• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • 6 மாதத்தில் 20 கிலோ எடையை குறைத்த கங்கனா : அப்படி என்ன டயட் ஃபாலோ செய்தார்..?

6 மாதத்தில் 20 கிலோ எடையை குறைத்த கங்கனா : அப்படி என்ன டயட் ஃபாலோ செய்தார்..?

கங்கனா

கங்கனா

6 மாதங்களில் உடல் எடையை அதிகரித்தேன். அதே 6 மாதத்தில் எடையை குறைத்தேன். இப்படி என்னுடைய 30 வயதில் என் உடலை பல வழிகளில் தொந்தரவு செய்துவிட்டேன்.

  • Share this:
தலைவி படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கங்கனா தடம் பதித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய இந்த படம் தியேட்டர்களை பதம் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக கங்கனா கடுமையான முயற்சிகளையும் , பயிற்சிகளையும் செய்தார் என்பது யாராலும் மறுக்க முடியாதது.

அப்படி சமீபத்தில் படத்திற்காக அதிக எடையை கூட்டிய கங்கனா அதைக் குறைக்க கடுமையாக பாடுபட்டு வந்தார். அந்த பயணத்தை சமீபத்தில் மிக உருக்கமாக பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் 6 மாதத்தில் 20 கிலோ எடை வரை குறைத்தேன் எனக் கூறியுள்ளார்.

அந்த பகிர்வில் ஆறு மாதங்களில் 20 கிலோ எடையை அதிகரித்ததாகவும், பின்னர் ஆறு மாதங்களில் மீண்டும் அதை குறைத்ததாகவும் கூறியுள்ளார். அதாவது தன் உடலை உச்சபட்சம் வரை வருத்திக்கொண்டதாக கூறியுள்ளார் கங்கனா . என்னதான் எடையை குறைக்க முடிந்தாலும் அதனால் விழுந்த தழும்புகளை மட்டும் நீக்க முடியவில்லை. அவை நிரந்தர தழும்புகளாக தங்கிவிட்டன என்று கூறியுள்ளார். இப்படி கங்கனா தனது கதாபாத்திரங்களுக்காக அவர் கொடுக்கும் முழுமையான உழைப்பு பலரையும் நெகிழ வைக்கிறது என்றே சொல்லலாம்.



 




View this post on Instagram





 

A post shared by Kangana Thalaivii (@kanganaranaut)








 




View this post on Instagram





 

A post shared by Kangana Thalaivii (@kanganaranaut)








 




View this post on Instagram





 

A post shared by Kangana Thalaivii (@kanganaranaut)






அவர் பகிர்ந்துகொண்ட அந்த கேப்ஷனில் “ 6 மாதங்களில் உடல் எடையை அதிகரித்தேன். அதே 6 மாதத்தில் எடையை குறைத்தேன். இப்படி என்னுடைய 30 வயதில் என் உடலை பல வழிகளில் தொந்தரவு செய்துவிட்டேன். இதனால் நிரந்தர தழும்புகளையும் அடைந்துள்ளேன். ஆனாலும் இதுபோன்ற உழைப்புதான் கலைக்கு விலையாக இருக்கிறது. ஆனால் சில நேரங்களில் அந்த விலை கலைஞனுக்கு பலன் தருவதில்லை” என்று கூறியுள்ளார்.

கங்கனா உடல் எடையை குறைத்ததற்கான டயட் விஷயங்களை பகிர்ந்ததில்லை. ஆனால் அவர் ஒரு நாளைக்கு கட்டாயம் 45 நிமிடங்கள் யோகா செய்வாராம். வாரத்தில் 5 நாட்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்துவிடுவார். அவர் ஊட்டச்சத்து மிக்க உணவுகளில் அதிக கவனம் செலுத்துவார். டிடாக்ஸ் பானங்களையும் அவர் குடித்ததாக டைம்ஸ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: