முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்துகிறீர்களா? உங்களை பாதிக்கும் 4 விஷயங்கள்!

டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்துகிறீர்களா? உங்களை பாதிக்கும் 4 விஷயங்கள்!

டாய்லெட்டில் போன் யூஸ் பண்றீங்களா..?

டாய்லெட்டில் போன் யூஸ் பண்றீங்களா..?

கழிவறையில் அதிக நேரம் அழுத்தமாக அமர்ந்திருக்கும்போது இரைப்பை மற்றும் பெருங்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

  • 1-MIN READ
  • Last Updated :

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகிவிட்டனர். காலையில் எழுந்ததுன் notifications பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இருந்து அதை கழிவறைக்கு எடுத்து செல்வது வரை, போன்கள் அவசியமான ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. உங்கள் ஃபோனை பக்கத்தில் வைத்துக் கொள்ளாமல் உங்களால் செயல்பட முடியாது என்பது மிகவும் சிக்கலான ஒன்றாகும்.

செல்போனை கழிப்பறையில் பயன்படுத்தும் பழக்கம் ஒரு கெட்ட பழக்கமாகும். இது பல உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கக்கூடியவராக உங்களை மாற்றும். எப்படி என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்..

வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு தொடர்பான பிரச்சனைகள் :

பலர் கழிப்பறைக்கு செல்லும்போது சரியான கழிவறை வழிமுறைகளை உறுதிப்படுத்த மறந்து விடுகிறார்கள். சிலர் கழிவறையில் சுகாதாரத்தை கவனமாகக் கவனிக்க மாட்டார்கள். மேலும் கழிப்பறையில் செல்போனைப் பயன்படுத்திய பிறகு கைகளைக் கழுவுவதை மறந்துவிடுகிறார்கள். பின்னர், அவர்கள் கைகளை சுத்தம் செய்யாமல் உணவை சாப்பிடுகிறார்கள். இப்படித்தான் பாக்டீரியா உங்கள் வயிற்றை அடையும். இது UTI, ( urinary track infection) வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் என பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பாக்டீரியாவால் உங்களுக்கு தொற்று ஏற்பட்டால், உங்கள் வயிறு மற்றும் குடலின் உள் பகுதிகளில் வீக்கத்தை நீங்கள் சந்திக்க நேரிடும்.

மலச்சிக்கல் மற்றும் மூலம்

சீர்குலைந்த செரிமான அமைப்பு மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வழிவகுக்கும். இருப்பினும், நீண்ட நேரம் கழிவறையில் உட்கார்ந்திருப்பது உங்கள் வெளியேற்ற உறுப்புகளில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும். இது பைல்ஸ் மற்றும் பிளவுகள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.

கழிவறையில் அதிக நேரம் அழுத்தமாக அமர்ந்திருக்கும்போது இரைப்பை மற்றும் பெருங்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இப்படி அதிக நேரம் கழிவறையில் உட்கார்ந்திருப்பதுவே கூட நிம்மதியாக மலம் கழிக்க முடியாமல் மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

Also Read : கணுக்காலில் வீக்கமா?... இதய நோய்கான அறிகுறியாக இருக்கலாம்... உடனே மருத்துவரை அணுகுங்கள்..!

தொற்று அதிகரிக்கும் அபாயம்

ஒவ்வொரு கழிப்பறையும் ஆபத்தான கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களின் தாயகமாக உள்ளது. நீங்கள் மொபைல் ஃபோனைப் பயன்படுத்தும்போது, ​​உங்கள் ஸ்மார்ட்போனில் ஒட்டிக்கொள்ளும் பாக்டீரியாக்களால் நீங்கள் அதிகம் பாதிக்கப்படுவீர்கள். இந்த பாக்டீரியாக்கள் தொலைபேசியில் ஒட்டிக்கொண்டு வயிற்று வலி மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) போன்ற தொற்றுநோயை ஏற்படுத்தும்.

மொபைல் போனில் பாக்டீரியா தாக்குதல்

மேலே கூறியது போல், கழிவறையில் உங்கள் கைகளை கழுவுவது போல், உங்கள் ஸ்மார்ட்போனை கழுவ முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். செல்போனில் கழிவறையில் இருந்து பரவும் கிருமிகள் தொற்றியிருக்கும். கிருமியின் தாக்கத்தைப் பொருத்து கிட்டதட்ட இரண்டு முதல் நான்கு நாட்கள் வரையிலும் கூட இந்த கிருமிகள் செல்போனில் படிந்திருக்க வாய்ப்புண்டு.

அதோடு தொடர்ச்சியாக நாள் முழுக்க செல்போன் பயன்படுத்துவது மற்றும் சார்ஜ் போடுவது போன்றவற்றால் போன் ஸ்க்ரீன் வெப்பமடையும். அது கிருமிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். உங்கள் ஃபோனில் இருந்து ஆபத்தான கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்றுவதற்கான சிறந்த வழி, அதை கவனமாக sanitize செய்வதுவது தான்.

First published:

Tags: Health