Home /News /lifestyle /

பிரசவத்திற்கு பிறகு மனதளவில் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளேன் - மனம் திறந்த காஜல் அகர்வால்!

பிரசவத்திற்கு பிறகு மனதளவில் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளேன் - மனம் திறந்த காஜல் அகர்வால்!

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

'பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் இந்த மனதளவிலான பிரச்சனையை ஒவ்வொரு தாயும் அனுபவித்தே ஆக வேண்டும்' - காஜல் அகர்வால்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India
    பிரசவத்திற்கு பிறகு வழக்கமாக பெண்களுக்கு ஏற்படும் “மாம்ஸ் கில்ட்(Mom’s Guilt)” எனப்படும் மனதளவிலான நோயினால் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை காஜல் அகர்வால் பேசி உள்ளார்.

    கோலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வந்த காஜல் அகர்வால், தன்னுடைய பிரசவத்திற்கு பிறகு முதல் முறையாக மனம் திறந்து பேசி உள்ளார்.

    பெற்றோராக இருப்பது மிகவும் அழகான ஒன்றுதான் என்றாலும் அதில் உள்ள பொறுப்புகளும், கடமைகளும் அதனை மிகவும் கடினமானதாகவும் சவாலானதாகவும் மாற்றுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் குழந்தைக்கு தாயான நடிகை காஜல் அகர்வால் “மதர்ஸ் கில்ட்” எனப்படும் குற்ற உணர்வினால் பெருமளவில் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    இது குறித்து பேசிய அவர் ”என்னுடைய பிரசவத்திற்கு பிறகு நான் மனதளவில் பெரியதாக பாதிக்கப்பட்டுள்ளேன். ஜிம்மிற்கு கூட சரிவர செல்ல முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக தற்போது வீட்டிலேயே எனக்கு உதவி செய்ய ஆட்கள் உள்ளனர். ஆனால் குழந்தை பிறந்தவுடன், அந்த தொடக்க நாட்களில் என்னுடைய குழந்தையை தனியாக யாரிடமும் விட்டு செல்ல எனக்கு பயமாகவே இருந்தது. எப்பொழுதும் குழந்தை நினைப்பாகவே இருந்தது” என தெரிவித்தார். குழந்தையை பார்த்துக் கொள்ள தன்னுடைய குடும்பத்தை சார்ந்த ஒருவர் குழந்தைக்கு அருகிலேயே இருக்க வேண்டுமென தான் விரும்புவதாகும் அந்த ஒருவர் நானாக இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    நடிகை காஜல்


    குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக துவங்கப்பட்ட “பிரீடம் டுஃபீட்”(Freedom to feed) எனும் இயக்கத்திற்காக நேஹா துப்பியா உடனான நேர்காணலில் இதை அவர் தெரிவித்துள்ளார். இந்த நேஹா துப்பியா என்னும் இந்திய நடிகை ஏற்கனவே குழந்தை வளர்ப்பு பற்றியும், தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டுவதன் அவசியத்தை பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை பகிர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

    மேலும் இது குறித்து பேசிய நடிகை காஜல் அகர்வால் “ஒவ்வொரு முறையும் சின்ன சின்ன விஷயங்களுக்காக வெளியே செல்லும்போதும் கூட குழந்தையை பார்த்துக் கொள்ள தேவையான மூட்டை முடிச்சுகளையும் கையோடு கொண்டு செல்ல வேண்டியது உள்ளது” என பேசினார். தனக்குள் இருந்த இந்த குற்ற உணர்வை பல காலம் தனக்குள்ளேயே வைத்திருந்ததாகவும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்த முயற்சித்ததாகவும் தெரிவித்தார்.



    தனக்கு குழந்தை பிறந்த தருணத்தை பற்றி விவரித்த அவர், “என்னுடைய குழந்தை பிறந்தவுடன், அவனை எனது மார்பில் சாய்த்து அணைத்து கொண்ட அந்த தருணத்தின் போது, இந்த உலகமே எனக்கு மறந்து போனது. இந்த ஒன்பது மாதங்கள் நான் சந்தித்த பிரச்சனைகளும் சவால்களும் ஒரு நொடியில் காணாமல் போய், குழந்தையை பார்த்த அந்த சந்தோஷத்தில் தான் கண்ணீர் விட்டு அழுததாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக நேகா துப்பியா உடனான மற்றுமொரு நேர்காணலில், இந்த மாம்ஸ் கில்ட் பற்றி பேசியுள்ள நடிகை காஜல் அகர்வால், “ஒவ்வொரு இரவும் இரவு 8.30 அளவில் குழந்தையை தூங்க வைத்துவிட்ட பிறகு தான் இரவு உணவு உட்கொள்ள செல்வதாகவும், ஆனால் பல நேரங்களில் இரவு தூங்க செல்வதற்கே மிகவும் தாமதமாகி விடுவதால், காலையில் மிகவும் தாமதமாக விழித்தெழுவதாகவும் கூறினார். இது போன்ற நிகழ்வுகளை தவிர்த்து “தனது குழந்தை விழிப்பதற்கு முன்னதாகவே தான் அவனுக்கருகில் அவனுக்காக இருக்க விருபுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

    “பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் இந்த மனதளவிலான பிரச்சனையை ஒவ்வொரு தாயும் அனுபவித்தே ஆக வேண்டும் எனவும் யாரும் இதிலிருந்து தப்பிக்க இயலாது” என்றும் அவர் கூறியுள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Actress Kajal Agarwal, Kajal Agarwal

    அடுத்த செய்தி