விரதத்தின் போது காஃபி , டீ அருந்துகிறீர்களா..?

விரதத்தின் போது பால் , சர்க்கரை இல்லாமல் பிளாக் காஃபி, பிளாக் டீ குடிக்கலாம். தேவைப்பட்டால் குறைந்த அளவில் சர்க்கரை சேர்த்துக்கொள்ளுங்கள்.

news18
Updated: August 13, 2019, 10:33 PM IST
விரதத்தின் போது காஃபி , டீ அருந்துகிறீர்களா..?
விரதத்தின் போது காஃபி , டீ அருந்துகிறீர்களா
news18
Updated: August 13, 2019, 10:33 PM IST
விரதம் என்பது இந்தியர்களின் பாரம்பரிய பழக்கம் என்றாலும் அது மருத்துவ ரீதியாகவும் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக் கூடியது.

பொதுவாக விரதத்தின் போது, திடப் பொருள், அசைவம், உப்பு, வெங்காயம், பூண்டு, அரிசி என சுவை தரும் எதுவும் சாப்பிடக் கூடாது என்பது எழுதப்படாத விதிமுறைகளாகும். அதற்கு பதிலாக டீ, காஃபி, பழச்சாறு என திரவப் பொருட்களை மட்டும் பருகலாம். இதில் குறிப்பாக பெண்கள் அதிகமாக அருந்துவது காஃபி , டீ தான். ஆனால் விரதம் அதாவது வெறும் வயிற்றில் டீ , காஃபி அருந்தலாமா.. அது நல்லதா..?

விரதம் இருக்கும் போது உடல் நச்சுத் தன்மைகளை நீக்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கும். அந்த சமயத்தில் சர்க்கரை கலந்த பானங்களை அருந்துவது தவறு என்கின்றனர் மருத்துவர்கள். விரதத்தை முடித்துவிட்டு நீங்கள் திடப்பொருட்களை உண்ணும்போது இந்த கஃபைன் , சர்க்கரை கலந்த பானம் ஆரோக்கியத்தை பாதிக்கும்.


பொதுவாக வெறும் வயிற்றில் காஃபி, டீ அருந்துவது நெஞ்சு எரிச்சல், வாயுத் தொல்லையை அதிகரிக்கும் என்பார்கள். அதுவும் மூன்று, நான்கு என இடைவிடாது நீண்டு கொண்டே போனால் அது உடல் ஆரோக்கியத்தைக் கடுமையாக பாதிக்கும். நச்சு நீக்கும் செயலையும் பாதிக்கும்.காஃபி, மற்றும் டீயில் உள்ள கஃபைன் அதிகமாக உட்கொள்ளும்போது உடல் சோர்வு , பதட்டம், அழுத்தம் உண்டாகும் என்பது பரவலான மருத்துவ ஆய்வு சொல்லும் கருத்து. அந்த வகையில் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் குறைந்த அளவில் அதுவும் சர்க்கரை இல்லாமல் குடிப்பது நல்லது. பாலையும் தவிர்க்கலாம் என்கிறனர் மருத்துவர்கள். எனவே விரதத்தின் போது பால் , சர்க்கரை இல்லாமல் பிளாக் காஃபி, பிளாக் டீ குடிக்கலாம். தேவைப்பட்டால் குறைந்த அளவில் சர்க்கரை சேர்த்துக்கொள்ளுங்கள். அதுவும் மூன்று கப்பிற்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

Loading...

இவற்றை விட சிறந்த வழி..மருத்துவர்களின் அறிவுரை ..விரதத்தின்போது நிறைய தண்ணீர் அருந்துவதுதான். அதேபோல் இளநீரும் குடிக்கலாம். இவை இரண்டில்தான் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கக் கூடிய ’எலெக்ட்ரோலைட்ஸ்’ அதிகமாக உள்ளன. அதுவே உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...