ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

காற்று மாசுபாடு நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்குமா..? - நிபுணர்களின் கருத்து என்ன?

காற்று மாசுபாடு நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்குமா..? - நிபுணர்களின் கருத்து என்ன?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும் முக்கியமான வைட்டமின் டி குறைபாடு குளிர்காலத்தில் அதிகம் காணப்படுவதால் உடலில் கிருமிகள் நுழைந்தால் அதனை எதிர்த்து போராடும் செல்களின் திறன் வெகுவாக குறைகிறது. இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் எளிதில் வலுவிழக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நன்கு செயல்படும் ஆரோக்கியான நோய் எதிர்ப்பு மண்டலம் தான் ஒருவரது ஆரோக்கியமான உடலுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவிழக்க செய்வதில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கங்கள், சீரற்ற உணவு பழக்கங்களை போலவே சுற்றுப்புற சூழலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது குளிர் சீசன் நெருங்கி வரும் நிலையில் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட கோளாறுகள் ஏற்பட காற்று மாசுபாடு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கும்போது வெளியே செல்வது சுவாச பாதையில் எரிச்சல், நீண்ட கால அழற்சி உள்ளிட்ட பல சிக்கல்களை ஏற்படுத்த கூடும். இறுதியில் ஏர் பொல்யூஷன் நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கிறது.

காற்றில் கலந்திருக்கும் நச்சு அல்லது மாசுக்களின் அளவு மிகவும் சிறியதாக இருப்பின் அது மூச்சு திணறல் & டஸ்ட் அலர்ஜியை ஏற்படுத்துவது மட்டுமின்றி நேரடியாக நுரையீரலை கூட சென்றடைய கூடும். இன்டர்னல் மெடிசின் நிபுணரான பிரபல மருத்துவர் நவோதயா கில்லா பேசுகையில், காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் இந்த ஆரம்ப அறிகுறிகளை துவக்கத்திலேயே கவனித்து சரி செய்யாவிட்டால் நீண்டகால ஆஸ்துமா அல்லது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் எனப்படும் COPD உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படலாம். ஏற்கனவே COPD-ஆல் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் அவரது நிலை காற்று மாசுபாடு அல்லது டஸ்ட் அலர்ஜியால் பாதிக்கப்பட்டால் இன்னும் மோசமாக கூடும் என்கிறார்.

குளிர் சீசனில் சூரியஒளி என்பது அவ்வப்போது மட்டுமே வெளிப்படும், அதுவும் குறைவாகவே இருக்கும் எனபதால் அந்த நீண்ட சீசனில் பலர் வைட்டமின் டி குறைபாட்டை எதிர் கொள்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும் முக்கியமான வைட்டமின் டி குறைபாடு குளிர்காலத்தில் அதிகம் காணப்படுவதால் உடலில் கிருமிகள் நுழைந்தால் அதனை எதிர்த்து போராடும் செல்களின் திறன் வெகுவாக குறைகிறது. இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் எளிதில் வலுவிழக்கிறது.

Read More : உஷார்.! இந்த அறிகுறிகள் இருந்தால் கவனிங்க.. சிறுநீரக செயலிழப்பா இருக்கலாம்!

தவிர குளிர் சீசனில் ஏற்படும் குறைந்த ரத்த அழுத்தம் நம்முடைய ரத்த நாளங்களை சுருக்குகிறது. இது பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு எதிராக போராடும் உயிரணுக்கள் உடலில் திறம்பட செயல்படுவதை கடினமாக்குகிறது எனவும் கூறி இருக்கிறார் நவோதயா கில்லா. எனவே காற்று மாசுபாடு காரணமாக உங்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட கூடாது என்றால் எப்போது வெளியில் சென்றாலும் மூக்கு மற்றும் வாயை கவர் செய்யும் வகையில் மாஸ்க் அணிந்து செல்வது அவசியம் என்றும் கூறி இருக்கிறார்.

இந்நிலையில் பெங்களூரு ஃபோர்டிஸ் மருத்துவமனையில் இன்டர்னல் மெடிசின் டைரக்டராக உள்ள பிரபல மருத்துவர் ஷீலா முரளி சக்ரவர்த்தி காற்று மாசுபாடு பற்றி பேசுகையில், குளிர்காலத்தில் பகல் & இரவு நேரங்களுக்கு இடையே காணப்படும் வெப்பநிலை வேறுபாடுகள் பாக்டீரியா தொற்றுக்கு ஒரு நல்ல ஊடகமாக இருக்கும் என்பதால் சளி உற்பத்தியும் அதிகமாகும். எனவே குளிர்காலத்தில் வைரஸ் தொற்றுகள் அதிகரித்து அவை இன்ஃப்ளூயன்ஸா ஏபி மற்றும் ஸ்வைன் ப்ளூ போன்ற கிராஸ்-இன்ஃபெக்ஷன்களை ஏற்படுத்தும் என்றார்.

First published:

Tags: Air pollution, Immunity, Mask