குஷ்பூ 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்து கொண்ட குஷ்பூவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். குறிப்பாக மானாட மயிலாட சீசன்கள், ஜோடி நம்பர் ஒன்-சீசன் 5 மற்றும் அழகிய தமிழ் மகன் ஆகிய ரியாலிட்டி ஷோக்களின் நடுவராக இருந்தார்.
நிஜங்கள், ஜாக்பாட் மற்றும் நம் வீடு மகாலட்சுமி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். இதனிடையே அரசியலிலும் கால் பதித்துள்ள குஷ்பூ தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். இந்த நிலையில் தற்போது தனது உடல் எடையை குறைந்த புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார் நடிகை குஷ்பு. அவர் தனது அற்புதமான மாற்றத்தை ரசிகர்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். "கடின உழைப்பு இறுதியாக முடிவு கிடைத்துள்ளது" என்று #weightlossgoal #fitnessmotivation என்ற ஹேஸ்டேக்கில் ஷேர் செய்துள்ளார்.
இதனை பார்த்த பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் மற்ற பிரபலங்கள் அனைவரும் குஷ்புவுக்கு பாராட்டுக்கள் கூறியுள்ளனர். அவரது ரசிகர்களும் புகைப்படத்திற்கு லைக் செய்து வருகின்றனர். குஷ்பு விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் தமிழ் படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் உடல் எடையை குறைத்துள்ளார். இதனிடையே கோகுலத்தில் சீதை என்ற சீரியலில் நடித்து வருகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை சீரியலில் மங்களம் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை குஷ்பூ நடிக்கிறார்.
View this post on Instagram
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2019 ஆம் ஆண்டு முதல் கோகுலத்தில் சீதை சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கதாநாயகனாக டான்ஸ் மாஸ்டராக இருந்த நந்தாவும், கதாநாயகியாக புதுமுக நடிகை ஆஷா கவுடாவும் நடித்து வருகின்றனர். வெள்ளித்திரையில் பிரபலமாக இருந்த நடிகைகள் நளினி, வடிவுக்கரசி ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இவ்வளவு வயதிலும் நடிகை நதியா ஃபிட்டாக இருக்க இதுதான் காரணமா..? இன்ஸ்டாவில் வெளியிட்ட ஃபிட்னஸ் வீடியோ
இந்த தொடருக்கு இன்னும் மவுசு சேர்க்கும் விதமாக நடிகை குஷ்பூ இணைந்துள்ளார். ஜூலை 28ம் தேதி முதல் கோகுலத்தில் சீரியல் சீரியலில் குஷ்பூ இணைந்துள்ளார். மருத்துவரான மங்களம், பொறுப்புள்ள, தைரியமான பெண்ணாக நடித்து வருகிறார். இதற்கிடையே தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் தனது உடல் எடையை சரமாரியாகக் குறைத்திருக்கிறார் குஷ்பு. இதனை தனது இன்ஸ்ட்டாகிராமில் புகைப்படம் மூலம் தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு அண்ணாத்த திரைப்படத்திற்காக சுமார் 15 கிலோ வரை தன்னுடைய உடல் எடையை குறைத்திருப்பதாக இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fitness, Kushboo, Kushbu, Weight loss