ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பெண்குயின் கார்னர் 22 : 30 வயதை கடந்து திருமணம் செய்தால் குழந்தை பிறப்பதில் சிக்கல் உண்டாகுமா..? மருத்துவரின் பதில்..!

பெண்குயின் கார்னர் 22 : 30 வயதை கடந்து திருமணம் செய்தால் குழந்தை பிறப்பதில் சிக்கல் உண்டாகுமா..? மருத்துவரின் பதில்..!

பெண்களுக்கு வயது அதிகமாக அதிகமாக கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே போகும். குறிப்பாக 30 வயதை தாண்டும் பொழுது கருமுட்டையின் கருவாக உருவாகும் திறன் குறைய ஆரம்பிக்கும்.

பெண்களுக்கு வயது அதிகமாக அதிகமாக கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே போகும். குறிப்பாக 30 வயதை தாண்டும் பொழுது கருமுட்டையின் கருவாக உருவாகும் திறன் குறைய ஆரம்பிக்கும்.

பெண்களுக்கு வயது அதிகமாக அதிகமாக கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே போகும். குறிப்பாக 30 வயதை தாண்டும் பொழுது கருமுட்டையின் கருவாக உருவாகும் திறன் குறைய ஆரம்பிக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

லதாவும் அவர் வருங்கால கணவரும் மருத்துவ ஆலோசனைக்காக வந்திருந்தார்கள்.

டாக்டர் !!! எங்களுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. இருவர் வயதும் முப்பதை கடந்து விட்டதால், ஏராளமான சந்தேகங்கள் இருக்கின்றன. பல நண்பர்களும் வயது கடந்து திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தைக்கு பிரச்சினை வரும் என்று கூறுகிறார்கள்.

நாங்கள் இருவரும் ஏதேனும் சோதனை செய்துகொள்ள வேண்டுமா? மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டுமா? உங்கள் ஆலோசனை தேவை.

பல பெண்களும் இப்பொழுது நன்கு படித்து பொறுப்பான பதவிகளில் இருக்கிறார்கள். கடினமான இலக்குகளை நோக்கி துணிவுடன் பயணிக்கிறார்கள். திருமணத்தை பற்றி அவர்கள் சிந்திக்கும் போது 30 வயதை தாண்டி விடுகிறார்கள். கடந்த பத்து வருடங்களாகவே 30 வயது கடந்து திருமணம் செய்து கொள்ளும் பெண்களை அதிகமாக பார்க்கிறோம்.

ஒரு சில நோய்கள் வயது அதிகமாகும் பொழுது வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் குறிப்பாக சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம்.

பெண்களுக்கு வயது அதிகமாக அதிகமாக கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே போகும். குறிப்பாக 30 வயதை தாண்டும் பொழுது கருமுட்டையின் கருவாக உருவாகும் திறன் குறைய ஆரம்பிக்கும். அதுபோல 34 வயதைத் தாண்டும்போது உருவாகும் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் என்ற கூறக்கூடிய மூளை வளர்ச்சி குறைபாடு பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகள் மற்றவர்களை விட சற்று கூடுதலாக இருக்கும்.

அதுபோல கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட சில நார்க்கட்டிகள் (fibroids), அடினோமயோஸிஸ் (adenomyosis), நீர்க்கட்டிகள்(cysts) போன்றவையும் வயது அதிகமாகும் போது வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நீங்கள் கூறுவதில் இருந்து உங்கள் இருவருக்குமே சர்க்கரை ,அதிக ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இல்லை என்று தெரிகிறது.

பெண்குயின் கார்னர் 21 : முடி இல்லாததால் வரன்கள் தள்ளிப் போகிறதா..? திருமண வயதில் உள்ள பெண்களுக்கு மருத்துவரின் ஆலோசனை..!

பெண்குயின் கார்னர் 20 : தோல் நோய் ஆபத்தா..? திருமண உறவில் பாதிப்பை உண்டாக்குமா? மருத்துவர் பதில்

இருவரும் ஒரு முக்கியமான ஒரு சில பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. ரத்த ஹீமோகுளோபின் அளவு மற்றும் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் வேலை , கொலஸ்டிரால் அளவு போன்றவற்றை பரிசோதனை செய்து பார்க்கலாம். தேவைப்பட்டால் அதற்குரிய மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

30 வயதை கடந்து திருமணம் செய்து கொள்பவர்கள் தாமதிக்காமல் குழந்தை பெற்றுக் கொள்வது சரியாக இருக்கும். குழந்தை ஆரோக்கியமாக உருவாவதற்கு போலிக் ஆசிட் எனப்படும் பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். அத்துடன் நல்ல சத்துள்ள உணவும் அவசியம். அதனால் வயதை மட்டும் நினைத்து பயப்பட அவசியமில்லை.

ஆனால் பல நோய்களும் வயது அதிகமாகும் பொழுது வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது பொதுவாக உள்ள விதி. ஆனால் முப்பது வயதை கடந்து திருமணம் செய்து கொள்ளும் பொழுது பெரும்பாலும் இருவருமே நல்ல வேலையில் இருப்பார்கள். பொருளாதார பிரச்சினைகள் இல்லாமல் , அவர்களுடைய மண வாழ்க்கை நிம்மதியாக அமைவதற்கு வாய்ப்புகள் அதிகம். 30 வயதை கடந்து திருமணம் செய்பவர்களுக்கு ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து புரிந்து கொள்வதற்கான முதிர்ச்சியும் அதிகமாக இருக்கும். அதுவும் நல்லதுதானே!

நன்றி! டாக்டர்!! தெளிவாக கூறினீர்கள். இதிலுள்ள பாசிட்டிவான விஷயங்களை கூறியதால் எங்களுக்கு உற்சாகமாக இருக்கிறது. மிக்க நன்றி! விடை பெற்றனர் இருவரும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Fertility possibilities, Pregnancy, Women after 30, பெண்குயின் கார்னர்