• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • டைப் 1 நீரிழிவு நோய் உண்டாக என்ன காரணம்..? அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்

டைப் 1 நீரிழிவு நோய் உண்டாக என்ன காரணம்..? அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

JD என்று வகைப்படுத்தப்பட்ட நீரிழிவு குறைபாட்டுக்கு  முழுமையான சிகிச்சை இல்லை. ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும், நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவும் மருந்துகள், சிகிச்சை முறைகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் உள்ளன.

  • Share this:
நம் உடலில் உள்ள கணையத்தில் சுரக்கும் இன்சுலின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிர்வகிக்கிறது. இது செல்கள் மற்றும் திசுக்களுக்கு ஆற்றல் தேவைப்படும் குளுகோசை உடல் முழுவதும் எடுத்துச் செல்ல உதவுகிறது. உடல் தேவையான அளவுக்கு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ, உடலில் இன்சுலின் சுரப்பு இல்லை என்றாலோ, உடலில் இன்சுலின் சுரந்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை என்றாலோ நீரிழிவு நோய் ஏற்படும்.

இன்சுலின் அளவின் சுரப்பைப் பொறுத்து, நீரிழிவு நோய் வகைப்படுத்தப்படும். ஜூவினைல் டயாபிடீஸ் என்பது டைப் 1 டயாபிடீஸ் என்று கூறப்படுகிறது. இது பெரியவர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் பாதிக்கிறது. நீரிழிவு பாதிப்புள்ள 5-10% நோய்கள் டைப் 1 வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டைப் 1 டயாபிடீஸ் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

இந்த வகையான நீரிழிவு ஒரு ஆடோ-இம்யூன் குறைபாடாகும். பிறக்கும் போதே இந்த குறைபாட்டுடன் குழந்தைகள் பிறக்கும் ஆபத்துகள் உள்ளன. இன்சுலின் இல்லை என்னும் போது, அல்லது இன்சுலின் குறைந்தால், உங்கள் ரத்த ஓட்டத்தில் க்ளூக்கோஸ் கலந்து, சர்க்கரை அளவு அதிகரிக்கும். அதிக சர்க்கரை அளவு நீடித்திருக்கும் போது, நீரிழிவு அறிகுறிகள் தோன்றி, பல்வேறு உபாதைகளும் ஏற்படும். முறையற்ற உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, வேறு சில நோய்கள் ஆகியவை நீரிழிவு நோய்க்கான காரணியாக அமைகின்றன. பெரும்பாலும், இது மரபணு ரீதியாக ஏற்படுவதில்லை என்றாலும்.டைப் 1 டயாபிடீஸ் பாதிப்பு ஏற்பட்டால் தினமும் இன்சுலின் ஊசிகள் செலுத்த வேண்டியது அவசியம்.

இனிப்பு வகை உணவுகளை அதிகமாக சாப்பிடுகிறீர்களா..? கட்டுப்படுத்த உதவும் டிப்ஸ்

நீரிழிவு நோயின் அறிகுறிகள்

இன்சுலின் குறைபாடு உடலில் அறிகுறிகளை காட்டுவதற்கு நீண்ட காலம் ஆகலாம். பின்வருபவை நீரிழிவு நோயின் அறிகுறிகள் ஆகும்.

  • அடிக்கடி சிறுநீர் கழிப்பது

  • அதிகரிக்கும் தாகம் அல்லது அடிக்கடி தாகம் எடுப்பது போன்ற உணர்வு

  • பசி அதிகரிப்பு, வழக்கத்தை விட அதிகமாக உண்பது

  • பார்வை குறைபாடு

  • தீவிரமான உடற்சோர்வு

  • சரும வறட்சி

  • அடிக்கடி மற்ற உடல் நலக் குறைபாடுகள்


ஜூவினைல் டயாபடீஸ் சிகிச்சை முறைகள்

JD என்று வகைப்படுத்தப்பட்ட நீரிழிவு குறைபாட்டுக்கு முழுமையான சிகிச்சை இல்லை. ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும், நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவும் மருந்துகள், சிகிச்சை முறைகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு JD பாதிப்பு ஏற்பட்டால், நீங்கள் குழந்தை நல மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.



  1. இன்சுலின் சுரக்காத காரணத்தால், தினமும் இன்சுலின் ஊசி செலுத்த வேண்டும்.

  2. ஆரோக்கியமான மற்றும் முறையான உணவுப்பழக்கம் அவசியம். நீரிழிவு நோய் பாதிப்பை அதிகப்படுத்தாமல் இருக்கவும், வளர்ச்சிக்கு உதவும், ஆற்றல் அளிக்கும் உணவுப் பட்டியல்களை ஊட்டச்சத்து நிபுணரிடம் கலந்தாலோசிக்கலாம்.

  3. தினமும் வீட்டிலேயே ரத்த சர்க்கரை அளவை கவனிக்க வேண்டும். சாப்பிடும் முன்பு, சாப்பிட பின்பு என்று தினமும் சர்க்கரை அளவை குறித்துக்கொள்ள வேண்டும்.

  4. சரியான தூக்கமும், போதிய அளவு உடற்பயிற்சியும் கட்டாயம்.

  5. நோய் அறிகுறிகள் தீவிரமாகும் போது, மேற்கொள்ளக்கூடிய சிகிச்சை முறைகள், மருத்துவ ஆலோசனையைப் பெற்றிருக்க வேண்டும்.


போதிய இடைவெளியில், உங்கள் மருத்துவர்களின் ஆலோசனைப் படி பரிசோதனை செய்ய வேண்டும். இது நீண்ட நாள் குறைபாடாகவும், முழுமையான சிகிச்சை இல்லை என்பதாலும் மருத்துவர்களின் அறிவுரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: