முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உங்க குழந்தை அடிக்கடி கண்களை கசக்கிட்டே இருக்காங்களா..? வறட்சியாக இருக்கலாம்..!

உங்க குழந்தை அடிக்கடி கண்களை கசக்கிட்டே இருக்காங்களா..? வறட்சியாக இருக்கலாம்..!

வறண்ட கண்கள் எனப்படும் Dry eye

வறண்ட கண்கள் எனப்படும் Dry eye

மோசமான ஊட்டச்சத்து, நீண்ட நேரம் மொபைல், லேப்டாப் உள்ளிட்ட டிஜிட்டல் டிவைஸ்களின் ஸ்கிரீன்களை பார்ப்பது மற்றும் வறண்ட வானிலை, புகை அல்லது மாசுபாட்டால் ஏற்படும் அலர்ஜி போன்ற பல காரணங்களால் குழந்தைகளின் கண்கள் நீரின்றி வறண்டு போகலாம்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கண்கள் வறண்டு போவது என்பது பெரியவர்களுக்கு மட்டுமல்ல சமீப காலமாக குழந்தைகள் மற்றும் டீனேஜர்ஸ் இடையே காணப்படும் பொதுவான சிக்கலாக மாறி வருகிறது.

மோசமான ஊட்டச்சத்து, நீண்ட நேரம் மொபைல், லேப்டாப் உள்ளிட்ட டிஜிட்டல் டிவைஸ்களின் ஸ்கிரீன்களை பார்ப்பது மற்றும் வறண்ட வானிலை, புகை அல்லது மாசுபாட்டால் ஏற்படும் அலர்ஜி போன்ற பல காரணங்களால் குழந்தைகளின் கண்கள் நீரின்றி வறண்டு போகலாம். சில நேரங்களில் இது மிகவும் தீவிரமான நிலையின் அறிகுறியாகவும் இருக்கலாம். பெரியவர்களை போலவே குழந்தைகளுக்கும் வறண்ட கண்கள் எரிச்சலாக, சங்கடமாக மற்றும் சில நேரங்களில் வலி ஏற்படுத்துவதாக இருக்கும். இந்த நிலை அவர்களின் பார்வை திறனை பாதிப்பதோடு, படிப்பினிலும் செயல் திறனை பாதிக்க கூடும்.

குழந்தைகளுக்கு இந்த சிக்கல் ஏற்பட பொதுவான காரணங்கள்:

கண் எரிச்சல், கண்கள் சிவப்பாக மாறுவது, கண்ணுக்குள் அரிப்பது, மங்கலான பார்வை, ஒளியை பார்த்தால் கண்கள் கூசுவது உள்ளிட்ட பல அறிகுறிகளை கொண்டிருக்கும் வறண்ட கண்கள் எனப்படும் Dry eye, குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கான சில பொதுவான காரணங்கள் கீழே...

- கான்டாக்ட் லென்ஸ் அணிவது

- ஊட்டச்சத்து குறைபாடு

- டிஜிட்டல் டிவைஸ்களின் அதீத பயன்பாடு

- விழி வெண்படல அழற்சி

அறிகுறிகள்:

குழந்தைகளுக்கு தங்கள் கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளை தெளிவாக சொல்ல தெரியாது. கண்களில் அசௌகரியம் ஏற்பட்டால் அவர்கள் கண்களை அழுத்தி தேய்ப்பார்கள். இதனால் சிக்கல் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. எனவே பெற்றோர்கள் தான் குழந்தைகளை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும்.

- அடிக்கடி கண்களை சிமிட்டி கொண்டே இருப்பார்கள்

- கண்களை சுற்றியுள்ள பகுதி சிவக்கலாம்

- கண்களை அழுத்தி தேய்த்து கொண்டே இருப்பார்கள்

- கண்களில் மற்றும் கண்களைச் சுற்றி எரிச்சல் உணர்வை கொண்டிருப்பார்கள்

- பார்வை அடிக்கடி மங்கலாவதாக கூற கூடும்

- படிப்பதில் சிரமம், காட்சி கவனம் தேவைப்படும் விஷயங்களில் சிரமம்

வீட்டிலேயே எப்படி சிகிச்சை அளிப்பது எப்படி..?

போதுமான தூக்கம் கண்களில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும் என்பதால் தினசரி 8 - 9 மணி நேரம் உங்கள் குழந்தை தூங்குவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
தினசரி உங்கள் குழந்தை போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
குழந்தைகளின் கண்கள் வறண்டு போவதற்கு சுற்றுச்சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகள் இருக்கும் போது சிகரெட் புகைக்காதீர்கள். வெளியில் அதிக காற்று வீசும் சமயம் குழந்தைகளை வெளியில் விடாமல் வீட்டிற்குள் இருக்க செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளை ஒரு நாளைக்கு குறைந்தது 4 முறை ஆர்ட்டிஃபீஷியல் டியர்ஸை பயன்படுத்த செய்யுங்கள்.
தினமும் காலை உங்கள் குழந்தையின் கண் இமைகளில் மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் துணியை நனைத்து ஒத்தடம் கொடுக்கவும். பின் கண்களின் மேல் லேசாக மசாஜ் செய்யவும்.
உங்கள் குழந்தை கான்டாக்ட் லென்ஸ் அணிபவர் என்றால் அவருக்கு ரீவெட்டிங் ட்ராப்ஸ்களை போட்டு விடவும்.
உங்கள் குழந்தை படுக்கும் அறையில் Humidifier (ஈரப்பதமூட்டும் இயந்திரம்) பயன்படுத்துங்கள்.
காற்று, தூசி மற்றும் அழுக்கிலிருந்து குழந்தைகளின் கண்களை பாதுகாக்க, அவர்கள் வெளியே செல்லும் போது சன்கிளாஸ், தொப்பி அல்லது குடையை பயன்படுத்த ஊக்குவியுங்கள்.
First published:

Tags: Dry Eye, Eye care, Kids Health