Home /News /lifestyle /

கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா..? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்..?

கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா..? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்..?

கர்ப்ப காலத்தில் செக்ஸ்

கர்ப்ப காலத்தில் செக்ஸ்

பிரசவ தேதிக்கு முன்கூட்டியே குழந்தை பிறந்து விடும் என்ற ஆபத்து இருப்பவர்கள் பாலியல் உறவை தவிர்க்க வேண்டும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
கர்ப்பமாக இருக்கும் போது, கரு உருவாகி இருப்பது உறுதி செய்யப்பட்ட நாள் முதல், பிரசவ நேரம் வரை பல விதமான சந்தேகங்கள் பலருக்கும் ஏற்படும். ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்ப கால அனுபவம் வெவ்வேறாக இருக்கும் ஒரு சிலர் எல்லா மாற்றங்களையும் எளிதாக ஏற்றுக் கொண்டு விடுவார்கள். மசக்கையோ, உடலில் ஏற்படும் மாற்றங்களோ பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தாமல் குழந்தை சுலபமாக பிறந்து விடும்.

ஒரு சிலருக்கு தீவிரமான மசக்கை முதல் எந்த உணவும் பிடிக்காமல் போவது வரை, உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை எதிர்கொள்வதில் சிக்கல் என்று பல விதமாக பாதிப்புகளை எதிர்கொள்வார்கள். இத்தகைய மாற்றத்தின் போது பல பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பாலியல் உறவில் ஈடுபாடு இருக்காது. பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். பல பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும் போது, பாலியல் உறவுக்கான உணர்வுகள் தோன்றும்.

கர்ப்பமாக இருக்கும் போதும், வழக்கம் போல பாலியல் உறவில் ஈடுபடலாம். ஆனால், பாலியல் உறவின் போது வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா அல்லது ஆபத்தாகிவிடுமா என்று சந்தேகங்கள் தோன்றும்? பெரும்பாலும் குழந்தைக்கு ஆபத்து ஏற்படாது!

கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.



வயிற்றில் வளரும் சிசுவுக்கு எந்த ஆபத்தும் இல்லை

பெரும்பாலும் கர்ப்பகாலத்தில் உடலுறவு வைத்துக்கொள்வது எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது, குறிப்பாக குழந்தைக்கு எந்த ஆபத்தும் உண்டாகாது. வயிற்றுக்குள் உள்ள கர்ப்பப்பைக்குள், கருப்பையின் சுவர்களால் சூழப்பட்டு, அம்னோடிக் சாக் என்ற பஞ்சு பொதி போன்ற நஞ்சுக்கொடிக்குள்ளே தான் குழந்தை வளர்ந்து வருகிறது. எனவே, குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதுமட்டுமில்லாமல் உங்களுடைய பிரசவ தேதி நெருங்கும் பொழுது மருத்துவர்களே பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். உடலுறவில் ஈடுபடும் போது அது உங்களுக்கு கருப்பை சுருங்கி விரிய உதவும் என்றும், இது சுக பிரசவத்திற்கு உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கர்ப்பிணி பெண்களை தாக்கும் குடல் அழற்சி நோய் : குழந்தையையும் பாதிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி

கர்ப்ப காலத்தில் பாலியல் உணர்வு (லிபிடோ)

கர்ப்பமாக இருக்கும் பொழுது பெண்களுக்கு பாலியல் உணர்வு தோன்றுமா என்பதொரு கேள்வியாக இருக்கிறது! பெண்களுக்கு, libido என்ற பாலியல் உணர்வு கர்ப்ப காலம் முழுவதும் வெவ்வேறு கட்டத்தில் வேறுபடும்.

கரு உருவாகி இருக்கிறது என்பதை உறுதி செய்த பிறகு முதல் மூன்று மாதங்கள் ஒரு பெண்ணின் உடல் பலவித மாறுதல்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கும். மசக்கை, காலையில் எழுந்தவுடன் தலை சுற்றுவது, சோர்வாக இருப்பது உள்ளிட்டவை முதல் மூன்று மாதங்களில் காணப்படும். எனவே, பாலியல் உணர்வு ஏற்படாது.



