புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் உடல் எடை அதிகரிக்குமா?

ஆண்கள் புகைப்பிடித்தலைக் கைவிடும்போது 2.7 கிலோவும் பெண்கள் 3.6 கிலோவும் அதிகரிக்கக் கூடும் என்றுக் கூறியுள்ளது.

புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் உடல் எடை அதிகரிக்குமா?
புகையிலைத் தீங்கானது
  • News18
  • Last Updated: July 13, 2019, 7:41 PM IST
  • Share this:
புகைப் பிடிக்கும் பழக்கதை விட நினைக்கும் பலருக்கும் இந்த கேள்வி பயமுறுத்தும். இந்த மனக் குழப்பத்திலேயே புகைப்பிடிப்பதை விடலாமா வேண்டாமா என்ற சிந்தனையில் இருப்பார்கள். ஆனால் இது உண்மையா இல்லையா என்று ஜப்பானில் உள்ள க்யோடோ மெடிகல் சென்டர் ஆய்வு நடத்தியுள்ளது. அதில் உடல் எடை அதிகரிக்கும் என்பதற்கு சந்தேகமே வேண்டாம். உடல் எடை நிச்சயம் ஏறும் என்று கண்டுபிடித்துள்ளது.

ஆம், எவர் ஒருவர் சிகிரெட்டிற்கு அதிகமாக அடிமையாகியிருக்கிறாரோ அவருக்கு நிக்கோட்டின் அளவு அதிகமாக இருக்கும். அவர்கள் புகைப்பழக்கத்தைக் கைவிடும்போது உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும் என்றுக் கூறியுள்ளது.
இந்த ஆய்வில் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட 186 பேர் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்டிற்கு மேல் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக புகைப்பிடிக்கும் பழக்கதைக் கைவிட வைத்தபோது அவர்களின் எடை மூன்றே மாதத்தில் அதிகரித்துள்ளது. அதாவது 1 கிலோ எடை அதிகரித்துள்ளது. இதனாலேயே பலர் புகைப் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட பயப்படுவதாகவும் கூறுகிறது ஆய்வு.

தீய பழக்கங்களைக் கைவிடுவது எப்படி?

உடல் எடை ஏன் அதிகரிக்கிறது என்பதற்கும் சில விளக்கங்களை அளிக்கிறது. அதில் சிகரெட் பழக்கத்தைக் கைவிடும்போது பசியின்மை அதிகரிக்கும், வளர்ச்சிதை மாற்றத்தின் செயல்பாடுகள் குறைந்துகொண்டே வரும். உடல் அசதியால் உடல் உழைப்பு குறையும். இதுபோன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது என்று விளக்கியுள்ளது.

ஆண்கள் புகைப்பிடித்தலைக் கைவிடும்போது 2.7 கிலோவும் பெண்கள் 3.6 கிலோவும் அதிகரிக்கக் கூடும் என்றுக் கூறியுள்ளது. இருப்பினும் இந்த உடல் எடைக் கூடும் பிரச்னை வெறும் மூன்று வருடங்களுக்கு மட்டும்தான். ஆனால் அதனால் ஏற்படும் நன்மைகளால் ஆயுட்காலம் கூடும் என்று அறிவுரையும் வழங்குகிறது ஆய்வு.

இதையும் படிக்க :

புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஓட ஓட விரட்டுவது எப்படி? இதோ சில எளிய வழிகள்!
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்