கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி குறித்து நடிகர் கார்த்தியின் சந்தகங்களுக்கு மருத்துவர் கொடுத்த விளக்கம்..!

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைத் தலைவர் டாக்டர் இ.தேரானிராஜனுடன் நடிகர் கார்த்தி கேள்வி பதில்

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பின்னர் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் மரணம் முற்றிலும் தவிர்க்கப்படுவதாக மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்களாக முழு இந்தியாவையும் ஆட்டிப்படைத்து வருகிறது. தினசரி பாதிப்புகள் தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், இளைஞர்கள் பெரியவர்கள் என பாகுபாடு இல்லாமல் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. எங்கு பார்த்தாலும் மரண செய்தி வெளிவந்த வண்ணம் இருப்பதால் மக்கள் அனைவரும் அதிக பயத்திலும், துயரத்திலும் ஆழ்ந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜனின் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்வது ஒருபுறம் வேகப்படுத்தப்பட்டாலும், பலர் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை எண்ணி இன்னும் அச்சம் கொள்கின்றனர். எனவே, கொரோனா வைரஸின் இரண்டாம் அலையால் ஏற்படும் தற்போதைய அறிகுறிகள் என்ன? தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பாதிப்புகள் ஏற்படுமா என்பன உள்ளிட்ட பல கேள்விகள் மக்களின் இதயத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் தலைவரும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைத் தலைவர் டாக்டர் இ.தேரானிராஜனுடன் நடிகர் கார்த்தி ஒரு கேள்வி பதில் அமர்வை நடத்தியுள்ளார்.கொரோனா பெருந்தொற்றின் போது ஒருவர் செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்வதற்கும், தடுப்பூசி தொடர்பான சந்தேகங்கள் ஆகியவை தொடர்பாக மக்களுக்கு அதிகபட்ச விழிப்புணர்வை பரப்புவதற்கும் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷனால் இந்த ஆன்லைன் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் நடிகர் கார்த்தி மருத்துவரிடம் இரண்டாவது அலை கொரோனா வைரஸின் அறிகுறிகளில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த மருத்துவர், முதல் அலையுடன் ஒப்பிடுகையில் அதிக கடுமையான காய்ச்சல், தலைவலி மற்றும் வயிற்றுப் பாதிப்பு தற்போதைய அறிகுறிகளாக இருப்பதாக பதிலளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டியது கட்டாயமா? என்று 'சுல்தான்' ஹீரோ கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த மருத்துவர், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் கடுமையான நிமோனியா இருந்தால் மட்டுமே ஸ்கேன் செய்ய வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, இந்தியாவில் பெரும்பாலான மக்களின் மனதில் உள்ள கேள்வியை நடிகர் கார்த்தி மருத்துவரிடம் கேட்டிருந்தார். அதாவது கோவிஷீல்ட் அல்லது கோவாசின் இரண்டு தடுப்பூசிகளில் எது சிறந்தது? என்ற கேள்வி தான். அதற்கு இரண்டும் சமமான பாதுகாவலர்கள் என்று டாக்டர் டெரானிராஜன் விளக்கினார். அவர் மேலும் கூறுகையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் யாரேனும் தீவிரமான விளைவுகளை சந்திக்கலாம்.கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் தற்கொலை எண்ணங்கள்... என்ன செய்ய வேண்டும்?

ஆனால், இது மிகவும் அரிதான விஷயம் என தெரிவித்துள்ளார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பின்னர் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் மரணம் முற்றிலும் தவிர்க்கப்படுவதாக மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசியின் போடும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து விளக்கிய மருத்துவர், தடுப்பூசிக்கு முந்தைய நாளிலும், போட்டுக்கொண்ட பிறகு இரண்டு நாட்களுக்கு ஆல்கஹால் குடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று தெளிவுபடுத்தினார்.

 
Published by:Sivaranjani E
First published: