Home /News /lifestyle /

வயிற்று வலி கூட கொரோனா அறிகுறியா? வயிற்று பிரச்சனைக்கும் தொற்றுக்கும் உள்ள தொடர்பு என்ன?

வயிற்று வலி கூட கொரோனா அறிகுறியா? வயிற்று பிரச்சனைக்கும் தொற்றுக்கும் உள்ள தொடர்பு என்ன?

பலரும் இன்று காரசாரமான உணவைதான் விரும்புகிறார்கள். நாவூறும் சுவையில் இருக்கும் இந்த உணவுகளுக்கு காரம் சேர்பதில் முதன்மையானது சிவப்பு மிளகாய்தான். மிளகாய் தூள் இல்லாத குழம்பும் இந்திய சமையலில் இல்லை. எதுவாயினும் ஒரு லிமிட் வேண்டும் என்பதுபோல் காரம் சுவையை கொடுத்தாலும் அளவுக்கு அதிகமாக இருந்தால் அதுவும் ஆபத்துதான். அப்படி அதிகமாக சிவப்பு மிளகாய் பொடியை பயன்படுத்துவதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.

பலரும் இன்று காரசாரமான உணவைதான் விரும்புகிறார்கள். நாவூறும் சுவையில் இருக்கும் இந்த உணவுகளுக்கு காரம் சேர்பதில் முதன்மையானது சிவப்பு மிளகாய்தான். மிளகாய் தூள் இல்லாத குழம்பும் இந்திய சமையலில் இல்லை. எதுவாயினும் ஒரு லிமிட் வேண்டும் என்பதுபோல் காரம் சுவையை கொடுத்தாலும் அளவுக்கு அதிகமாக இருந்தால் அதுவும் ஆபத்துதான். அப்படி அதிகமாக சிவப்பு மிளகாய் பொடியை பயன்படுத்துவதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.

COVID 19 Symptom | இரைப்பை குடல் அறிகுறிகளுடன் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளிகள், மோசமாக பாதிக்கப்பட்ட மற்றும் லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளை விட அதிகமாக உள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகின் ஒட்டுமொத்த செயல்பாட்டையே புரட்டி போட்டது மட்டுமல்லாமல், நாம் உடல் நோய்களைப் பார்க்கும் விதத்தையும் மாற்றியுள்ளது. ஆம், முன்பெல்லாம் சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் அது சீசன் தொற்றுத்தான் என்று சாதாரணமாக விட்டுவிடுவோம்.

ஆனால், இப்போதெல்லாம் இவற்றின் லேசான அறிகுறி இருந்தாலே நமக்கு கொரோனா இருக்குமோ என மனம் பதைபதைக்க தொடங்குகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த கொரோனா பாதிப்பு ஒருவரின் இதய பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு என சில தீவிர விளைவுகளை ஏற்படுத்திச் செல்கிறது. 2019 ஆம் ஆண்டில் இருந்து தோன்றிய வைரஸின் வெவ்வேறு மாறுபாடுகள் மக்கள் மீது வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தி வருவதால், மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் வைரஸால் பாதிக்கப்பட்டவுடன் எப்படியாவது ஒருவித சேதத்திற்கு ஆளாகிறது.

அதன்படி, கொரோனா வைரஸ் வயிற்று பகுதியையும் பாதிக்கிறது என்ற ஒரு செய்தி இப்போது வெளியாகியுள்ளது. ஆம், முன்பெல்லாம் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போனால் அல்லது புட்பாய்சன் ஏற்பட்டால் வயிற்று வலி என்ற அறிகுறி தோன்றும். ஆனால் இன்று அது கோவிட்-19 அறிகுறியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே, வயிற்று வலியை கோவிட்-19 பாதிப்புடன் எவ்வாறு இணைந்திருக்கிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியம். மார்ச் 2020 இல் அதாவது கொரோனா நோய் உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்ட சமயத்தில் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை கோவிட்-19 நோய்த்தொற்றின் முதல் குறிகாட்டிகளாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.ஃபோர்ப்ஸ் அறிக்கையில் மேலும் விவரித்துள்ளதாவது, "இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், இரைப்பை குடல் அறிகுறிகளுடன் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளிகள், மோசமாக பாதிக்கப்பட்ட மற்றும் லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளை விட அதிகமாக உள்ளனர். அதன்படி, சுவாச அறிகுறிகளை முதன்மையானதாக எடுத்துக்கொள்வதற்கு முன்பு GI அறிகுறிகளை அதாவது குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை கோவிட்-19 பாதிப்பின் விளக்கக்காட்சியாக மதிப்பிடுவதன் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

