முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சிறுநீரக செயலிழப்பை கண்டறிய உதவும் 10 முக்கியமான அறிகுறிகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...

சிறுநீரக செயலிழப்பை கண்டறிய உதவும் 10 முக்கியமான அறிகுறிகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...

சிறுநீரக பாதிப்புகள்

சிறுநீரக பாதிப்புகள்

சிறுநீரகத்தின் சீரான இயக்கம், உடலில் நீரின் அளவு சரியாக பராமரிப்பது, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது, எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்யத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்வது போன்ற பணிகளைக்கு உதவுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இரத்தத்தில் உள்ள தேவையில்லாத கழிவுகளான யூரியா, கிரியேட்டின் அமிலங்கள் போன்ற கழிவுகளை அகற்றும் சிறுநீரகம், உடலின் சுத்திகரிப்பு தொழிற்சாலை போல் செயல்படுகிறது. இவையே ரத்தத்தை வடிகட்டவும், அதில் இருந்து சிறுநீரை பிரித்து வெளியேற்றவும் உதவுகிறது. இந்த சுத்திகரிப்புப் பணி நடைபெறவில்லை என்றால், கழிவுகள் உடலிலேயே தங்கி பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். சிறுநீரக செயலிழப்பு, மரணம் போன்ற அதீ திவிரமான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.

சிறுநீரகத்தின் சீரான இயக்கம், உடலில் நீரின் அளவு சரியாக பராமரிப்பது, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது, எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்யத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்வது போன்ற பணிகளைக்கு உதவுகிறது.

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் சிறுநீரகம் சம்பந்தமான நோய்களுடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் அதன் முதற்கட்ட அறிகுறிகள் வெளிப்படையாக தெரியாதது என ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. உடலில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் போன்றவற்றை கண்டறிய குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வதைப் போல, ரத்தத்தில் உள்ள கிரியேட்டின் அளவை பரிசோதிப்பதன் மூலமாக சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பற்றி அறியலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

‘சைலன்ட் கில்லர்’ என அழைக்கப்படும் சிறுநீரக பாதிப்புகளை கண்டறிய ஒரே வழி சரியான காலத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையும், ஆரம்ப கட்டத்தில் தென்படும் சில முக்கியமான அறிகுறிகள் மட்டுமே. அப்படி சிறுநீரக பாதிப்பு தொடர்பாக உங்களை எச்சரிக்கும் 10 முக்கிய அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்...

1. சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதை குறிக்கக்கூடிய பொதுவான அறிகுறியாக சோர்வும், பலவீனமும் உள்ளது. இது இரத்தத்தில் நச்சுகள் மற்றும் அசுத்தங்கள் அதிக அளவில் சேருவதால், சிறுநீரகம் மோசமாக செயல்படுவதைக் குறிக்கிறது.

2. நன்றாக சாப்பிட்டுக்கொண்டிருந்தவர், திடீரென பசியின்மை காரணமாக சாப்பாட்டை தவிர்த்தால் அதனை உடனடியாக கவனிக்க வேண்டும். ஏனெனில் பசியின்மை சிறுநீரகம் செயலிழக்க தொடங்குவதை குறிக்கும் இரண்டாவது மிக முக்கியமான அறிகுறியாகும். சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்து, ரத்தத்தில் நச்சுக்களை அளவு அதிகரிக்கும் போது உணவின் சுவையை உணர முடியாமல் போவது, பசியின்மை போன்ற அறிகுறிகள் தென்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வயிறு கோளாறு ஏற்படும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை?

3. காலையில் கண் விழித்ததுமே குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படுவது, சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பித்துள்ளதை குறிக்கும் அறிகுறியாகும். இந்த அறிகுறிகள் சிறிது சிறிதாக தொடங்கிய சிறுநீரக பாதிப்பு இப்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதைக் குறிக்கிறது.

4. சிறுநீரகங்கள் செயலிழப்பதை ரத்த சோகை நோய் ஏற்படுவதன் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். சிறுநீரகம் பாதிப்படையும்போது எரித்ரோபோய்டின் ஹார்மோனின் அளவு குறையும். இதனால் ரத்த சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் அளவும் குறையும். இதனால் தான் சோர்வும், ரத்தசோகையும் ஏற்படுகிறது.

5. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவது, வழக்கத்தை விட குறைவான அளவு சிறுநீர் கழிப்பதும் சிறுநீரகங்கள் செயலிழக்க ஆரம்பித்துள்ளதை சுட்டிக்காட்டும் அறிகுறிகளாகும்.

6. நுரையுடன் கூடிய சிறுநீர் அல்லது சிறுநீரில் இரத்தக் கசிவு போன்றவை ஏற்படுவது சிறுநீரகத்தின் வடிகட்டுதல் அமைப்பு சேதமடைந்ததைக் குறிக்கிறது.

7. சிறுநீரகம் ரத்தத்தில் இருந்து நச்சுக்களை பிரிக்கும் அளவு குறையும் போது உடலில் நச்சுக்களின் அளவு அதிகரிக்கும். இதனால் சருமத்தில் வறட்சி மற்றும் அரிப்பு, வியர்வை துர்நாற்றம் அதிகரிப்பது போன்ற பிரச்சனைகள் உருவாகலாம்.

கவனியுங்கள்..உங்கள் கிட்னிகளை பாதுகாக்க நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்!

8. முதுகுவலி, அடி வயிறு, கணுக்கால் மற்றும் பாதங்களில் வீக்கம் அல்லது வலி ஏற்படுவது.

9. சிறுநீரகங்கள் பழுதடைந்தவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது ஹைப்பர் டென்ஷன் வருவது சகஜம். சிறுநீரக செயல்பாடு மோசமடைவதால் உடலில், சோடியம் மற்றும் நீரின் அளவு அதிகரிப்பது, உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாக தலைவலி, வயிற்று வலி, பார்வைக் குறைபாடு ஆகியவை தோன்றக்கூடும்.

10. சிறுநீரக நோய்கள் பெரியோர்பிடல் எடிமாவை (periorbital edema) ஏற்படுத்தும், இதற்கு காரணம் சிறுநீரகங்கள் அதிக அளவு புரதத்தை உடலில் வைத்துக்கொள்ளாமல், சிறுநீர் வழியாக வெளியேற்றுவதால் ஏற்படலாம்.

First published:

Tags: Kidney Disease, Kidney Failure