Home /News /lifestyle /

புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிய சிறிய புழுக்களை வைத்து சாதனை படைத்த விஞ்ஞானிகள்..!

புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிய சிறிய புழுக்களை வைத்து சாதனை படைத்த விஞ்ஞானிகள்..!

ற்றுநோய் ஆரம்பகால அறிகுறிகள்

ற்றுநோய் ஆரம்பகால அறிகுறிகள்

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மரபணு மாற்றப்பட்ட சிறியளவிலான வட்டப்புழுக்களை (roundworms) பயன்படுத்தி வெற்றிகரமாக அடையாளம் கண்டுள்ளனர்.

புற்றுநோயாளிகளின் உடலில் இருந்து வெளிப்படும் திரவங்களின் வாசனை ஆரோக்கியமான நபர்களின் வாசனையிலிருந்து வேறுபட்டவை என்பது பல ஆய்வுகள் மூலம் நீண்ட காலமாக விஞ்ஞானிகளுக்கு தெரிந்த ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இதனிடையே சிறுநீர் மூலம் கணைய புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிய, சிறு புழுக்களை பயன்படுத்தும் ஸ்கிரீனிங் டெஸ்ட் ஒன்று ஜப்பானிய பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய டெஸ்ட் வழக்கமான ஸ்கிரீனிங்கை பூஸ்ட் செய்ய உதவும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மரபணு மாற்றப்பட்ட சிறியளவிலான வட்டப்புழுக்களை (roundworms) பயன்படுத்தி வெற்றிகரமாக அடையாளம் கண்டுள்ளதாக டோக்கியோவை தளமாக கொண்ட ஜப்பானிய பயோடெக்னாலஜி ஸ்டார்ட்அப் நிறுவனமான ஹிரோட்சு பயோ சயின்ஸ் இன்க் (Hirotsu Bio Science Inc) நிறுவனம் அறிவித்து இருக்கிறது. கணைய புற்றுநோயை துவக்கத்திலேயே கண்டறிவது கடினமாக உள்ள சூழலில், ஒரு துளி சிறுநீரை பயன்படுத்தி லேட்டஸ்ட் தொழில்நுட்ப உதவியுடன் கணைய புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிய உதவும் தங்களது எளிய சோதனையை அடுத்த வருடத்திற்குள் வணிகமாக்க முயற்சி எடுக்க போவதாக ஹிரோட்சு பயோ சயின்ஸ் நிறுவனம் கூறி இருக்கிறது.

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீரில் அதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும் வகையில், ஹிரோட்சு பயோ சயின்ஸ் நிறுவனம் “C. elegans" என்று குறிப்பிடப்படும் கேனோர்ஹப்டிடிஸ் எலிகன்ஸ் (Caenorhabditis elegans) என்ற கடுமையான வாசனை உணர்வு கொண்ட மற்றும் சுமார் ஒரு மில்லிமீட்டர் நீளம் கொண்ட புழு வகையை மரபணு மாற்றம் செய்துள்ளது. குறிப்பிட்ட புழு வகையை மரபணு ரீதியாக மாற்றி கணைய புற்றுநோய் அறிகுறிகளை கண்டறியும் ஸ்கிரீனிங் டெஸ்ட் பற்றி குறிப்பிட்ட கியூஷு பல்கலைக்கழகத்தில் நூற்புழுக்கள் எனப்படும் சிறிய புழுக்களை ஆய்வு செய்த முன்னாள் கல்வியாளரான ஹிரோட்சு "இது ஒரு மிக பெரிய தொழில்நுட்ப முன்னேற்றம் என்று குறிப்பிட்டார்.



இவர் Hirotsu Bio Science நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார். மேலும் பேசியுள்ள ஹிரோட்சு, கணைய புற்றுநோயைக் கண்டறிவதில் தங்களின் கண்டறிதல் முறை 100% மற்றும் பிற வகை புற்றுநோய்களுக்கு 91.3% துல்லியமானது என்றார். இருப்பினும், நிறுவனத்தின் சோதனைக கணைய புற்றுநோயை கண்டறிவதற்காக அல்ல. ஆனால் வழக்கமான பரிசோதனையை அதிகரிக்க உதவும், ஏனெனில் மருத்துவமனைக்கு செல்லும் அவசியமின்றி வீட்டிலேயே சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்படலாம் என்பதால் என்றும் குறிப்பிட்டார்.

வீட்டுக்குள் இருக்கும் காற்று மாசு வெளிப்புற காற்று மாசுபாட்டை விட ஆபத்தானது : அதிர வைக்கும் ஆய்வின் உண்மை

ஆராய்ச்சி மையத்தின் தலைவரான எரிக் டி லூசியோ கூறுகையில், தங்களது இந்த தொழில்நுட்பம் ஒரு கேம்-சேஞ்சர் என்றும், மக்களிடம் கேன்சர் ஸ்கிரீனிங் பற்றிய உணர்வை மாற்றும் என்றும் கூறினார். கணைய புற்றுநோய் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக டெஸ்ட்டிற்கு பயன்படுத்தப்படும் புழுக்கள் எதிர்வினையாற்றினால், நோயாளி மேலதிக பரிசோதனைக்காக மருத்துவரிடம் செல்ல பரிந்துரைக்கப்படுவார் என்றும் ஆய்வாளர்கள் கூறி இருக்கிறார்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Cancer, Japan

அடுத்த செய்தி