Also Read : சத்தமின்றி கல்லீரலைக் குறிவைக்கும் இந்த வைரஸ் குறித்து தெரியுமா? எச்சரிக்கை பதிவு

அதேபோல ZOE கோவிட் ஆய்வில் ஏப்ரல் 2021 அறிக்கையின்படி, “கொரோனா தொடர்பான வயிற்று அசௌகரியம் என்னவென்றால் உங்கள் வயிற்றின் மையத்தில் ஒரு பரவலான வலி ஏற்படும். உங்கள் வயிறு முழுவதும் வலியை நீங்கள் அனுபவிக்கலாம்" என குறிப்பிட்டுள்ளது.

Also Read : இந்தியாவின் முதல் mRna தடுப்பூசி: மற்ற கோவிட் தடுப்பூசிகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

மேலும் அந்த ஆய்வில், "நோயின் முதல் சில நாட்களில் வயிற்று வலிகள் மிகவும் பொதுவானவை மற்றும் விரைவாக (ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள்) மறைந்துவிடும்". இது மிகவும் அசாதாரணமான அறிகுறியாக இருந்தாலும், மூச்சுத் திணறல் போன்ற பிற அறிகுறிகளுடன் வயிற்றுப்போக்கும் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என ஆய்வு பரிந்துரைக்கிறது.நவம்பர் 2020ல் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் வெளியான ஆராய்ச்சி அறிக்கையின்படி, SARS-CoV-2 ஆனது ஆஞ்சியோடென்சின் மாற்றும் என்சைம் 2-வின் (ACE2) செயல்பாட்டைக் குறைக்கிறது மற்றும் சைட்டோடாக்சிசிட்டியைத் தூண்டுவதன் மூலம் குடல் எபிட்டிலியத்தை பாதிக்கிறது. அதன் பிறகு அது மலம் வழியாக கழிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

Also Read : மருந்துகளால் அழிக்க முடியாமல் பலம்பெறும் பாக்டீரியாக்கள்..

கொரோனா வைரஸ், குடல் மற்றும் சுவாச செல்களுக்குள் நுழைவதற்கு ஏற்பியாக ACE-2 புரதத்தைப் பயன்படுத்துகிறது. "SARS-CoV-2 துகள்கள் ஒரு பாதிக்கப்பட்ட செல்லை விட்டு வெளியேறும் போது, ​​வீக்கத்தில் பங்கு வகிக்கும் சிறிய புரதங்களான சைட்டோகைன்களின் வெளியீடு தூண்டப்படுகிறது.இந்த செயல்முறை இரைப்பை குடல் அசௌகரியத்தை உருவாக்கலாம்." என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : ஒமேகா-3 சத்துக்கள் உடலுக்கு ஏன் அவசியம்?

மேலும் இந்த ஆய்வின்படி, கோவிட்-19 சுவாசக் குழாயின் வெளிப்பாடுகளால் வகைப்படுத்தப்பட்டாலும், இரைப்பை குடல் அறிகுறிகள் அசாதாரணமானது அல்ல. பல சந்தர்ப்பங்களில், இரைப்பை குடல் அறிகுறிகள், குறிப்பாக வயிற்றுப்போக்கு, கோவிட்-19 இன் ஆரம்ப விளக்கக்காட்சியாக இருக்கலாம், பின்னர் சுவாசக் குழாயின் வெளிப்பாடுகளை உருவாக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Corona Symptoms, Covid-19, Health, Stomach Pain

அடுத்த செய்தி