Home /News /lifestyle /

சொரியாசிஸ் தொற்றக்கூடியதா..? ஆயுர்வேத நிபுணர் சொல்லும் விளக்கம்...

சொரியாசிஸ் தொற்றக்கூடியதா..? ஆயுர்வேத நிபுணர் சொல்லும் விளக்கம்...

சொரியாசிஸ்

சொரியாசிஸ்

சொரியாசிஸ் என்பது , ஒரு நீடித்த தொற்றும் தன்மை இல்லாத தன்னுடல் தாக்குநோய் ஆகும். இதற்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இது தீவிரமான நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.

சொரியாசிஸ் என்பது , ஒரு நீடித்த தொற்றும் தன்மை இல்லாத தன்னுடல் தாக்குநோய் ஆகும். இதற்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இது தீவிரமான நிலைமைகளுக்கு வழிவகுக்கும். ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகமாக செயல்படும் போது தடிப்புத் தோல் அழற்சி ஏற்படுகிறது.

ஆரோக்கியமான தோல் திசுக்களை தாக்குகிறது. இது வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, தோலின் செல் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இதன் விளைவாக தோல் அரிப்பு,தோலில் வலி போன்றவை ஏற்படும். இந்த தடிப்புத் தோல் அழற்சியின் பொதுவான அறிகுறிகளில் வீக்கம் மற்றும் சிவத்தல் ஆகியவை அடங்கும்.

தடிப்புத் தோல் அழற்சியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முழங்கால்கள், முழங்கைகள், உச்சந்தலைபோன்ற உடலின் வெவ்வேறு பகுதிகளில் பெரும்பாலும் சிவப்பு மற்றும் வெள்ளை திட்டுகள் தோன்றும். தற்போது தோல் நோய்க்கான தனிப்பட்ட மருத்துவர்கள் மற்றும் தோல் சிகிச்சை நிபுணர்கள் இருந்த போதும் சொரியாசிஸ் பற்றி பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

சமீபத்தில், ஆயுர்வேத நிபுணர் டாக்டர் நித்திகா கோஹ்லி இன்ஸ்டாகிராமில் சொரியாசிஸ் பற்றிய கட்டுக்கதைகளை நீக்குவது தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து விரிவான தகவல்களைப் பார்க்கலாம்..

தோல் நோய் பற்றிய சில பொதுவான தவறான கருத்துக்கள் குறித்து டாக்டர் நித்திகா கூறுகையில், "சொரியாசிஸ் நோய் தொற்று அல்ல என்பதை நீங்கள் எத்தனை முறை ஒருவருக்கு விளக்க வேண்டும்? அதைத் தீர்க்க நாங்கள் இங்கு வந்துள்ளோம் - அதே போல் வேறு சில தவறான கருத்துகளையும் தீர்த்து வைக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Dr Nitika Kohli (@drnitikakohli)






சொரியாசிஸ் எனப்படும் தடிப்பு தோல் அழற்சி பற்றியான பொதுவான கட்டுக்கதை என்னவென்றால் அது தொற்றக்கூடியது என்பது ஆகும். இதுகுறித்து ஆயுர்வேத மருத்துவர் கூறுகையில், இது கண்டிப்பாக ஒரு தொற்று நோய் அல்ல என்கிறார். இந்த தோல் நோயைச் சுற்றி வரும் மற்றொரு பொதுவான கட்டுக்கதை பற்றி என்னவென்றால், பெரியவர்களுக்கு மட்டுமே தடிப்புத் தோல் அழற்சி ஏற்படும் என்பதாகும், ஆனால் சொரியாசிஸ் என்பது எந்த வயதினருக்கும் ஏற்படலாம் என்பதையும் நித்திகா உறுதிப்படுத்துகிறார்.

ஆண்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உணவுத்திட்டம் : அனைத்து வயதினருக்கும் ஏற்றது..!

தடிப்புத் தோல் அழற்சிக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்று நம்பப்படுகிறது. ஆனால், இந்த தோல் நிலைக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள ஆயுர்வேத சிகிச்சைகள் உள்ளன என்பதை நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார். பெரும்பாலும், சொரியாசிஸை தோல் அரிப்பு என்று மட்டுமே மக்கள் கருதுகின்றனர். இதற்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காவிட்டால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பரிந்துரைத்துள்ளார்.



நீரிழிவு, கல்லீரல் நோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட சில கவலைக்குரிய சுகாதார நிலைகளுடன் இது தொடர்புடையது. இது உங்கள் மூட்டுகளைப் பாதிக்கலாம் மற்றும் சொரியாசிஸ் ஆர்த்ரிடிஸ் எனப்படும் கீல்வாதத்தை ஏற்படுத்தும் என்றும் ஆயுர்வேத மருத்துவர் விளக்கியுள்ளார்.

நீங்கள் ரன்னிங் செய்யும்போது அளவுக்கு அதிகமாக பயிற்சி எடுக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!

சொரியாசிஸ் மரபணு ரீதியாகவும் இருக்கலாம் எனக்குறிப்பிடும், டாக்டர் கோஹ்லி பஸ்டுலர் சொரியாசிஸ், குட்டேட் சொரியாசிஸ், இன்வெர்ஸ் சொரியாசிஸ் மற்றும் எரித்ரோடெர்மிக் சொரியாசிஸ் போன்ற பல்வேறு வகையான தோல் நிலைகள் உள்ளன. ஒவ்வொரு வகைக்கும் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை வேறுபட்டதாக இருக்கும் என்றும் விளக்கமளித்துள்ளார்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Psoriasis

அடுத்த செய்தி