லிப்ஸ்டிக் உதட்டுடன் முத்தம் கொடுத்தால் அலர்ஜி வருமா..?

லிப்ஸ்டிக்கில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஈயம் உடலில் கலக்கும் போது கற்றல் குறைபாடு, நினைவுத் திறன் குறைதல் , ஐக்யூ அளவு குறைதல் போன்ற பொதுவான பிரச்னைகளை உண்டாக்கும்.

லிப்ஸ்டிக் உதட்டுடன் முத்தம் கொடுத்தால் அலர்ஜி வருமா..?
லிப்ஸ்டிக் உதட்டுடன் முத்தம் கொடுத்தால் அலர்ஜி வருமா..?
  • News18
  • Last Updated: October 4, 2019, 1:33 PM IST
  • Share this:
காதலி முத்தம் கொடுக்கும் போது லிப்ஸ்டிக்கெல்லாம் பார்க்க முடியுமா என்கிறீர்களா.. சரி தான் என்றாலும் உங்கள் ஆரோக்கியம் முக்கியம் அல்லவா என்று எதிர்கேள்வி கேட்கிறது ஆராய்ச்சிகள்.

ஆம், பெண்கள் உங்கள் உதட்டிலோ அல்லது ஃபிரெஞ்ச் முத்தத்திலோ தடம் பதிக்கும் லிப்ஸ்டிக்கில் பல வகையான இரசாயனக் கலப்படங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

என்னதான் லிப்ஸ்டிக்கில் மூலப்பொருட்களாக வெண்ணெய், அவோகடா எண்ணெய், தேன் மெழுகு போன்றவை பயன்படுத்தப்படுவதாக கொட்டை எழுத்தில் எழுதி விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் ஆபத்தை விளைவிக்கும் அலுமினியம், காட்மியம், க்ரோமியம், மங்கனீஸ் மற்றும் ஈயம் போன்ற இரசாயனங்களும் பயன்படுத்தப்படுகின்றன என்பதை சத்தமே இல்லாமல் குறிப்பிட்டிருப்பார்கள். குறிப்பாக டார்க் ஷேடுகளில் நச்சுத்தன்மை அதிகம் கொண்ட ஈயம் என்னும் இரசாயனம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஈயம் உடலில் கலக்கும் போது கற்றல் குறைபாடு, நினைவுத் திறன் குறைதல் , ஐக்யூ அளவு குறைதல் போன்ற பொதுவான பிரச்னைகளை உண்டாக்கும். ஆண்களுக்கு ஈயத்தின் அளவு அதிகரித்தால் குழந்தைபேறு கொடுக்க முடியாமல் போதல், ஹார்மோன் குறைபாடு, வயதுக்கு வருவதில் தாமதம் போன்ற பிரச்னைகள் வரும். இவைத் தவிர உடல்நலக் குறைவுகளும் உண்டாகும்.

லிப்ஸ்டிக்கில் கலக்கப்படும் இரசாயனங்கள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அதனால் நோய் வரும், புற்றுநோய் வரும் ஆபத்துகளை இதுவரை உலகம் கண்டதில்லை என்கிறது 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு. லிப்ஸ்டிக் தோன்றி 35 ஆண்டுகள் ஆகின்றன ஆனால் இதுவரை பிரச்னைகளை சந்தித்ததில்லை என்றாலும் பாதுகாப்பு அவசியம் என்கிறது.


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: October 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading