Home /News /lifestyle /

மன ஆரோக்கியத்திற்கும் உடல் பருமனுக்கும் இடையே தொடர்பு உள்ளதா..!

மன ஆரோக்கியத்திற்கும் உடல் பருமனுக்கும் இடையே தொடர்பு உள்ளதா..!

எடை குறைத்தல்

எடை குறைத்தல்

Health Tips | உடல் பருமன் என்பது இதய பிரச்சனைகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனைகள் மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். அதே நேரத்தில் உடல் பருமன் மற்றும் மனநல பிரச்சனைகள் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கின்றன .

மேலும் படிக்கவும் ...
    உடல் பருமன் என்பது அதிகப்படியான கொழுப்பை உள்ளடக்கிய ஒரு சிக்கலான நோயாக கருதப்படுகிறது. ஒருவரின் உடல் நலனை மட்டுமல்ல மன நலனையும் கூட உடல் பருமன் பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா.?

    ஏனென்றால் உடல் பருமன் மற்றும் மனநலப் பிரச்சினைகளுக்கு இடையே நீண்ட கால தொடர்பு உள்ளது. அதிக எடையுடன் இருப்பது ஒருவருக்கு எண்ணற்ற உடல்நல குறைபாடுகள் வர காரணமாக இருக்கின்றன. உடல் பருமன் கொண்டவர்களில் கிட்டத்தட்ட சுமார் 70-80% பேருக்கு மனம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். உடல் பருமனுக்கும் மன ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பை இங்கே டிகோட் செய்கிறோம்.

    அதிக எடையுடன் இருக்கும் ஒருவருக்கு உடல்பருமன் எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்தும். மனநல கோளாறுகள் மற்றும் மனநல நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பல மருந்துகளுடன் உடல் பருமன் தொடர்புடையது என்பதற்கான சான்றுகள் உள்ளன. மனச்சோர்வு மற்றும் உடல் பருமன் ஆகிய இரண்டிற்கும் மன அழுத்தம் ஒரு காரணியாகும்.உடலில் வலி மற்றும் அழற்சியை உடல் பருமன் அதிகரிக்கிறது. இதுவும் மன அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது.

    மிக அதிக உடல் எடையுடன் இருக்கும் சிலர் தனிமையான உணர்வு, சுயமரியாதை இல்லாதது போல உணர்வு, மற்றும் விரக்தி உள்ளிட்டவற்றுக்கு ஆளாகுகின்றனர். உடல் பருமனாக இருப்பதால் ஏளனத்திற்கு உள்ளாகும் பலர் இயல்பாகவே மனதளவில் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். உடல் பருமனாக இருப்பவர்கள் தங்கள் தோற்றத்தில் திருப்தியடையாமல், எப்படி இருக்கிறோம் என பிறர் தங்களை மதிப்பிட்டு கொண்டே இருக்கிறார்களே என்ற கவலையை அனுபவிக்கின்றனர்.

    Read More : இதய ஆரோக்கியதற்கு முட்டை நல்லதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!


    அதிக எடையுடன் இருக்கும் ஒருவர் விரக்தியாக, கோபம் மற்றும் வருத்தமாக இருக்கலாம். கடினமான உணர்ச்சிகளை பற்றி அறிந்திருப்பது அவற்றைக் கையாள்வதற்கான முதல் படியாகும். உணர்ச்சிகளை அடையாளம் காண பயிற்சி தேவை. பல ஆய்வுகள் உடல் பருமன் மற்றும் மனச்சோர்வு, உணவுக் கோளாறுகள், பதட்டம் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு மனநலப் பிரச்சினைகளுக்கு இடையே நேர்மறையான தொடர்பை நிரூபித்துள்ளன. தனிநபர்களின் வாழ்க்கைத் தரத்தை உடல் பருமன் பெரிதும் பாதிக்கிறது.

    அதிக எடை அல்லது உடல் பருமனாக இருக்கும் ஒருவருக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை நடைமுறைகளை கடைப்பிடிப்பதில் , மனநல சவால்கள் ஒரு தடையாக இருக்கலாம். எனினும் நல்ல செய்தி என்னவெனில் மிதமான எடை இழப்பு கூட உடல் பருமனுடன் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகளை மேம்படுத்தலாம் அல்லது தடுக்கலாம். ஒருவரின் பிஎம்ஐ நிலை குறைவாக இருந்தால், உணவு மாற்றங்கள், நல்ல இரவு தூக்கம், அதிகரித்த உடல் செயல்பாடு மற்றும் பழக்க வழக்க மாற்றங்கள் எடை இழப்புக்கு உதவும்.

    ஆனால், பிஎம்ஐ 30-க்கு மேல் இருந்து உடல் பருமனால் மனநல பாதிப்புகளும் இருந்தால், ஆலோசனையுடன் கூடிய பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு சிறந்த முடிவுகளை அளிக்கும். தவிர யோகா மற்றும் தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் பெரும் உதவியாக இருக்கும்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Health, Lifestyle, Weight loss

    அடுத்த செய்தி