நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ’கதா குடிநீர்’ - கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவரின் குறிப்பு
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ’கதா குடிநீர்’ - கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவரின் குறிப்பு
கதா குடிநீர்
தன்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இரண்டு முறை இதைக் குடிப்பதாகக் கூறியுள்ளார். இதனால் தன் உடல் இயல்பு நிலைக்குத் திரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பல குறிப்புகள் உள்ளன என்கின்றனர் சித்த மருத்துவ வல்லுநர்கள். கொரோனா வைரஸுக்கு எதிராகவும் சித்த மருத்துவம் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு பக்கம் வழக்கமான மருத்துவ சிகிச்சைகள் நடக்க, சித்த மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அந்தவகையில் சமையல் கலைஞர் அனஹிதா தாண்டி என்பவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் காதா குடிநீர் என ஒரு ரெசிபியைப் பகிர்ந்துள்ளார். அது சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ஏனெனில், இந்த கதா குடிநீரை கொரோனா பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ள அர்ஷிதாப் கபூர் இவரிடம் பகிர்ந்துள்ளார். தன்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இரண்டு முறை இதைக் குடிப்பதாகக் கூறியுள்ளார். இதனால் தன் உடல் இயல்பு நிலைக்குத் திரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவேதான் இதை தாங்களும் தற்போது குடித்து வருவதாக அனஹிதா குறிப்பிட்டுள்ளார்.
சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்...
தேவையான பொருட்கள் :
ஏலக்காய் - 2
கிராம்பு - 4
மிளகு - 1/2 tsp
பட்டை - 1 துண்டு
துளசி பெரிய இலைகள் - 5
இஞ்சி - 1 துண்டு
தேன் அ வெல்லம் - சிறிதளவு
மஞ்சள் தூள் - 2 tsp
3 கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மஞ்சள் மற்றும் இஞ்சி துருவி போட்டு கலந்து கொதிக்க வையுங்கள்.
பின் மிளகு ஏலக்காய், பட்டையை இடித்துப் போடுங்கள். துளசியை கசக்கிப் போடுங்கள்.
20-30 நிமிடங்களுக்கு நன்குக் கொதிக்க வையுங்கள்.
இறுதியாக தேன் அல்லது வெல்லம் கலந்து வெதுவெதுப்பாக அருந்துங்கள். மீதம் இருப்பின் அதை அப்படியே வைத்து அடுத்த வேளைக்கும் அன்றைய நாளில் குடித்துக்கொள்ளலாம்.
இது சளி, இருமல் , காய்ச்சல் இருந்தாலும் குடிக்கலாம். காலையில் மூலிகைக் டீக்கு பதிலாகவும் இதைக் குடிக்கலாம்.
Published by:Sivaranjani E
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.