மாதவிலக்கு என்பதே பெண்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடிய கால கட்டம் தான். அடிவயிற்று வலி, அசௌகரியம் என பல விதமாக தொந்தரவுகளை இந்த நாட்களில் பெண்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கும். அதே சமயம், மாதவிலக்கு நாட்களில் சிறுநீர் கழிக்கும்போது உங்களுக்கு வலி ஏற்படுமாயின், அதை சாதாரண பிரச்சினையாகக் கருதி கடந்து சென்றுவிட கூடாது.
எண்டோமெட்ரியோசிஸ்
மாதவிலக்கு காலத்தில் சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்பட்டால், அதற்கு எண்டோமெட்ரியோசிஸ் என்னும் பாதிப்பு தான் காரணமாக இருக்கக் கூடும். குறிப்பாக, கருமுட்டை குழாய் (பெலோபியன் டியூப்), கருப்பைகள் மற்றும் இடுப்பு பகுதி ஆகிய இடங்களில் வலி ஏற்படக் கூடும். கர்ப்பப்பை உள்ளே எண்டோமெட்ரியாடிக் என்னும் திசு தன்னிச்சையாக வளருவதன் காரணமாகவே இந்த வலி ஏற்படும்.
பொதுவாக, எண்டோமெட்ரியோசிஸ் பிரச்சினை இருந்தால், மாதவிலக்கு காலத்தில் சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படும் என்ற தகவல் பெரும்பாலான பெண்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், ஒட்டுமொத்த சிறுநீர் கட்டமைப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்த நோய் அமையும் என்ற விழிப்புணர்வு பலருக்கு கிடையாது.
மருத்துவ ஆலோசனை அவசியம்
பெரிய அளவுக்கு அறிகுறிகள் இல்லாமல் இருக்கும் இந்த நோயை சிறுநீர் குழாய் எண்டோமெட்ரியோசிஸ் என்று குறிப்பிடுகின்றனர். இது இனப்பெருக்க இருப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்தாலோ, இடுப்புப் பகுதியில் எப்போதும் வலி இருந்தாலோ உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகி முறையான ஆலோசனை பெற வேண்டும். அதே சமயம், எண்டோமெட்ரியோசிஸ் என்பது இரண்டு வகைப்படுகிறது.
சூப்பர்ஃபிசியல் எண்டோமெட்ரியோசிஸ்
இது சிறுநீர் பையின் பரப்பு மீது வளரக் கூடிய எண்டோமெட்ரியல் திசு வளர்ச்சி ஆகும். எண்டோமெட்ரியோமா என்பது கருப்பையின் மீது மிக தீவிரமாக ஏற்படும் எண்டோமெட்ரியோசிஸ் பிரச்சினை ஆகும். இது சிறுநீர் பை உள்ளே உள்ள சுவரில் வளர்ச்சி அடையும்.
இதன் அறிகுறிகள்
இந்த நோயை கண்டறியும் முறை
இது மரபு ரீதியான பாதிப்பு என்பதால், மருத்துவர்கள் நேரடியாக உடல் பரிசோதனை மேற்கொள்வார்கள். இது மட்டுமல்லாமல் யூரினலைசிஸ் என்ற சிறுநீர் பரிசோதனை செய்யப்படலாம். இது சிறுநீர் குழாய் மற்றும் சிறுநீர் பையில் உள்ள தொற்றுகளை கண்டறிய உதவும். இது மட்டுமல்லாமல் பாக்டீரியாவால் ஏற்படும் சிறுநீர் குழாய் தொற்றை கண்டறியவும் இது உதவும். சில சமயங்களில் அல்ட்ராசவுண்ட், எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் பரிந்துரை செய்யப்படலாம்.
காரணமே இன்றி திடீரென கால்களில் வீக்கம் ஏற்பட்டால் இந்த பிரச்சனை இருக்கலாம் : நிபுணர்கள் விளக்கம்
சிகிச்சை முறை
இளம் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை இருந்தால் கர்ப்பம் அடைவதில் சிக்கல் ஏற்படும். ஆகவே, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யக் கூடும். லேப்ரோஸ்கோபி முறையில் எண்டோமெட்ரியோசிஸ் திசு வளர்ச்சி அகற்றப்படும். நோய் எந்த அளவுக்கு பரவியிருக்கிறது என்பதைப் பொருத்து மருத்துவர்கள் சிகிச்சையை தீர்மானிப்பர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Menstrual Cycle, Periods pain, Urine