உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவு முக்கியம். ஆரோக்கியமாக இருக்கவும், நோய்களை எதிர்த்துப் போராடவும், நம் உடலுக்கு பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவைப்படுகிறது. இருப்பினும், ஆரோக்கியமான உணவை உட்கொண்டாலும், நம் உடலில் சில நேரங்களில் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுகின்றன. அப்படி நமது உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை சில அறிகுறிகள் மூலம் கண்டறிய முடியும். அப்படி என்னென்ன ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட்டால், நமது உடலில் என்ன மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்பதை பற்றி பார்க்கலாம்...
வைட்டமின் ஏ:
கண்பார்வை சரியாக தெரிய வேண்டும் என்றால் வைட்டமின் ஏ உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இருட்டிலும் நன்றாக கண் பார்வை தெரியவேண்டும் என்றால் அதற்கு ரோடாப்சின் என்ற பொருள் உற்பத்தியாக வேண்டும், அதனை உற்பத்தி செய்ய வைட்டமின் ஏ உதவுகிறது.
ஒருவருக்கு வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால், அவர் பின்வரும் அறிகுறிகளைக் காணலாம்:
• குறைந்த வெளிச்சத்தில் பார்ப்பதில் சிக்கல்
• தோல் எரிச்சல் மற்றும் அரிப்பு
• கண்கள் உலர்த்து போதல்
வைட்டமின் பி2 மற்றும் பி6 :
வைட்டமின் பி2 ரிபோஃப்ளேவின் என்றும் அழைக்கப்படுகிறது, இது உடல் திசுக்களை பராமரிக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முக்கியமானது. வைட்டமின் B6 என்பது நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும், இது நம் உடலில் என்சைம்களை உருவாக்குகிறது. இந்த இரண்டு வைட்டமின்கள் பற்றாக்குறை ஏற்படும் போது உடலில் சில பொதுவான அறிகுறிகள் ஏற்படும். அவை,
• வாய்ப்புண்
• வாயின் ஓரத்தில் விரிசல்
• பொடுகு
• உச்சந்தலையில் செதில் போல் திட்டுக்கள் படிவது
• உச்சந்தலையில் அரிப்பு
வைட்டமின் பி7 :
வைட்டமின் பி7 உணவை ஆற்றலாக மாற்றக்கூடியது, இதனால் தான் நம் உடல் புத்துணர்ச்சி மற்றும் சுறுசுறுப்புடன் இயங்க முடிகிறது. உடலில் வைட்டமின் பி7 இல்லாவிட்டால், அது பல்வேறு அறிகுறிகளைக் காட்டுகிறது, அவை என்னென்ன,
• நகங்கள் எளிதில் உடைவது
• நீண்ட நேரமாக அடிக்கடி சோர்வாக உணர்வது
• உடல் முழுவதும் தசை வலி மற்றும் பிடிப்புகள்
• கை மற்றும் கால்களில் கூச்ச உணர்வு
பற்களின் ஈறுகளில் இரத்தக் கசிவை சரி செய்து உறுதியாக்க உதவும் வீட்டுக் குறிப்புகள்..!
வைட்டமின் பி12 :
வைட்டமின் பி 12 என்பது மூளை, நரம்புகள் மற்றும் இரத்த அணுக்களின் சரியான செயல்பாட்டிற்கு உதவும் ஒரு அத்தியாவசிய வைட்டமின். இது ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. பெரும்பாலும் கோழி மற்றும் பால் பொருட்களில் காணப்படுகிறது. வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகளைப் பார்க்கலாம்.
• அடிக்கடி தலைவலி
• தோல் மஞ்சள் மற்றும் வெளிர் நிறத்துக்கு மாறுதல்
• வாய் ஓரத்தில் புண் மற்றும் வீக்கம்
• மனச்சோர்வு மற்றும் பிற மனநல கோளாறுகள்
• நீண்ட நாட்களாக உடல் சோர்வு தென்படுதல்
வைட்டமின் சி :
வைட்டமின் சி சிட்ரஸ் பழங்கள் மற்றும் காய்கறிகளில் நிறைந்துள்ளது. சேதமடைந்த திசுக்களை சரி செய்யவும், வெளிப்புற காயங்களை விரைவாக குணப்படுத்தவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் வைட்டமின் சி மிக முக்கிய பங்காற்றுகிறது.
• ஈறுகளில் ரத்தக் கசிவு
• காயம் குணமடைவதில் தாமதம்
• உச்சத்தலை வறண்டு போதல்
• தோல் வறட்சி மற்றும் அரிப்பு
• மூக்கில் ரத்தக்கசிவு
• குதிகால் வெடிப்பு
40 வயதை தொடும் பெண்களுக்கு இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் கை கொடுக்குமா..? இந்த 6 விஷயங்களை கடைப்பிடியுங்கள்
வைட்டமின் ஈ :
கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமினான ஈ, நமது உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் தமனிகள் உறைவதைத் தடுக்கிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்கவும், இதயம் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.
• கைகள் மற்றும் கால்களில் உணர்வு இழப்பு
• கட்டுப்பாடற்ற உடல் இயக்கம்
• பலவீனமான தசைகள்
• குறைந்த பார்வை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.