வேலை, குடும்பம் இரண்டையும் பேலன்ஸ் செய்வதோடு ஃபிட்னஸையும் கவனிக்கும் கமலா ஹாரிஸ் : ஜாகிங் செய்த வீடியோ வைரல்

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ்

ஜாக்கிங் என்பது உடலின் அனைத்து உறுப்புகளையும் ஆக்டிவாக வைத்திருப்பதுடன், தசை மற்றும் எலும்புகளை வலுவாக இருக்க உதவுகிறது.

  • Share this:
அபிரகாம் லிங்கன் மெமோரியலில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் ஜாக்கிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பைடன் - கமலா ஹாரீஸ் கூட்டணி ஜனவரி 20ம் தேதி முறைப்படி பதவியேற்றுக்கொண்டனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் அமெரிக்காவின் முதன் பெண் ஜனாதிபதி என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதாக அவர் அறிவிக்கப்பட்டது முதல் உலகத்தின் பார்வை கமலா ஹாரீஸின் மீது விழத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் கமலா ஹாரீஸின் நடவடிக்கைகள் செய்திகளாக மாறி வருகின்றன.

அந்த வகையில், துணை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டாலும், வழக்கம்போல் தன்னுடைய ஃபிட்னஸ் பயிற்சிகளை பொதுவெளியிலேயே மேற்கொண்டு வருகிறார். அண்மையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான அபிரஹாம் லிங்கன் மெமோரியலில் அவர் ஜாக்கிங் செய்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.அதில், தனது கணவருடன் இணைந்து கமலாஹாரீஸ் ஜாக்கிங் பயிற்சிகளை மேற்கொள்கிறார். அப்போது, அவரின் பாதுகாவலர்களும் பொதுமக்களின் உடையில் ஆங்காங்கே நின்று பாதுகாப்பு வழங்கி வந்தனர்.

வீட்டிலிருந்து அலுவலக வேலை செய்பவரா நீங்கள்? உங்கள் பிரச்னைக்கான தீர்வுகள் இங்கே....

கமலா ஹாரிஸ் இப்படி குடும்பம், வேலை என இரண்டையும் கையாளுவது மட்டுமன்றி தன்னுடைய ஃபிட்னஸிற்கும் கவனம் செலுத்துவதை பராட்டி வருகின்றனர். அதோடு துணை அதிபர் என்கிற பந்தா இல்லாமல் சகஜமாக அவர் பொதுவெளியில் ஜாகிங் செய்வதையும் பாராட்டி வருகின்றனர். இதுபோன்ற சில ஊக்குவிக்கும் விஷயங்களால்தான் இவரை பல பெண்கள் தனது முன்னோடியாக நினைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாகிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

ஜாக்கிங் என்பது உடலின் அனைத்து உறுப்புகளையும் ஆக்டிவாக வைத்திருப்பதுடன், தசை மற்றும் எலும்புகளை வலுவாக இருக்க உதவுகிறது. ஆக்சிஜன் உள்ளிழுக்கும் தன்மை அதிகரித்து, இதய பிரச்சனைகள் ஏற்படமால் தடுக்க உதவியாக உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கலோரிகளை குறைத்து, உடல் எடையை குறைக்க ஜாக்கிங் மிக முக்கிய உடற்பயிற்சியாக உள்ளது.

படிகட்டுகளில் ஏறி ஜாக்கிங் செய்யும்போது, ஒருவரின் இதயத்துடிப்பு அதிகரித்து, ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளும் அளவும் அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்து ஸ்போர்ட்ஸ் மெடிசன் இதழில் 2005 ஆம் ஆண்டு வெளியான என்.ஐ.எச் ஆய்வின்படி, வாரத்தின் 5 நாட்கள், தொடர்ந்து 8 வாரங்கள் படி ஏறி இறங்கி ஜாக்கிங் செய்பவர்களின் ஆக்சிஜன் உள்ளிழுக்கும் தன்மை 17 விழுக்காடு அளவுக்கு உயரும் என கூறியுள்ளது.

 

 

 
Published by:Sivaranjani E
First published: