் கண்டறிந்ததும், நோயாளி பல்வேறு வழிகளில் பல சிகிச்சைகள் பற்றிய ஆலோசனைகளைப் பெறலாம், ஆனால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நிபுணத்துவம் பெற்ற மருத்துவரின் ஆலோசனையைப் பெறலாம். புற்றுநோயானது ஒருபோதும் குணப்படுத்த முடியாத நோய் அல்ல என்பதை நோயாளி புரிந்துகொள்வதும் அவசியம்.

புற்றுநோயால் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொள்ள தன்னம்பிக்கையும் தைரியமும் தேவை. இந்தியாவில் தற்போது புற்றுநோய்க்கு பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. அவற்றில் முக்கியமாக மூன்று வகைகள் உள்ளன. அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவை இதில் அடங்கும். இந்தியாவில் வழங்கப்படும் முக்கியமான புற்றுநோய் சிகிச்சைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

அறுவை சிகிச்சை

புற்றுநோய்க்கான சிகிச்சைகளில் முதன்மையானது அறுவை சிகிச்சை. ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் உங்கள் உடலில் இருந்து புற்றை அகற்றுவார். பல வகையான புற்றுநோய்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே போல, அறுவை சிகிச்சையில் பல வகைகள் உள்ளன. உடலின் எந்தப் பகுதியிலும் கடினமான கட்டிகளை நீக்க அறுவை சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும். உங்கள் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை பாதிக்கும் புற்றுநோய்க்கான ஒரே மற்றும் சிறந்த சிகிச்சை இதுதான். இது லுகேமியா உள்ளிட்ட சில வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையாக பயன்படாது. சிலருக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தேவைப்படும் மற்றும் முழுவதுமாக குணம் அடையலாம். சிலருக்கு, அறுவை சிகிச்சை புற்றுநோய்க்கான முதல் சிகிச்சையாக வழங்கப்படுகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உறுப்பு உடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்ட உறுப்பில் இருந்து புற்றுநோய் செல்களுக்கு பரவும். இதைத் தடுக்க, அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பகுதி அகற்றப்படுகிறது. லுகேமியா போன்று உடல் முழுவதும் பரவக்கூடிய புற்றுநோய்க்கான சிகிச்சையாக அறுவை சிகிச்சை பலன் அளிக்காது. கேன்சர் அறுவை சிகிச்சை இன்று ஓபன் சர்ஜரியில் இருந்து கீஹோல் சர்ஜரி மற்றும் ரோபோடிக் சர்ஜரி என மாறிவிட்டது. புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்க ஒரே வழி, முன்பு பாதிக்கப்பட்ட உறுப்புகளை முழுவதுமாக அகற்றுவதுதான்.

புற்றுநோய்க்கான சிகிச்சைகள் என்னென்ன..? யாருக்கு என்ன சிகிச்சை சிறந்தது..?

கதிர்வீச்சு சிகிச்சை

பல்வேறு வகையான புற்றுநோய் சிகிச்சைகளில், கதிர்வீச்சு சிகிச்சை மிகவும் பயனுள்ள ஒன்றாகும். இது புற்றுநோய் செல்களை அழிக்கவும், புற்றுக் கட்டிகளை சுருக்கவும் அதிக அளவு கதிர்வீச்சைப் பயன்படுத்தும் புற்றுநோய் சிகிச்சையாகும். புரோஸ்டேட் புற்றுநோய் அல்லது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கதிர்வீச்சு சிகிச்சை புற்றுநோய் செல்களை அழிக்கிறது அல்லது அவற்றின் டிஎன்ஏவை சேதப்படுத்துகிறது, அவற்றின் வளர்ச்சியைக் குறைக்கிறது. டிஎன்ஏ-சேதமடைந்த புற்றுநோய் செல்கள் புதிய செல்களை உருவாக்க பிரிவதில்லை.

கதிர்வீச்சு சிகிச்சைக்குப் பிறகு திசுக்கள் உடனடியாக இறக்காது. டிஎன்ஏ-சேதமடைந்த செல்கள் அழிக்க நாட்கள் அல்லது வாரங்கள் ஆகும். அவை முற்றிலும் அழிந்துவிட்டால், உடல் அவற்றை வெளியேற்றுகிறது.

கதிர்வீச்சு சிகிச்சையில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன

1) வெளிப்புற கதிர்வீச்சு - வெளிப்புற கதிர்வீச்சு சிகிச்சை மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் முறையாகும். உடலில் இருந்து சிறிது தூரத்தில் வைக்கப்படும் ரேடியேஷன் கதிர்களை வெளியிடும் இயந்திரத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் சிகிச்சை ஆகும். அவை புற்றுநோய் செல்களை மட்டுமே குறிவைக்கின்றன. அதாவது, இது உங்கள் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது பாதிக்கப்பட்ட பகுதிக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. உதாரணமாக, உங்கள் நுரையீரலில் புற்றுநோய் இருந்தால், கதிர்வீச்சு அலைகள் உங்கள் மார்புக்கு மட்டுமே குறிவைத்து பயணிக்கும், உங்கள் முழு உடலையும் குறி வைக்காது.

Hymen Myths: கன்னித்திரை பற்றி இன்னும் எவ்வளவு காலம் இதையே சொல்லுவீங்க..? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..

