Home /News /lifestyle /

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஜஸ்டின் பைபர்... குணமடைந்து வருவதாக வீடியோ வெளியீடு...

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஜஸ்டின் பைபர்... குணமடைந்து வருவதாக வீடியோ வெளியீடு...

ஜஸ்டின் பைபர்

ஜஸ்டின் பைபர்

வைரஸ் தொற்று காரணமாக இடது பக்க முகத்தில் பக்கவாதம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள கனடா நாட்டு பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் வெகு விரைவில் நலம் அடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வைரஸ் தொற்று காரணமாக இடது பக்க முகத்தில் பக்கவாதம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள கனடா நாட்டு பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் வெகு விரைவில் நலம் அடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முன்னதாக, இன்ஸ்டாகிராம் தளத்தில் ஜஸ்டின் பைபர் வெளியிட்டிருந்த வீடியோ பதிவில், தனக்கு ராம்சே ஹண்ட் என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் தன்னுடைய காது மற்றும் முகத்தில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். குறிப்பாக, தனது வலது கண் சிமிட்டுவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

முழுமையாக குணமடைய வாய்ப்பு உண்டு

ஜஸ்டின் பைபருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, பிரிட்டனைச் சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் சார்லஸ் நுட்கா பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டவர்களில் 75 சதவீத நோயாளிகளுக்கு ஆரம்ப கட்டத்திலேயே ஸ்டிரைய்டு மற்றும் ஆண்டி வைரல் மருந்துகள் கொடுக்கப்பட்டதில் முழுமையான குணம் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து சார்லஸ் நுட்கா கூறுகையில், “ஜஸ்டின் பைபர் வெளியிட்டிருந்த வீடியோவை நான் பார்த்தேன். அதில், அவர் குணம் அடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம் ஆகும்.



நான் முகப்பருவுடன் போராடிய நாட்கள் மறக்க முடியாதவை... மீண்டு வந்த நினைவுகளை பகிர்ந்த பிரபலம்..!

முகத்தில் பக்கவாதம் ஏற்படும் நோயாளிகளுக்கு வரும் பிரச்சினைகளில் மிக முக்கியமானது எதுவென்றால் அவர்கள் தங்கள் கண்களை முழுமையாக மூடவும் முடியாது. கண் சிமிட்டவும் முடியாது. குறிப்பாக அவர்கள் சிரிக்க இயலாது.

நோயாளிகள் மீண்டும் சிரிக்கும் அளவுக்கு குணம் அடைவதற்கு முன்பாக, அவர்களது முகத்தில் மெல்ல, மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும். அதாவது, முகத்திற்கு கீழே உள்ள தசை மெதுவாக மேல்நோக்கி உயர்ந்து, வாய் சீரான அளவிற்கு திரும்பும். ஜஸ்டின் பைபர் வெளியிட்ட வீடியோவில் இதுபோன்ற குணம் அடைவதற்கான ஆரம்ப கால அறிகுறிகள் தென்படுகின்றன’’ என்றார் மருத்துவர் சார்லஸ் நுட்கா.



நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவது முக்கியம்

இதுகுறித்து சார்லஸ் நுட்கா பேசுகையில், “பொழுதுபோக்கு தொழில் துறையில் பல தரப்பட்ட நோயாளிகளை நான் பார்த்து வருகிறேன். பணிக்கு திரும்புவதற்கு முன்பாக, தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் எந்தவொரு விஷயத்திற்கும் அவர்கள் தீர்வு காண வேண்டும்.

ஆண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள ஏற்ற வயது எது..? இந்த வயதை தாண்டிவிட்டால்...

இந்த துறையில் இருப்பவர்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் இருக்கலாம் அல்லது இதர பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால், அவற்றுக்கு வெகு விரைவில் தீர்வு காண வேண்டும். அப்படி தீர்வு காணாவிட்டால் நீண்ட கால பாதிப்புகள் ஏற்படும்’’ என்று கூறினார்.

ஜஸ்டின் பைபருக்கு தற்போது 28 வயது ஆகிறது. அடுத்து வரக் கூடிய நிகழ்ச்சிகளை தம்மால் நடத்த முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Health, Justin Bieber

அடுத்த செய்தி