Home /News /lifestyle /

கர்ப்பிணிகள் மீன் எண்ணெய் மற்றும் வைட்டமின் டி சப்ளிமென்ட்ஸ் எடுப்பது நல்லதா..?

கர்ப்பிணிகள் மீன் எண்ணெய் மற்றும் வைட்டமின் டி சப்ளிமென்ட்ஸ் எடுப்பது நல்லதா..?

வைட்டமின் டி மற்றும் மீன் எண்ணெய் குழந்தை பருவத்தில் ஏற்படும் croup தொற்றுக்கு எதிராக பயனுள்ளதாக இருப்பதை காட்டியுள்ளன

வைட்டமின் டி மற்றும் மீன் எண்ணெய் குழந்தை பருவத்தில் ஏற்படும் croup தொற்றுக்கு எதிராக பயனுள்ளதாக இருப்பதை காட்டியுள்ளன

வைட்டமின் டி மற்றும் மீன் எண்ணெய் குழந்தை பருவத்தில் ஏற்படும் croup தொற்றுக்கு எதிராக பயனுள்ளதாக இருப்பதை காட்டியுள்ளன

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் மீன் எண்ணெய் மற்றும் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்து கொள்வது கருவிலிருக்கும் போது மற்றும் பிறந்த பின் அவர்களது குழந்தைகளுக்கு croup தொற்று உருவாகும் வாய்ப்பை வெகுவாக குறைப்பதாக ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

croup என்பது இளம் குழந்தைகளை பாதிக்கும் ஒரு வைரஸ் மார்பு தொற்று ஆகும். இந்த தொற்று ஏற்பட்டால் சத்தமாக குறைப்பது போன்ற ஒலியுடன் கூடிய பார்க்கிங் இருமல் (barking cough), கரகரப்பான குரல் மற்றும் சுவாசிப்பதில் கடும் சிரமம் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறது. பொதுவாக இந்த தொற்று லேசானது என்றாலும், சில நேரங்களில் குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை மற்றும் சுவாச ஆதரவு கொடுக்க நேரிடும். இந்த நோயை ஏற்படுத்தும் நோய்க்கிருமிக்கு எதிராக தற்போது தடுப்பூசி எதுவும் இல்லை.

இந்நிலையில் சமீபத்திய இந்த புதிய ஆய்வு முடிவுகள் ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள European Respiratory Society International Congress-ல் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையில் ,கர்ப்ப காலத்தில் மீன் எண்ணெயை எடுத்து கொண்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு ஆலிவ் எண்ணெய்யை உட்கொண்ட தாய்மார்களின் குழந்தைகளை விட croup ஏற்படும் வாய்ப்பு சுமார் 38 சதவீதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளில் croup ஏற்படுவதால், கர்ப்ப காலத்திலேயே தொடங்கப்படும் நடவடிக்கைகள் முக்கியமானதாக இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.



இந்த ஆய்விற்காக சில ஆண்டுகளாக COPSAC மூலம் 736 கர்ப்பிணிப் பெண்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் பங்கேற்ற பெண்கள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இதில் முதல் குழுவிற்கு 2800 இன்டர்நேஷ்னல் யூனிட் வைட்டமின் டி சப்ளிமெண்ட் மற்றும் long-chain n-3-polyunsaturated fatty acids கொண்ட 2.4 கிராம் மீன் எண்ணெய் வழங்கப்பட்டது.

இரண்டாவது குழுவிற்கு அதிக அளவு வைட்டமின் டி மற்றும் ஆலிவ் ஆயில் டயட்டில் வழங்கப்பட்டது. மூன்றாவது குழுவிற்கு ஒரு நாளைக்கு 400 இன்டர்நேஷ்னல் யூனிட் டோஸ் வைட்டமின் டி மற்றும் மீன் எண்ணெய் வழங்கப்பட்டது. கடைசி குழுவில் இருந்த கர்ப்பிணிகளுக்கு நாளொன்றுக்கு 400 இன்டர்நேஷ்னல் யூனிட் டோஸ் வைட்டமின் டி மற்றும் ஆலிவ் ஆயில் வழங்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற அனைத்து கர்ப்பிணிகளும் தங்கள் கர்ப்பத்தின் 24-வது வாரத்தில் இருந்து தங்கள் குழந்தை பிறந்த ஒரு வாரம் வரை தினமும் இந்த சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்துக் கொண்டனர்.

Read More : கர்ப்பிணிகள் இந்த ஜூஸ் வகைகளில் தினம் ஒன்று குடித்து வந்தால் கரு வளர்ச்சிக்கு நல்லது..!

இவர்களது குழந்தைகள் 3 வயது வரை கண்காணிக்கப்பட்டதில் சுமார் 97 குழந்தைகளுக்கு மட்டுமே croup தொற்று ஏற்பட்டது. 4 குழுக்கள் என்று பிரித்து பார்க்கும் போது மீன் எண்ணெயை எடுத்துக் கொண்ட தாய்மார்களின் குழந்தைகளில் croup ஏற்படும் அபாயம் 11% இருப்பது கண்டறியப்பட்டது. ஆலிவ் ஆயில் கொடுக்கப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளில் இது 17% ஆகும். அதே போல தாய்மார்களில் அதிக அளவு வைட்டமின் டி எடுத்து கொண்ட குழந்தைகளுக்கு croup அபாயம் 11% உள்ளது.



அதே சமயம் நிலையான டோஸ் வைட்டமின் டி (400 இன்டர்நேஷ்னல் யூனிட்) எடுத்து கொண்ட தாய்மார்களின் குழந்தைகளில் croup அபாயம் 18% ஆகும். தங்கள் ஆய்வின் கண்டுபிடிப்புகள் பற்றி கூறி இருக்கும் ஆய்வாசிரியர் Brustad, வைட்டமின் டி மற்றும் மீன் எண்ணெய் குழந்தை பருவத்தில் ஏற்படும் croup தொற்றுக்கு எதிராக பயனுள்ளதாக இருப்பதை காட்டியுள்ளன.

மேலும் இவை இரண்டுமே ஒப்பீட்டளவில் மலிவான சப்ளிமெண்ட்ஸ். அதாவது கர்ப்பிணிகள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மிகவும் செலவு குறைந்தவையாக இருக்கும் என்றார். இதனிடையே பொதுவாக மீன் எண்ணெய் மற்றும் வைட்டமின் டி கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை என்றாலும், எந்தவொரு கூடுதல் மருந்துகளையும் எடுக்கும் முன்பு தங்கள் மகளிர் மருத்துவ நிபுணரை கர்ப்பிணிகள் கலந்தாலோசிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

 
Published by:Elakiya J
First published:

Tags: Fish Oil, Pregnancy

அடுத்த செய்தி