கம்பியூட்டர் அல்லது மொபைல் ஸ்கிரீனில் அதிக நேரம் செலவிடுவதால் கண்கள் பாதிக்கப்படும் என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அலுவலகம், கடைகள் மற்றும் வீடுகள் என பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படும் ஏசி-க்களும் கண்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? உடலின் உணர்திறன் வாய்ந்த பகுதியாக இருப்பதால், கண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன.
கண் வறட்சி, சிவத்தல், அரிப்பு, எரிச்சல், கண் சோர்வு, தொடர் தலைவலி மற்றும் பார்வை மங்கலாதல் உள்ளிட்டவற்றுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஏர் கண்டிஷனர். ஏசி-க்கள் செயற்கையான வெப்பநிலை மாற்றத்தை உருவாக்குகின்றன,இது ஆரோக்கியமற்றது. குளிரூட்டப்பட்டரூம்களில் கம்பியூட்டர்களுக்கு முன்னால் அதிக மணிநேரம் செலவழிப்பது நம் கண்கள் பெரிதும் பாதிப்பதாக கூறப்படுகிறது.
ஏர்-கண்டிஷனர்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, ஈரப்பதத்தை குறைக்கின்றன. இது ஆவியாகும் உலர் கண்களுக்கு (evaporative dry eyes) வழிவகுக்கிறது. பிரபல கண் மருத்துவரான டாக்டர் தன்வி ஷாவின் கூற்றுப்படி, நீண்ட நேரம் ஏசி ரூமில் அமர்வது கண் இமைகளில் உள்ள சுரப்பிகளில் இருந்து லிப்பிட் உற்பத்தியை மாற்றுகிறது. இது கண்ணீர்ப் படலத்தின் தரம் மற்றும் அளவு ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும், இறுதியில் கண்கள் வறண்டு போக வழிவகுக்கும் என கூறுகிறார்.
மேலும் லேசான வறண்ட கண்கள் நீர் வடிதல் மற்றும் கண்கள் சிவத்தல் உள்ளிட்டவற்றுக்கு வழிவகுக்கும். இது போன்ற பாதிப்புகளுக்கு லூப்ரிகேட்டிங் டிராப்ஸ் மூலம் சிகிச்சை பெறலாம். சில நேரங்களில் கடுமையான கண் வறட்சியின் போது, தொடர்ச்சியான நீர் வெளியேற்றம் மற்றும் ரத்த சிவப்பிலான கண்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இந்த சந்தர்பங்களில், கண் இமைகளில் உள்ள மீபோமியன் சுரப்பிகளின் (Meibomian glands)அளவை சரிபார்ப்பது முக்கியமானது.
அதே போல ஏசி-க்கள் சரியாக பராமரிக்கப்படாத போது, ஏசி-க்களில் அதிக நேரம் அமர்வது கண்ணில் பாக்டீரியா, பூஞ்சை அல்லது வைரஸ் தொற்றுகளுக்கு வழிவகுக்கும். இவை கண்களில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன, கார்னியல் அல்சருக்கும் வழிவகுக்கும் தீவிரமில்லா கட்டங்களில் புண்களுக்கு சிகிச்சை அளிக்கலாம், ஆனால் நிலைமை தீவிரமானால் கார்னியல் மாற்று அறுவை சிகிச்சை (corneal transplant) தேவைப்படலாம்.
சும்மா கொடுத்தால் கூட 8 மணிக்கு மேல் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... உயிருக்கே ஆபத்தாகலாம்..!
முக்கியமாக 8 -10 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக கம்பியூட்டர் முன் ஏசி அறையில் அமர்ந்து வேலை செய்யும் நபர்கள் வறண்ட கண்கள் இருப்பதாக புகார் கூறுவதாக குறிப்பிட்ட தன்வி ஷா, தொற்றுக்கு பின் வறண்ட கண்கள் தொடர்பாக புகாரளிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏனெனில் வேலை மற்றும் கல்வி இரண்டும் ஆன்லைனில் சென்றுள்ளது முக்கிய காரணம். சிறியவர்களுக்கு கூட வறண்ட கண்கள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்கிறார். AC-ஆல் கண்களுக்கு ஏற்படும் சிக்கல்களை குறைக்க அவற்றுக்கு அருகில் இருப்பதை தவிர்ப்பது, குறித்த நேரமே பயன்படுத்துவது, அறை வெப்பநிலையை 23 டிகிரி செல்சியசில் பராமரிப்பது, கண்ணாடி அணிவது உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.
ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை ஸ்கிரீனில் இருந்து கண்களை விலக்கி குறைந்தபட்சம் 20 அடி தூரத்தில் உள்ள ஒன்றைப் பார்க்க 20-வினாடி இடைவெளி எடுத்து கொள்ளும் 20 - 20 - 20 விதியையும் பின்பற்ற நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். எல்லாவற்றையும் விட ஏசி பராமரிப்பு முக்கியம் என்றாலும், ஏசி அறையின் மூலையில் ஒரு கன்டெயினரில் தண்ணீரை வைக்க வேண்டும், அது ஆவியாகி ஈரப்பதத்தை அதிகரிக்கும், கண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை குறைக்க பெரிதும் உதவும் என பரிந்துரைக்கப்படுகிறது.
மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதா..? எப்படி சாப்பிட வேண்டும்..?
அதிக திரவங்களை (தண்ணீர், பழச்சாறுகள் மற்றும் பால்) உட்கொள்வதன் மூலம் உடலின் நீரேற்றத்தை பராமரிக்கவும் பரிந்துரைத்துள்ளார் தன்வி ஷா. குறைந்தபட்ச பரிந்துரைக்கப்பட்ட திரவ உட்கொள்ளல் ஒரு நாளைக்கு 2 -3 லிட்டர் ஆகும். எவ்வாறாயினும் ஏசி-யில் உட்காருவதால் உங்கள் கண்கள் பாதிக்கப்படுவதை கண்டால் உடனடியாக ஒரு கண் மருத்துவரை அணுகவும். கண்களின் வறட்சியின் தீவிரத்தை சரிபார்த்து அதற்கேற்ப அவர் சிகிச்சை அளிப்பார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AC, Eye Problems