இயற்கையாக கருத்தரிக்க முடியாத பெண்களுக்கு பலவிதமான கருத்தரிப்பு முறைகள் உதவியாக இருக்கின்றன. செயற்கைக் கருத்தரிப்பு முறைகளில் எந்த வகையைத் தேர்ந்தெடுத்தாலும் அதைப்பற்றி கருத்தரிப்பு முறைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து உங்களுக்கு எந்த சிகிச்சை சரியாக இருக்கும் என்பதை தேர்வு செய்வது முதல் கட்டம்.
ஃபெர்டிலிட்டி மருத்துவமனைக்கு நீங்கள் முதன்முறையாக செல்லும் பொழுது கொஞ்சம் அச்சமும் பதட்டமும் ஏற்படுவது இயல்புதான். அது மட்டுமல்லாமல் சிகிச்சை தொடங்குவதற்கு முன்பிலிருந்து குழந்தை பெறுவது வரை, பல விஷயங்களை உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும். IVF சிகிச்சைக்கான முதல் அப்பாயிண்ட்மென்டிலேயே நீங்கள் பல விஷயங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
உங்கள் மருத்துவர் IVF சிகிச்சையை பரிந்துரைத்தால் உங்கள் மருத்துவரிடம் நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய ஆறு முக்கியமான விஷயங்கள் இங்கே
நீங்கள் தேர்வு செய்த கிளினிக்கின் IVF சிகிச்சை முறை எந்த அளவுக்கு வெற்றிபெற்றது
நீங்கள் ஒரு ஃபெர்டிலிட்டி கிளினிக்கை தேர்வு செய்திருந்தால், உங்கள் மருத்துவரிடம் கேட்க வேண்டிய முதல் கேள்வியே IVF சிகிச்சை எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருந்துள்ளது என்பதுதான். இதைத் நீங்கள் தெரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் IVF சிகிச்சை மேற்கொள்ளலாமா அல்லது வேண்டாமா என்ற முடிவை தெளிவாக எடுக்க முடியும்.
இந்தியா போன்ற சில நாடுகளில் ஐவீஎஃப் மருத்துவமனைகளுக்கு, வெற்றி விகிதம் சார்ந்த குறிப்பிட்ட ஒழுங்குமுறை அல்லது அமைப்பு எதுவும் இல்லை. எனவே நீங்கள் சிகிச்சை பெற போகும் அந்த மருத்துவமனையில் IVF சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களின் விகிதம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
சிகிச்சையின் போது மேற்கொள்ள வேண்டிய மருத்துவப் சோதனைகள்
சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு உங்களுடைய உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். IVF சிகிச்சையை மேற்கொள்ளும் தம்பதிகள் பலவித மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். தொற்று ஏதேனும் இருக்கிறதா, ரத்த சர்க்கரை அளவு, ப்ளட் குரூப், ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு இருக்கிறது, ஹார்மோன் சோதனைகள் உள்ளிட்ட பல விதமான சோதனைகளை எடுத்து உங்கள் உடல் சிகிச்சை பெறுவதற்கு தயாராக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எனவே நீங்கள் எந்த மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றிய முழு விவரத்தையும் உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
சிகிச்சையின் கால அளவு
IVF சிகிச்சை வெற்றி விகிதம் என்பது பலவித காரணங்களால் அளவிடப்படுகிறது. ஒருசிலருக்கு முதல் முயற்சியிலேயே கரு உண்டாகி, கருவில் குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்து குழந்தை பிறந்து விடும். ஒரு சிலருக்கு இரண்டு அல்லது மூன்று முறை சிகிச்சை தோல்வியடைந்து அதற்கு பின்னர் தான் கரு உண்டாகும். எனவே எந்த மாதிரி காரணிகள் சிகிச்சையின் காலத்தை தீர்மானிக்கும் என்பதை பற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். அது மட்டுமில்லாமல் சிகிச்சை தொடங்கியவுடன் குழந்தை பெறுவது வரை தோராயமாக காலம் ஆகும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு ஏற்றார்போல உங்களுடைய வீடு, வேலை, பயணங்கள் உள்ளிட்ட மற்ற திட்டங்களை நீங்கள் மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
உறைந்த எம்ப்ரியோவா அல்லது ஃபிரெஷ்ஷான எம்ப்ரியோவா
ஒரு சிலர், முன்கூட்டியே எம்ப்ரியோவை உறைய வைக்கும் விருப்பத்தை மேற்கொள்கிறார்கள். உங்களுக்கு அது பொருந்துமா அல்லது ஃபிரெஷ்ஷான கருமுட்டையை பயன்படுத்த வேண்டுமா என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
IVF தோல்வியடைந்தால் மாற்று சிகிச்சை முறைகள்
எல்லோருக்கும் IVF சிகிச்சை வெற்றி அடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு பலமுறை முயற்சி செய்தும் சிகிச்சை வழியாக கருத்தரிக்க முடியாமல் போகும் சாத்தியமும் இருக்கின்றது. அது மட்டும் இல்லாம IVF சிகிச்சை என்பது உடல் ரீதியாக மன ரீதியாக பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும். எனவே சிகிச்சை தோல்வி அடையக்கூடிய சாத்தியம் இருக்கிறதா என்பதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் நீங்கள் வெளிப்படையாக பேச வேண்டும்.
வீக்கம், எரிச்சல், இரத்தக் கசிவு... பெண்ணுறுப்பு விஷயத்தில் நீங்கள் தவிர்க்க கூடாத 6 பிரச்சனைகள்...
ஒருவேளை IVF தோல்வியடைந்தால் அதற்கு மாற்று வழிகள் என்ன இருக்கிறது என்பதைப் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் சிகிச்சை பற்றி சரியான புரிதல் இல்லாமல் சிகிச்சை மேற்கொள்பவர்கள் மிகப் பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாகி, மன ரீதியாக தீவிரமாக பாதிக்கப்படுகிறார்கள். இதை தவிர்ப்பதற்கு நீங்கள் முன்கூட்டியே மாற்று வழிகளையும் யோசித்து வைப்பது சிறந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IVF Treatment, Women Health