கேரளாவில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் அபாயம்... அறிகுறிகளுடன் மருத்துவமனையில் ஒருவர் அனுமதி...!

லேசான காய்ச்சலுடன் இந்த வைரஸ் பாதிக்கும். பிறகு, மூச்சுவிடுவதில் சிரமம், கடினமான தலைவலி , மயக்கம், சோர்வு, மனக்குழப்பம், கோமா, ஏற்பட்டு அது மூளைக் காய்ச்சலாக மாறும். இந்த வைரஸ் தாக்கினால், 75 சதவிகிதம் இறப்பு உறுதி எனக் கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: June 3, 2019, 12:28 PM IST
கேரளாவில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் அபாயம்... அறிகுறிகளுடன் மருத்துவமனையில் ஒருவர் அனுமதி...!
நிபா வைரஸ்- சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் (கோப்புப் படம்)
Web Desk | news18
Updated: June 3, 2019, 12:28 PM IST
கேரளாவில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கேரளாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

எர்ணாகுளம் மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் 23 வயது இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த இளைஞரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை என்றும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மத்தியத்திற்குள் பரிசோதனையின் முடிவு தெரிவிக்கப்படும் என்றும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.


நிபா வைரஸ் (கோப்புப் படம்)


அந்த இளைஞர் பயிற்சி வகுப்புக்காக அருகில் உள்ள மாவாட்டத்திற்கு சென்றதாகவும் அங்கு அவருக்கு  காய்ச்சல் வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இதுபோன்ற அறிகுறிகளுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லையென ஆய்வில் தெரியவந்ததுள்ளது.

எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் கே. முஹம்மது இ.சஃபருல்லா வெள்யிட்டுள்ள அறிக்கையின்படி, இது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை எனவும், கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Loading...

மேலும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பாட்டால் அது குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் அதன் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் கூறினார்.

நிபா வைரஸ் - கோப்புப் படம்


நிபா வைரஸ் முதலில் லேசான காய்ச்சலுடன் பாதிக்கும். பிறகு, மூச்சுவிடுவதில் சிரமம், கடினமான தலைவலி , மயக்கம், சோர்வு, மனக்குழப்பம், கோமா, ஏற்பட்டு அது மூளைக் காய்ச்சலாக மாறும். இந்த வைரஸ் தாக்கினால், 75 சதவிகிதம் இறப்பு உறுதி எனக் கூறப்படுகிறது.

கடந்த வருடம் நிபா வைரஸினால் கோழிக்கோடு மாவட்டத்தில் 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம்  பார்க்கும் மருந்துக்கடைகாரர்!

Also see...
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...