குறைந்த மன அழுத்தம் மூளைக்கு நல்லது - ஆய்வில் தகவல்!

குறைந்த மன அழுத்தம் மூளைக்கு நல்லது

புதிதாக வெளியாகியுள்ள ஆய்வு ஒன்று குறைந்த அளவிலான மன அழுத்தம் அறிவாற்றலை வளர்க்க உதவுவதாக தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Share this:
குறைந்த அளவிலான தினசரி மன அழுத்தம் மற்றும் சிரமங்கள் மூளையின் செயல்பாட்டுக்கு நல்லது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மன அழுத்தத்துடன் இருப்பது உடல் ஆரோக்கியத்துக்கும், நலமான வாழ்க்கைக்கும் ஆபத்தும் என பலரும் கூறி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், புதிதாக வெளியாகியுள்ள ஆய்வு ஒன்று குறைந்த அளவிலான மன அழுத்தம் அறிவாற்றலை வளர்க்க உதவுவதாக தெரிவித்துள்ளது. மேலும், மூளையின் செயல்பாட்டுக்கு குறைந்த மன அழுத்தம் நல்லது எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மன அழுத்தம் இல்லாத நிலையில் இருப்பவர்கள் எல்லோரும் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள் என்று கூறிவிட முடியாது.

எந்த பிரச்சனையும் சிக்கலையும் எதிர்கொள்ளாதவர்கள் மந்தமாக இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. குறைந்த அளவிலான மன அழுத்தம் உங்களுக்குள் சூப்பர் ரீச்சார்ஜ் பவரை ஏற்படுத்தி புதிய கோணத்தில் சிந்திக்க தூண்டும். மன அழுத்தம் சிறிதும் இல்லாதவர்கள் நாட்பட்ட சில சுகாதார பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. மன அழுத்தம் குறித்து ஆராய்ச்சியாளர் டேவிட் எம்.அல்மேடா ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். தினசரி அழுத்தங்கள் மற்றும் தொந்தரவுகள் மூளைக்கு பயனளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், மன அழுத்தங்கள் பொதுவாக ஒருவித சிக்கலை ஏற்படுத்தும் என கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அந்த நேரத்தில் அந்த பிரச்சனைக்குரிய தீர்வை கண்பிடிக்க உடனடியாக செயலாற்றுவோம் என்பதால், இதுபோன்ற நிலைமைகள் உங்களுக்கு நன்மையையும், உங்களுக்குள் இருக்கும் புதிய ஆற்றலை வெளிக் கொண்டுவருவதற்கு பயன்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய டேவிட் அல்மேடா, "மன அழுத்தங்களை கொடுக்கும் பிரச்சனைகள் உருவாகும்போது, அதில் இருந்து வெளியே வருவதற்கான சிந்தனையை உங்களுக்குள் தோன்றும்.

உதாரணமாக, விரைவில் உங்களுக்கு ஆன்லைனில் ஜூம் மீட்டிங் தொடங்க உள்ளது. அந்த நேரத்தில் உங்கள் கம்ப்யூட்டரில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுகிறது என வைத்துக்கொள்வோம். அப்போது, உங்களுக்குள் ஒருவித மன அழுத்தம், பரபரப்பு ஏற்படும். அதேநேரத்தில், இதற்கு முன்னர் கம்யூட்டர் செட்டிங்ஸ்களுக்குள் செல்லாமல் இருந்த நீங்கள் என்ன செய்வீர்கள்?. உடனடியாக செட்டிங்ஸை தேடி அந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிப்பீர்கள்.

இத்தகைய நிலைமைகள் ஏற்றுக்கொள்வதற்கு சற்று கடினமானதாக இருந்தாலும், உங்களுக்குள் இருக்கும் ஆற்றலையும், தேடலையும் கொண்டு வந்து பிரச்சனைக்கான தீர்வை நோக்கி ஓடச் செய்யும்" எனத் தெரிவித்துள்ளார். எமோஷன் இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு குறித்து பேசிய அல்மேடா, இந்த ஆராய்ச்சி சுமார் 2,711 பேரிடம் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். பங்கேற்பாளர்கள் அனைவரிடமும் தொடக்கத்தில் சிறிய அளவிலான அறிவாற்றல் பரிசோதனை நடத்தப்பட்டு, பின்னர் தொடர்ச்சியாக 8 இரவுகள் அவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது.

Also read... இளம் வயதினரையும் அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய் - வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

அப்போது, அவர்களின் மன நிலை, நாட்பட்ட நிலைமைகள், இருமல், சளி தொடர்பான உடல் அறிகுறிகள் மற்றும் அன்றைய நாளில் அவர்கள் செய்த பணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டு பதில்கள் சேகரிக்கப்பட்டன. பங்கேற்பாளர்களில் 10 விழுக்காட்டினர் மன அழுத்தம் இல்லாதவர்களாக இருப்பது தெரியவந்தது. ஆனால், அவர்களுக்கு நாட்பட்ட சுகாதார பிரச்சனைகள் இருப்பதை கண்டறிந்தனர். மேலும், மன அழுத்தம் இல்லாதவர்கள் அறிவாற்றல் சோதனையில் குறைவான செயல்திறனை கொண்டிருந்ததையும், நாள் முழுவதும் ஒரே மனநிலையில் அவர்களால் இருக்க முடியவில்லை என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: