சமீப காலமாக இந்தியாவில் மாரடைப்பால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் இளம் வயதினர் பலரும் மாரடைப்பால் உயிரிழப்பது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் கொரோனா தடுப்பூசி தான் எனவும் சிலர் கூறி வருகின்றனர். எனவே இது பற்றி ஆராய்ச்சியை நடத்தியுள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்.
மேலும் அதிகரித்து வரும் மாரடைப்புகளுக்கு முக்கிய காரணமாக, கொரோனா தொற்றுக்காக போடப்பட்ட தடுப்பூசிகள் தான் காரணம் என பல நம்பி வரும் நிலையில், இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கமே கொரோனா தடுப்பு ஊசியையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பை கண்டறிவது தான் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் பல சமூக வலைத்தளங்களிலும் மக்கள் சிலர் கேமராவில் பதிவாகும்படி திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். சாதாரணமாக நடந்து கொண்டிருக்கும் போதும், மகிழ்ச்சியாக நடனமாடி கொண்டிருக்கும் போதும், உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதும் பலர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப் பற்றி பேசிய மருத்துவர் ஒருவர் கூறுகையில் மக்கள் தங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருந்தால், அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இன்றைய காலத்தில் மாரடைப்பானது எந்த வயதினருக்கும் வரலாம். மேலும் சரியான கால இடைவெளியில் உடல் நிலையை சோதனை செய்து கொள்வதும் நல்லது என கூறியுள்ளார்.
இதைத் தவிர சமீபத்தில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த இளம் வயதினரின் உடலை உடற்கூராய்வுக்கு உட்படுத்தியும் மாரடைப்பிற்கான காரணங்களை கண்டறிய முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும் அவர்களது குடும்பத்தினருக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளனவா என்பதற்கான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. சில மாரடைப்புகள் மரபு வழியில் ஏற்படக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாரடைப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதிக அளவில் வேலை செய்யாமல் இருப்பது, மன அழுத்தம், அதிக அதிகளவிலான சர்க்கரை மற்றும் உப்பு கலந்த உணவுகளை உட்கொள்வது, அதிகளவிலான கொழுப்பு ஆகியவை இதயத்தில் பாதிப்பை உண்டாக்கும். இதுபோன்ற பிரச்சனைகளால் மாரடைப்பு உண்டாக்கலாம்.
உலக சுகாதார நிறுவனததின் அறிக்கைப்படி உலக அளவில் 1.79 கோடி மக்கள் இதய பிரச்சினை சம்பந்தப்பட்ட நோயினால் உயிரிழக்கின்றனர். அதில் இந்தியாவில் மட்டும் 35 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் இளம் வயதினரிடையே மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொற்றிலிருந்து மீண்டதிலிருந்து ஒரு வருட காலம் வரை மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read : சர்க்கரை நோய் இருக்கவங்க கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க டிப்ஸ்..!
கொரோனா தொற்று இரண்டு வகையில் இதயத்தை தாக்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதலில் தொற்றினால் நேரடியாக இதயத்தின் தசைகள் வலுவிழந்து அதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவது. இரண்டாவது கொரோனா தொற்று சரியான பிறகும் சில மாதங்கள் வரை நோயினுடைய லேசான தாக்கம் உடலில் இருக்கும். தொற்று உடலில் முழுதும் சரியாகாமல் இருப்பதால், சில நேரங்களில் அவை ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு உண்டாவதற்கு வழி வகுக்கலாம்.
சமீப காலங்களில் உடற்பயிற்சி செய்யும் போது பல திடீர் மாரடைப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கெல்லாம் நீண்ட நாட்களாக கொரோனா தொற்று உடலிலேயே இருந்து, அதன் காரணமாக இதயத்தின் தசைகள் வலுவிழந்து மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர் ஒருவர் தனது கருத்தை குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Covid-19 vaccine, Heart attack