மாதவிடாய் சுழற்சி சமயத்தில் சிறுநீர் கழிக்கும்போது அதிக வலியை அனுபவிக்கிறீர்கள் எனில் அது எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) என்னும் பிரச்சனையாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பிரச்சனையானது ஃபலோபியன் குழாய்களுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.
இந்த ஃபலோபியன் குழாய்களானது கருப்பை மற்றும் திசு இடுப்புப் பகுதியை உள்ளடக்கியது. கருப்பைக்கு வெளியே எண்டோமெட்ரியோடிக் திசு வழக்கத்திற்கு மாறாக வளரும்போது பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். எண்டோமெட்ரியோசிஸ் இடுப்பு பகுதியில் கடுமையான வலியை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். இருப்பினும், எண்டோமெட்ரியோசிஸ் சிறுநீர் மண்டலத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பது தெரியாது.
இந்த நோய் சிறுநீர் பாதை எண்டோமெட்ரியோசிஸ் (Urinary tract Endometriosis) என்று அழைக்கப்படுகிறது. இது அறிகுறியற்றதாக இருப்பதால் அரிதாகவே கண்டறியப்படுகிறது. எண்டோமெட்ரியோசிஸ் இனப்பெருக்க உறுப்புகளை மட்டும் பாதிக்காது ஆனால் பல உறுப்புகளை பாதிக்கும் அழற்சி நோயாக பார்க்கப்படுகிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது இடுப்பு பகுதியில் வலி மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) ஆகியவற்றால் பாதிக்கப்படுவதாக மகளிர் நலமருத்துவரிடம் தெரிவிக்கின்றனர்.
எண்டோமெட்ரியோசிஸ் 3 வகைகள் உள்ளன :
மேலோட்டமான எண்டோமெட்ரியோசிஸ் - சிறுநீர்ப்பையின் மேற்பரப்பில் எண்டோமெட்ரியல் திசு உருவாகும்.
எண்டோமெட்ரியோமா - கருப்பையில் எண்டோமெட்ரியல் திசு உருவாகும்.
ஆழமான எண்டோமெட்ரியோசிஸ் - சிறுநீர்ப்பையின் புறணி அல்லது சுவருக்குள் எண்டோமெட்ரியல் திசு உருவாகும். இது சிறுநீர்ப்பை, சிறுநீரகம் மற்றும் சிறுநீர் குழாய் ஆகியவற்றின் பெரும்பகுதியை பாதிக்கும் ஒரு நோயாகும்.
சிறுநீர் பாதை எண்டோமெட்ரியோசிஸ் (யுடிஇ) பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அறிகுறியற்றது மற்றும் நிலைமை கடுமையாக மாறியவுடன் அறிகுறிகளைக் காட்டும். இருப்பினும், நோய்க்கான காரணம் தெளிவாக இல்லை, ஆனால் பலர் மரபணு கோளாறு அல்லது அறுவை சிகிச்சையின் வரலாறு என்று சந்தேகிக்கின்றனர். இதற்கு சரியான மருத்துவ தலையீடு தேவைப்படுகிறது.
சிறுநீர் பாதை எண்டோமெட்ரியோசிஸின் சில அறிகுறிகள் :
சிறுநீர்ப்பை நிரம்பும்போது வலி
சிறுநீர் கழிக்கும் போது எரியும் அல்லது வலி உணர்வு
இடுப்பு வலி
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீரில் இரத்தம்
கீழ் முதுகு வலி
அதிகச் செயல்படும் சிறுநீர்ப்பை
பரிசோதனை முறைகள் :
இது ஒரு மரபணு கோளாறு என்று சந்தேகிக்கப்படுவதால், மருத்துவர்கள் உடல் பரிசோதனை மூலம் இந்த நோயைக் கண்டறிய முற்படுகின்றனர். சிறுநீர்க்குழாய் அல்லது சிறுநீர்ப்பையில் நோய்த்தொற்றின் அளவைப் புரிந்து கொள்ள மருத்துவர்கள் சிறுநீர் பரிசோதனையையும் பரிந்துரைக்கின்றனர். இந்த வகையான சோதனைகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைக் கண்டறியவும் உதவும். இதில் பாக்டீரியாவால் ஏற்படும் அழற்சி சிறுநீர்க்குழாய்க்குள் நுழைந்து அருகிலுள்ள திசுக்களை அடையத் தொடங்கும்.
மொத்தப் பெண்களில் சுமார் 20 சதவீதம் பேர் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைக் கொண்டுள்ளனர்.
இமேஜிங்கைப் பொறுத்தவரை, அல்ட்ராசவுண்ட் போன்ற இமேஜிங் நுட்பத்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். இதில் மருத்துவர்கள் டிரான்ஸ்வஜினல் அணுகுமுறையைப் பயன்படுத்தி நோயைக் கண்டறிய ஸ்கேன் செய்து மதிப்பிடுவார்கள். டாக்டர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ய ஆலோசனை கூறலாம். இது அதிக உணர்திறன் கொண்டது. சிறுநீர்ப்பையின் உட்புறப் பகுதியைப் பார்க்க ஒரு சிஸ்டோஸ்கோபியும் செய்யப்படுகிறது.
World Kidney Day 2022 : சிறுநீரக கற்கள் பிரச்சனையிலிருந்து தப்பிக்க பயனுள்ள டிப்ஸ்..!
பெரும்பாலும், சிறுநீர் பாதை எண்டோமெட்ரியோசிஸிற்கான சோதனைகளைச் செய்யும்போது, பல நோயாளிகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், இடுப்பு அழற்சி நோய் (PID), எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS), கருப்பை நார்த்திசுக்கட்டிகள் மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) போன்ற மற்ற நோய் அறிகுறிகளுக்கான ரிசல்டுகளையும் பெறுகின்றனர்.
இதற்குத் தடுப்பு அல்லது பொருத்தமான இயற்கை சிகிச்சை எதுவும் இல்லை. ஆனால் ஆரம்பகால நோயறிதல் மற்றும் சரியான அறுவை சிகிச்சை தலையீடு ஆகியவை நோயின் முன்னேற்றத்தை மெதுவாக்கும்.
சிகிச்சை:
நோய்க்கு சிகிச்சையளிக்க பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் உள்ளன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கின்றனர். மருத்துவ பயிற்சியாளர் லேபராஸ்கோபி உதவியுடன் உறுப்பு மீது காயத்தின் அடுக்கை அகற்றுகிறார்..
நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான முயற்சியில், மருத்துவர்கள் பல்துறை அணுகுமுறையைப் பயன்படுத்துகின்றனர். மேலும் நோய் பரவலின் அளவைப் பொறுத்து பல நிபுணர்கள் அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kidney Disease, Menstrual Cycle, Urinary Tract Infection, World Kidney day