உங்கள் தினசரி ட்ரெயினிங் செஷனில் சேர்க்க வேண்டிய பொதுவான வொர்க்கவுட்களில் ஒன்று ஏரோபிக் என்றும் அழைக்கப்படும் கார்டியோ உடற்பயிற்சிகள். உடலுக்கு ஆக்ஸிஜன் சப்ளையை அதிகரிக்கிறது, மூட்டுகளுக்கு நன்மை அளிக்கிறது, எனர்ஜி லெவலை அதிகரிக்கவும் மேலும் பல உடல் நன்மைகளுக்கும் உதவுவதால் இது ஆரோக்கியத்திற்கு நல்லது. நீங்கள் ஜிம்மிற்கு சென்று தீவிர வொர்கவுட்களை செய்ய விரும்பவில்லை என்றால், வீட்டிலேயே எளிதாகவும் வசதியாகவும் செய்ய கூடிய கார்டியோ பயிற்சிகளை நீங்கள் எப்போதும் செய்யலாம்.
சாரா அலி கான், ஜான்வி கபூர், பூஜா ஹெக்டே உற்பட பல பிரபலங்களுக்கு பயிற்சி அளிப்பதில் புகழ் பெற்ற பிரபல ஸ்டைலிஸ்ட் நம்ரதா புரோகித், வீட்டிலேயே பயிற்சி செய்ய கூடிய சில கார்டியோ பயிற்சிகளை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து உள்ளார்.
இன்ஸ்டாவில் நம்ரதா ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அதில் அவர் வீட்டில் பயிற்சி செய்ய கூடிய எளிதான 4 கார்டியோ பயிற்சிகளை செய்து காட்டுவதை பார்க்க முடிகிறது. "இதை முயற்சி செய்து பார்த்து விட்டு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று சொல்லுங்கள்" என்று கேப்ஷனிட்டு கார்டியோ பயிற்சி வீடியோவை ஷேர் செய்து உள்ளார்.
கார்டியோ பயிற்சிகளின் நன்மைகள்..
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்த அழுத்தத்தை குறைக்க, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க, நாள்பட்ட வலியை குறைக்க மூட்டு இயக்கத்தை அதிகரிக்க, மனநிலையை மேம்படுத்த மற்றும் தூக்க சுழற்சியை சீராக்க என பல நன்மைகளை அளிக்கிறது.
இப்போது நம்ரதா புரோகித் செய்து காட்டி இருக்கும் 4 எளிய கார்டியோ பயிற்சிகள் என்ன மற்றும் அதன் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்..
ஸ்குவாட் டேப்ஸ் (Squad Taps):
இந்த எளிய பயிற்சி தசை வலிமையை உருவாக்கவும், இதயத்தின் ஃபிட்னஸை அதிகரிக்கவும் மற்றும் கலோரிகளை எரிக்க உதவுகிறது.
பிளாங்க் ஜாக்ஸ் (Plank Jacks):
இது கார்டியோ மற்றும் கோர்-ஸ்ட்ரென்த்னிங்கின் கலவையாகும். பிளாங்க் ஜாக்ஸ் பயிற்சியானது மேல் மற்றும் கீழ் உடலின் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது, கோர் ஸ்டெபிளிட்டியை அதிகரிக்கிறது, கலோரிகளை எரிக்கிறது மற்றும் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
தொப்பையை குறைக்க இதை மட்டும் செய்தால் போதுமா..? 5 எளிய வழிகள் இங்கே...
மவுண்டைன் க்ளிம்பர்ஸ் (Mountain Climbers):
இது ஒரு ஃபுல்-பாடி வொர்கவுட் ஆகும், ஏனெனில் இது பல தசை குழுக்களை ஒன்றாக வேலை செய்ய உதவுகிறது. இது கார்டியோ கோர் ஸ்ட்ரென்த் மற்றும் சுறுசுறுப்பை உருவாக்க உதவுகிறது.
லங் ஸ்விட்ச் (Lunge Switch):
இந்த பயிற்சி உங்கள் மைய மற்றும் வயிற்று தசைகளுக்கு வேலை கொடுக்கிறது. இதில் இடுப்பை மேலும் கீழும் நகர்த்தும் போது ஸ்திரத்தன்மை உருவாக்க உதவுகிறது. கீழ் முதுகு வலி ஏற்படாமல் தவிர்க்க உதவுகிறது. பேலன்ஸ் மற்றும் உடல் தோரணைகளை மேம்படுத்த உதவுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.