நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. தீவிர பாதிப்புக்கு ஆளாவோருக்கு ஆக்சிஜன் செலுத்துவது சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் மரணங்களை தடுக்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன.
இந்த சூழலில் சென்னை ஐ.ஐ.டி-யின் ”bio medical engineering” துறை "லிங்க முத்திரை" எனப்படும் யோக முறையில் உடல் வெப்பத்தை அதிகரிக்கலாம் என கண்டறிந்துள்ளது. இந்த முத்திரையை செய்யும்போது உடல் வெப்பம் மற்றும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிப்பதுடன் ரத்த ஓட்டமும் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு நுரையீரலில் நீர் கோர்த்து சளி தங்குவதால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டு மூச்சு திணறல் வருகிறது. அப்போது, வெண்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சையளிக்க வேண்டியம் அவசியம் ஏற்படுகிறது. லிங்க முத்திரை செய்வதால்
நுரையீரல் பை விரிவடைவதுடன், உடல் வெப்பம் அதிகரிக்கிறது. உடல் வெப்பம் அதிகரிக்கும் போது நுரையீரலில் தேங்கியுள்ள நீர் கரைந்து சுவாசிக்கும் திறன் இயல்பாக அதிகரிப்பதை ஐஐடி நிபுணர் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
லிங்க முத்திரை செய்வதற்கு முன் இருந்த ஆக்சிஜன் அளவை காட்டிலும் முத்திரை செய்த பிறகு
ஆக்சிஜன் அளவு அதிகரிப்பது தெரியவந்துள்ளது. தெர்மல் இமேஜிங், இ.சி.ஜி ஆகிய மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் ஆய்வை மேற்கொண்டுள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் முதலுதவி சிகிச்சையை போல இந்த யோக முத்திரையை செய்யலாம் என்றும் பேராசிரியர் மணிவண்ணன் தெரிவிக்கிறார்.
மேலும் படிக்க...
இந்தியாவில் முழு ஊரடங்கை அமல்படுத்த அமெரிக்க மருத்துவர் யோசனை
தற்போது மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், லிங்க முத்திரை மூலம் ஆக்ஸிஜன் அளவை இயற்கையாகவே அதிகரித்துக் கொள்ளலாம் என்பது கொரோனாவின் தீவிர பாதிப்புக்கு ஆளாவோருக்கு வரப்பிரசாதகாமவே பார்க்கப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.