இரண்டாவது டிரைமஸ்டர் என்று கூறப்படும் நான்காவது மாதம் முதல் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜஸ்ட்ரோன் என்ற இரண்டு ஹார்மோன்களும் அதிக அளவில் சுரப்பதால் பெண்களுக்கு libido அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் உடல் முழுவதும் பெண்களுக்கான ரத்த ஓட்டமும் அதிகமாக இருப்பதால் பாலியல் உறவில் பெண்கள் அதிக ஈடுபாடு காட்டலாம்.

மூன்றாவது ட்ரைமஸ்டரில் குறிப்பிட்ட நிலைகளில் சௌகரியமாக பாலியல் உறவில் ஈடுபடுவது தான் வசதியாக இருக்குமே தவிர பெரும்பாலும் அசௌகரியமாகவே பெண்கள் உணர்வார்கள்.

தினமும் உடலுறவு கொண்டால் கரு நின்றுவிடுமா..? மருத்துவர் விளக்கம்...

 

எந்த நிலைகள் வசதியாக இருக்கின்றன?

மூன்றாவது ட்ரைமஸ்டரில், வயிறு பெரிதாக இருக்கும் மற்றும் குழந்தை வளரத் தொடங்கும். எனவே, வயிற்றின் மீது அழுத்தம் கொடுப்பது போன்ற நிலை வசதியாக இருக்காது. உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் எது வசதியாகவும் சரியாகவும் இருக்கும் என்பதைப் பேசி அதற்கேற்றார் போல பாலியல் உறவில் ஈடுபடலாம்.

உங்களுக்கு ஏதேனும் அசௌகரியமாக இருந்தாலோ அல்லது சந்தேகம் இருந்தாலோ உங்களுடைய மகப்பேறு மருத்துவமனை மருத்துவரை இதைப் பற்றி கலந்தாலோசிப்பது நல்லது.



கர்ப்பகாலத்தில் செக்ஸ் எவ்வளவு பயனுள்ளது..?

* உடலில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், பிறப்புறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால், பெண்களுக்கு ஆர்கஸம் எளிதாக அடைய முடியும்.

* ஆர்கசம், இயற்கையான வலிநிவாரணி மற்றும் ஹேப்பி ஹார்மோனான எண்டார்பின்சை உருவாக்குகிறது. இது கர்ப்பிணியை மகிழ்ச்சியாகவும், ரிலாக்சாகவும் வைக்க உதவும்.

* கர்ப்பகாலத்தில் செக்ஸ், உடலில் இருக்கும் IgA என்ற ஆன்டிபாடியை அதிகரிக்கிறது. இதனால் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும்.

* கர்ப்பகாலத்தில் பாலியல் உறவு கணவன் மனைவிக்குள் உள்ள உறவை பிணைப்பை வலுவாக்கி, நெருக்கத்தை அதிகரிக்கும்.



யாரெல்லாம் பாலியல் உறவை தவிர்க்க வேண்டும்

பிரசவ தேதிக்கு முன்கூட்டியே குழந்தை பிறந்து விடும் என்ற ஆபத்து இருப்பவர்கள் பாலியல் உறவை தவிர்க்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல் செக்ஸில் ஈடுபடும் போது ஏதேனும் வலியோ அல்லது அசவுகரியமோ ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

ஹை ரிஸ்க் பிரக்னன்ஸி என்று மருத்துவர்கள் கூறும் நிலையில் குழந்தை பிறக்கும் வரை பாலியல் உறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். ஸ்கேனில் குழந்தை இருக்கும் நிலை, பிளசண்டா இருக்கும் நிலையை பொறுத்து மருத்துவர்கள் அறிவுரையை பின்பற்றி பாலியல் உறவை தவிர்க்க வேண்டும்.

பாலியல் உறவில் ஈடுபட்ட பிறகு இரத்தப்போக்கு காணப்பட்டால் அல்லது தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும், பாலியல் உறவை தவிர்க்க வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy care, Sex

அடுத்த செய்தி