முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உடலுறவுக்கு முன்னும் பின்னும் சிறுநீர் கழிக்கலாமா.? இந்த பழக்கம் நல்லதா.?

உடலுறவுக்கு முன்னும் பின்னும் சிறுநீர் கழிக்கலாமா.? இந்த பழக்கம் நல்லதா.?

pee before and after sex

pee before and after sex

பெண்கள், உடலுறவுக்கு முன்னும் பின்னும் சிறுநீர் கழிக்க வேண்டும். ஏனென்றால் ஆண், பெண் இருவரும் உடலுறவுக்கு முன்பும், பின்பும் சிறுநீர் கழிப்பது நல்லது என்றும், இதனால் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகளைத் தடுக்கலாம்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil |

பொதுவாக நமது பாதுகாப்பற்ற பாலியல் செயல்பாடுகள், நம்மை பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் (STDs), வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளின் ஆபத்தில் கொண்டுபோய் விடலாம். எனவே பாலியல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வது நல்லது.

செக்ஸ் மற்றும் பாலியல் ஆரோக்கியத்தை பற்றி பல கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்கள் இருந்தாலும், நாம் பொதுவாகக் கேள்விப்பட்ட ஒரு விஷயம் என்னவென்றால், ஆண்களும் பெண்களும், குறிப்பாக பெண்கள், உடலுறவுக்கு முன்னும் பின்னும் சிறுநீர் கழிக்க வேண்டும். ஏனென்றால் ஆண், பெண் இருவரும் உடலுறவுக்கு முன்பும், பின்பும் சிறுநீர் கழிப்பது நல்லது என்றும், இதனால் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகளைத் தடுக்கலாம் எனவும் கூறுகின்றனர், பாலியல் மருத்துவர்கள்.

உடலுறவுக்குப் பிறகு ஏன் சிறுநீர் கழிக்க வேண்டும்?

உடலுறவுக்கு பிறகு பொதுவாக பிறப்புறுப்பில் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அத்தகைய நோய்த்தொற்றுகளில் ஒன்று சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஆகும். இது பாலியல் ரீதியாக பரவுவதில்லை, UTI என்பது சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாய் உட்பட சிறுநீர் அமைப்பின் எந்தப் பகுதியையும் பாதிக்கும் ஒரு தொற்று ஆகும்.

Also Read : இரைப்பை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் உணவு பழக்கம் - விளக்கும் நிபுணர்கள்..!

நீங்கள் உடலுறவு கொள்ளும்போது சிறுநீர்ப்பையில் சிறுநீர் இருந்தால், உடலுறவுக்குப் பிறகு சில மணிநேரங்களில் சிறுநீர் கழிக்காவிட்டால், பாக்டீரியாக்கள் தொற்று ஏற்பட்டு பிறப்புறுப்பில் பாதிப்பு ஏற்படுத்தலாம். பெரும்பாலான பெண்களின் நோய் எதிர்ப்புத் திறன், சிறுநீர் தொற்று நோய்களை உருவாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது. இதை தடுக்க பெண்கள் உடலுறவுக்குப் பிறகு அரைமணி நேரம் கழித்து சிறுநீர் கழிப்பது நல்லது.

உடலுறவுக்கு முன் ஏன் சிறுநீர் கழிக்க வேண்டும்?

உடலுறவின் போது இன்பத்தின் உச்ச கட்டத்தை அடைவது என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் முன் சிறுநீர்ப்பையை காலி செய்வது அவசியமாகிறது. சிலருக்கு உடலுறவின் போது பாதியில் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுவதால் முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியாமல் தடைப்படுகிறது.

ஆண், பெண் இருவரும் உறவுக்கு முன்பு சிறுநீர் கழிப்பதால், சிறுநீர்ப்பை காலியாகி மனதிற்கு ஒருவித லேசான உணர்வைத் தருகிறது. அவ்வாறு செய்யாவிடில், உடலுறவில் நாட்டமில்லாமல் போகலாம். அல்லது உடலுறவுக்குப் பிறகு நீங்கள் உடனடியாக கழிப்பறைக்குச் செல்ல நேரிடும். எனவே உடலுறவுக்கு முன் சிறுநீர் கழிப்பது பாலியல் இன்பத்தில் முழுமையான அனுபத்தை தரக்கூடியதாக அமையும்.

ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI)

சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) என்பது சிறுநீர் மண்டலத்தின் எந்தப் பகுதியிலும் ஏற்படும் தொற்று ஆகும். சிறுநீர் அமைப்பில் சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய்கள், சிறுநீர்ப்பை ஆகியவை அடங்கும். ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) உருவாகும் ஆபத்து அதிகம்.

Also Read : PCOS பிரச்சனை உள்ளவரா நீங்க..? சாப்பிட வேண்டிய.. சாப்பிடக்கூடாத உணவுகள்

ஏனெனில் ஒரு பெண்ணின் சிறுநீர்ப்பையில் இருந்து இருந்து சிறுநீர் வெளியேறும் குழாய் ஒரு ஆணின் சிறுநீர் குழாயை விட குறைவாக உள்ளது. எனவே பெண் உறுப்பின் வெளிப்புறத்தில் உள்ள பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பைக்குள் எளிதாக சென்றுவிடும்.

மீண்டும் மீண்டும் சிறுநீர் தொற்று ஏற்பட்டால் என்ன செய்யலாம்?

சிறுநீர் பாதை நோய்த்தொற்று மிகவும் அசௌகரியமாக இருக்கும், நீங்கள் உடலுறவுக்கு பிறகு மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டால் ஒரு நல்ல மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையைப் பெறுவது அவசியம். மேலும், ஆண்கள் உடலுறவுக்கு பிறகு சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஏன்னென்றால் சிறுநீர்ப்பாதை நீளமாக இருப்பதால் அவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் குறைவுதான். பெண்கள் இந்த பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்ட பிறகும் சிறுநீர் தொற்று ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசிப்பது சிறந்தது.

First published:

Tags: Sex benefits, Women Care, Women Health