பெரும்பாலான கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்கள் ஃபோட்டான் கற்றைகளைப் பயன்படுத்துகின்றன. ஃபோட்டான்கள் எக்ஸ்-ரேவிலும் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் எக்ஸ்-ரேவில் பயன்படுத்தும் அளவு மிகவும் குறைந்தது. இந்த இயந்திரங்களை இயக்குவதற்கு கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுநர்கள் சிறப்புப் பயிற்சி பெறுகிறார்கள்.

2) உள் கதிர்வீச்சு - உட்புற கதிர்வீச்சு சிகிச்சை என்பது உடலுக்கு உள்ளே கதிர்வீச்சை அனுப்பும் மருந்துகளின் சிகிச்சையாகும். இந்த வகை சிகிச்சையானது பொதுவாக அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடியாத புற்றுநோய் உறுப்புகலுக்காக செய்யப்படுகிறது. இந்த சிகிச்சையானது உள் சிகிச்சை அல்லது அணு சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உட்புற கதிர்வீச்சு சிகிச்சை என்பது தைராய்டு சுரப்பியின் புற்றுநோய்க்கான ரேடியோ-அயோடின் சிகிச்சையாகும்.

கீமோதெரபி

புற்றுநோய்க்கு கீமோதெரபி ஒரு சிறந்த சிகிச்சையாகும். இது மருந்துகளுடன் கூடிய சிகிச்சை. புற்றுநோயின் தன்மையைப் பொறுத்து, கீமோதெரபி, நோய்க்கு சிகிச்சையளிக்க அல்லது கட்டுப்படுத்த உதவும். அதாவது, கீமோதெரபி என்பது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பெருகுவதைத் தடுக்கும் மருந்துகளை உள்ளடக்கியது. கீமோதெரபி மூன்று முக்கிய காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

முதலாவதாக, குறிப்பிட்ட வகையான லுகேமியாவை கீமோதெரபி மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும். இரண்டாவது புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்கும். அதாவது, அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைக்குப் பிறகு உடலில் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்க கீமோதெரபி சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. மூன்றாவதாக, நோயை ஓரளவு குணப்படுத்துவது. அதாவது சில சமயங்களில் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியாது.

நல்ல கொலஸ்ட்ரால் அளவு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எவ்வளவு (HDL) இருக்க வேண்டும்..? தெரிந்துகொள்ளுங்கள்...

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கீமோதெரபி நோயை ஓரளவு குறைக்க அல்லது நோயின் தீவிரத்தை குறைக்க பயன்படுத்தப்படலாம். மேலே உள்ள புற்றுநோய் சிகிச்சைகள் இந்தியாவில் பல வகையான புற்றுநோய்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு சில மருத்துவமனைகளில், பின்வரும் சில குறிப்பிட்ட கேன்சர் சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இம்யூனோதெரபி - புற்றுநோய் நோயெதிர்ப்பு சிகிச்சை

இது இம்யூனோதெரபி அல்லது இம்யூனோ-ஆன்காலஜி என்று அழைக்கப்படுகிறது. நோயெதிர்ப்பு சிகிச்சை என்பது புற்றுநோயை எதிர்த்துப் போராட ஒரு நபரின் சொந்த நோயெதிர்ப்பு சக்தியைப் பயன்படுத்தும் ஒரு சிகிச்சையாகும். நமது நோயெதிர்ப்பு அமைப்பு நோய் மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது. இதனை அடிப்படையாகப் பயன்படுத்தி செய்யப்படும் சிகிச்சை இது.

புற்றுநோயின் தொடக்கத்தில் உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியைக் கண்டறிந்து அழிக்க நமது நோயெதிர்ப்பு அமைப்பு முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படும். ஆனால் நோயெதிர்ப்பு சிகிச்சை அனைத்து நோயாளிகளுக்கும் பயனளிக்காது. மேலும் நோயெதிர்ப்பு சிகிச்சை சில தீவிர பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது. பரிசோதனைகள் மூலம், நோயெதிர்ப்பு சிகிச்சையால் எந்த நோயாளிகள் பயனடைவார்கள் என்பதை மருத்துவர்கள் தீர்மானிப்பார்கள். இம்யூனோதெரபி மற்ற புற்றுநோய் சிகிச்சைகளை விட துல்லியமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்..? உடல் எடை அடிப்படையில் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்..?

இலக்கு சிகிச்சை

இலக்கு சிகிச்சை என்பது வளர்ந்து வரும் புற்றுநோய் சிகிச்சையாகும். இது புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சி, பிரிவு மற்றும் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் புரதங்களை இலக்காகக் கொண்டது. பெரும்பாலான இலக்கு சிகிச்சையானது, கட்டிகள் வளர்ந்து உடல் முழுவதும் பரவ உதவும் குறிப்பிட்ட புரதங்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

புற்றுநோய் தடுப்பு, நோயறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவற்றில் நிறைய ஆற்றல்கள் உள்ள யுகத்தில் நாம் வாழ்கிறோம். இன்று, நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன், மருத்துவ அறிவியல் வளர்ச்சியின் மூலம் புற்றுநோயை உடலில் இருந்து அகற்ற முடியும்.

First published:

Tags: Cancer, Cancer Treatments