Covid-19 Vaccine Safe : கோவிட்-19 அறிகுறிகள் இருக்கும் போது தடுப்பூசி போட்டு கொள்ளலாமா? மருத்துவர்கள் விளக்கம்!

Covid-19 Vaccine Safe : கோவிட்-19 அறிகுறிகள் இருக்கும் போது தடுப்பூசி போட்டு கொள்ளலாமா? மருத்துவர்கள் விளக்கம்!

கொரோனா தடுப்பூசி

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், தடுப்பூசியை போட்டுக் கொள்வதே தற்போதய மருத்துவ நெருக்கடி நிலையை சமாளிக்க ஒரே வழி என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • Share this:
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவது தீ போல பரவி வரும் நிலையில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பரவிய வைரஸ் இந்த ஆண்டு உருமாறி இருப்பதாக சொல்லப்படுகிறது.

தடுப்பூசி போடும் பணிகள் ஒரு புறம் நடைப்பெற்றாலும், தொற்று பரவுதலை சமாளிக்க முடியாமல் பல மாநில அரசுகள் தவித்து வருகின்றன. அரசு மற்றும் மருத்துவர்கள் பின்பற்ற கூறியுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், தடுப்பூசியை போட்டுக் கொள்வதே தற்போதய மருத்துவ நெருக்கடி நிலையை சமாளிக்க ஒரே வழி என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதல் இதுவரை 12 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசி போடுவது குறித்து பலருக்கும் ஏராளமான சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதில் ஒன்று தான் கோவிட் -19 அறிகுறிகள் இருக்கும் போது தடுப்பூசி போடுவது பாதுகாப்பானதா? அறிகுறிகள் இருக்கும் போது 2வது டோஸ் தடுப்பு மருந்தை செலுத்தி கொண்டால் அது தடுப்பூசியின் செயல்திறனை பாதிக்குமா.? என்பதே.



இந்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள மருத்துவர்கள், ஒருவர் தடுப்பூசி போடும் முடிவில் இருக்கும் போது அவருக்கு லேசான கோவிட் -19 அறிகுறிகள் தெரிந்தால் கூட, ஊசி போட்டு கொள்ளும் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அப்போலோ ஹோம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மகேஷ் ஜோஷி, ஒருவர் கோவிட் -19 அறிகுறிகளை கொண்டிருந்தால் தடுப்பூசி போட்டு கொள்ளும் முடிவை அவர்கள் ஒத்திவைக்க வேண்டும் என்றார். ஒருவேளை முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு அவருக்கு கோவிட்-19 அறிகுறிகள் தென்பட்டால் தயக்கமில்லாமல் அடுத்த டோஸ் போட்டு கொள்ளலாமா என்ற கேள்விக்கு பதில் கூறிய அவர், இது ஒரு சிக்கலான கேள்வி.

Covid-19 vaccine safe : அதிக ஆபத்து கொண்ட அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம் - ஆய்வு

இதற்கு ஒரு குறிப்பிட்ட வழிகாட்டுதல் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் முதல் டோஸிற்கு பின் கோவிட்-19 அறிகுறிகள் தோன்றினால் 2-வது டோஸை குறிப்பிட்ட தேதியில் போட்டு கொள்வதை தவிர்த்து 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து, உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும் என்றார். தடுப்பூசி பயனாளிகள் லேசான கொரோனா அறிகுறிகளை கொண்டிருந்தால் கூட, தடுப்பு மருந்து பெறும் முடிவை ஒத்தி வைக்க வேண்டும் என்ற அதே கருத்தை மேக்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் துறை முதன்மை இயக்குநர் டாக்டர் விவேக் நங்கியாவும் சரி என்றே ஒப்பு கொண்டுள்ளார்.



இது குறித்து விரிவாக பேசிய அவர், தொடர்ச்சியான நோய் தொற்றின் முன்னிலையில் அறிகுறிகள் இருக்கும் போது தடுப்பூசி எடுத்து கொள்ளும் முடிவு ஆபத்தானதும் கூட. எனவே ஒரு சில அறிகுறிகள் இருக்கும் போது தடுப்பூசி போட்டு கொள்ள அவசரம் தேவையில்லை. உடலில் தோன்றியுள்ள அறிகுறிகள் மறையும் வரையோ அல்லது அறிகுறிகள் இருந்து பின் எடுக்கப்படும் டெஸ்டில் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தி கொள்ளும் வரையோ தடுப்பூசி எடுத்து கொள்ளும் திட்டத்தை ஒத்தி வைப்பது நல்லது என்று கூறியுள்ளார்.

ஒருவேளை முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் பெறும் முன் அறிகுறிகள் ஏற்பட்டால் பதற்றம் தேவை இல்லை. முதல் மற்றும் இரண்டாவது டோஸிற்கு இடையேயான இடைவெளி கூடினால் அது நல்லது. உடல் சிறந்த நோயெதிர்ப்பு பதிலை தரும். அதிகபட்சம் இரண்டாவது டோஸை 12 வாரங்கள் வரை லேட்டாக கூட போட்டு கொள்ளலாம் என்று ஆய்வு முடிவுகளை சுட்டிக்காட்டி குறிப்பிட்டுள்ளார்.

 

 
Published by:Sivaranjani E
First published: