நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும் கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்க அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சித்த மருத்துவர் கு.சிவராமன் தெரிவித்துள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை வாங்க அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்டவற்றில் இருந்து மீள கபசுர குடிநீர் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அந்த வகையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நோயாளிகளுக்கு 100 மில்லி அளவு கபசுர குடிநீர் அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் வழங்கப்பட்டது. இது கொரோனாவை கட்டுப்படும் மருந்து என நினைத்து ஏராளமானோர் கல்லூரியில் திரண்டனர்.
கட்டுக்கடங்காத கூட்டத்தால் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கபசுர குடிநீரை பாட்டிலில் வீட்டிற்கு எடுத்துச் செல்ல யாருக்கும் வழங்கப்படவில்லை. மேலும், மருந்து கடைகளில் கபசுர குடிநீருக்கான பொருட்களை வாங்கி வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளுமாறு மக்களுக்கு மருத்துவமனை ஊழியர்கள் அறிவுறுத்தினர்.
மேலும், மக்கள் அதிகளவில் கூட வேண்டாம் என்றும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து டாக்டர் சிவராமன் கூறுகையில், “
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும் கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கலாம் என தமிழக அரசுக்கு பரிந்துரைத்தேன்” எனத்
தெரிவித்தார்.
Also see...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.