இடுப்பை சுற்றிலும் அதிகளவு எடையையும் ஆபத்தான கொழுப்பையும் கொண்டிருப்பது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்கவும், நோய்களைத் தடுக்கவும் வேண்டுமெனில் உடல் நிறை குறியீட்டை (BMI) அளவிடுவதற்குப் பதிலாக, உங்கள் இடுப்பை உங்கள் உயரத்தில் அளவை விட பாதியாக குறைப்பது முக்கியமானது என இங்கிலாந்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இடுப்பைச் சுற்றி "சென்ட்ரல் அடிபோசிட்டி" எனப்படும் அதிக அளவில் கொழுப்பு படிவது, டைப் 2 நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
அடிவயிற்றைச் சுற்றியுள்ள அதிக எடையை குறைக்க பிஎம்ஐ அளவை வைத்து முயற்சிப்பதை விட, இடுப்பு-உயரம் விகிதத்தை அளவிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பிஎம்ஐ அளவானது 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் அல்லது இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் துல்லியமான அளவில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
எடுத்துக்காட்டாக, தேசிய உடல்நலம் மற்றும் பராமரிப்பு சிறப்பு கழகத்தின் (NICE) புதிய வரைவு வழிகாட்டுதலின் படி, நீங்கள் 5 அடி 9 அங்குல உயரமாக இருந்தால், உங்கள் இடுப்பு அளவீடு 87.5cm (34 அங்குலம்) - அல்லது உங்கள் உயரத்தில் பாதியாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சரியான இடுப்பு அளவை அளவிடுவதற்கான வழிகாட்டுதல்களை தேசிய உடல்நலம் மற்றும் பராமரிப்பு சிறப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, விலா எலும்புகளின் அடிப்பகுதி மற்றும் இடுப்பின் மேற்பகுதியைக் ஆகிய இரண்டு இடங்களையும் இணைக்கும் விதமாக டேப்பைச் சுற்றி அளவிட வேண்டும். இதனை செய்யும் போது மூச்சை இழுத்துப்பிடிப்பது அல்லது பெரிதாக சுவாசிப்பது போன்ற விஷயங்களை செய்யக்கூடாது. எப்போதும் போல் இயல்பாக சுவாசிக்க வேண்டியது கட்டாயம்.
40 வயதைக் கடந்த பின் பெண்கள் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம்..? கட்டுப்படுத்தும் வழிகள்..!
உடல் எடையை கண்காணிக்க பயன்படும் இந்த புதிய முறை சிறப்பானது என சில வல்லுநர்கள் நினைத்தாலும், பலரும் இந்த தேசிய உடல்நலம் மற்றும் பராமரிப்பு சிறப்புக் கழகத்தின் அளவீடும் முறை குட்டையானவர்கள் மற்றும் 60 வயதுக்கு அதிகமானோருக்கு பலனளிக்காது என கருதுகின்றனர்.
இதுகுறித்து நிபுணர் பேட்டர்ஹாம் கூறுகையில், "இடுப்பு-உயரம் விகிதம் என்பது எளிமையான, பயன்படுத்த எளிதான அளவீடு ஆகும், இது அதிக உடல்நல அபாயத்தில் உள்ளவர்களை அடையாளம் காணும் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எடை மேலாண்மையில் பயனடையும் உதவுகிறது" என தெரிவித்துள்ளார்.
ஒரு நபரின் அடிவயிற்றில் கொழுப்பு அதிகரிப்பது, டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளிட்ட பல உயிரைக் கட்டுப்படுத்தும் நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களில், உடல்நல சம்பந்தமான அபாயங்களை மதிப்பிடவும், கணிக்கவும் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் இடுப்பு-உயரம் விகிதத்தையும் மருத்துவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. வழிகாட்டுதல்களில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் மே மாதத்தில் வெளியிடப்படுவதற்கு முன்பு சுகாதார நிபுணர்களும் பொதுமக்களும் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.