Home /News /lifestyle /

சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்க பழகிக்கொள்ளுங்கள்.. அதில் இத்தனை நன்மைகள் இருக்காம்...

சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்க பழகிக்கொள்ளுங்கள்.. அதில் இத்தனை நன்மைகள் இருக்காம்...

வெல்லம்

வெல்லம்

ஆயுர்வேத மருத்துவத்தில் வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து குடிப்பது உடலுக்கு பல விதங்களில் நன்மை அளிக்கிறது என்று கூறப்பட்ட?

காலையில் எழுந்தவுடன் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு புத்துணர்ச்சியூட்டும் சூடான பானங்கள் அவசியம். காலை நேரம் மட்டுமல்லாமல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைப்பதற்கு அவ்வப்பொழுது சூடாகவோ குளிர்ச்சியாகவோ பானங்களை குடிப்பது அன்றாட செயல்களில் ஒன்றாகவே காணப்படுகிறது. ஆனால், எல்லா நேரங்களிலும் எல்லா பானங்களிலும் சர்க்கரையை தான் இனிப்புக்காகச் சேர்க்கிறோம்.

எம்ப்டி கலோரிகள் என்று கூறப்படும் சத்தே இல்லாத சர்க்கரையைத் தவிர்த்து, வெல்லத்தைப் பயன்படுத்தலாம். அது மட்டுமின்றி, வெல்லம் சேர்க்கப்பட்ட பானங்கள் அல்லது வெல்லம் கலந்த தண்ணீரை குடிப்பது மிகவும் புத்துணர்ச்சியூட்டும்.

வெல்லத்தில் இருக்கும் ஊட்டச்சத்து நன்மைகள்

* ஆயுர்வேத மருத்துவத்தில் வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து குடிப்பது உடலுக்கு பல விதங்களில் நன்மை அளிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. பாரம்பரியமான விருந்து, விசேஷ உணவுகளில் இலையில் வெல்லம் பரிமாறுவார்கள் அல்லது சாப்பிட்ட பின் சிறிய வெல்லத்துண்டை சாப்பிடச் சொல்லி வழங்குவார்கள். இதற்குக் காரணம், வெல்லம் செரிமானத்துக்கு உதவுகிறது.

* செரிமானத்துக்கு உதவக்கூடிய என்சைம்களை தூண்டி, அதிகரிப்பதுடன் சீக்கிரமாக செரிமானம் ஆக உதவுகிறது. அதுமட்டுமின்றி கிட்னி சம்பந்தப்பட்டப் பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

* வெள்ளத்தில் ஃபினாலிக் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்சைக் குறைத்து, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.* வயிறு, உணவுக் குழாய், குடல், மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல ஆகியவற்றை சுத்தம் செய்து ஆரோக்கியமாக சுவாசிக்கவும், செரிமானம் சீராகவும் உதவுகிறது.

* இரும்புச்சத்து மட்டுமல்லாமல், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் என்று உடலுக்குத் தேவைப்படும் அனைத்து சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.

Blood Donation : ஏன் இரத்த தானம் செய்ய வேண்டும் என்பதற்கான 7 முக்கிய காரணங்கள்..!

* வெல்லத்தில் இருக்கும் பொட்டாசியம் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட் அளவை சரியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது. நாள் முழுவதும் வளர்சிதை மாற்றத்தை வேகமாக வைத்து உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறதுவெல்லத்தை வைத்து செய்யக்கூடிய ஆரோக்கிய பானம்

தேவையான பொருட்கள்:

வெல்லம் – 2 முதல் 3 டீஸ்பூன்
சியா அல்லது சப்ஜா விதைகள்
எலுமிச்சை – 1
புதினா இலைகள்

செய்முறை: இரண்டு கப் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் வெல்லத்தை சேர்த்து, வெல்லம் நன்றாக கரையும் வரை கொதிக்க விடவும்.

10 முதல் 15 நிமிடங்களுக்கு ஆற வைக்கவும்.

வெல்ல நீர் ஆறியபிறகு அதில் எலுமிச்சைச் சாறை சேர்த்து நன்றாக கலக்கவும்

இன்னும் சில நிமிடங்கள் நன்றாக ஆறவிடவும். குடிப்பதற்கு முன்பு புதினா இலை மற்றும் ஊறவைத்த சியா சீட்ஸ் ஆகிய இரண்டையும் சேர்த்து குடிக்கலாம்.வழக்கமாக அருந்தும் லெமனேதுக்கு பதிலாக, இன்ஸ்டன்ட் புத்துணர்ச்சி தரும் எலுமிச்சை சாறுக்கு மாற்றாக வெல்லம் சேர்த்து பருகுவது என்பது மிகவும் ஆரோக்கியமானது.

ஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்ய உதவும் 5 உணவுகள் – ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரை

பானகம் என்று சொல்லப்படும் மற்றொரு பாரம்பரிய வெல்லம் சேர்க்கப்பட்ட பானம் உடல் வெப்பம் மற்றும் பித்தம் ஆகிய இரண்டையுமே குறைக்கிறது. பானகம் செய்ய, வெல்லத்தை நீரில் கரைத்து, கொஞ்சம் ஏலக்காய் தூள் மற்றும் ஒன்றிரண்டு துளசி இலை சேர்க்க வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Jaggery, Sugar

அடுத்த செய்தி